27.7.11

காத்திருப்பின் தகிப்பு.

காலம் என்னை
கடந்து செல்கிறது...
காத்திருப்புக்களின் கனதிகளால்....!!!!
சேர்ந்து ஓட முடியாத
சோகத்தில் இப்போ -அதனை
வழியனுப்பி வழியனுப்பி
பெருமூச்சை மட்டும்
பெரிதாய் வெளித்தள்ள முடிகிறது...

சாதிக்க துணிகையில்
சோதிக்க நினைக்கிறது காலம்..
ஏதேதோ எண்ணி
எடுத்து வைக்கும் ஒரு அடியும்
ஏமாற்றங்களாகி விடுகிறது ..
படைப்பதும் எடுப்பதும்
கடவுள் செயல்
இடையில் நடப்பவைக்கு
நானல்ல பொறுப்பென்று
இறைவனும் ஒருபக்கம் -என
சில மனிதர் வாழ்க்கையில் ..

நீழ்கின்ற பகல்களின்
நிறுத்த முடியாத குழப்பங்கள்
நின்மதியற்ற சுவாசங்களாய்
அடைபட்டு தவிக்கிறது..

வருகின்ற இருளுக்காய் காத்திருந்து
வலுக்கட்டாயமான தூக்கத்தை
வாரி அணைத்தும்
சாமங்கள் முழுதும்
காண்கின்ற கனவுகளுக்கோ
கணக்கில்லை -அதனால்
விழிகள் இரண்டும்
ஒட்ட மறுக்கின்றது..
புரண்டு புரண்டு படுத்து
புண்பட்டு போவது
படுக்கையும்தான் !!
எல்லாமே எதிர்பார்ப்பின்
ஏவலே...

நாளை என்று
நினைப்பதெல்லாம்
நான்கு வருடங்களாகி விடுகிறது..
பூமியோ ஒரு சொட்டும்
பரிவின்றி சுழன்று கொண்டிருக்கிறது..

இரவுக்கும் பகலுக்கும்
இளைப்பாற நேரமிருக்கு -இந்த
இதயத்தின் துடிப்பிற்கு
இறந்த பின்பே..-அதனால்
இறுதி வரையும் ஏக்கத்தோடே
இயங்கிக் கொண்டிருக்கிறது..

எதிர் பார்ப்புகளின் மிச்சம்
ஏமாற்றமாகிப் போவதால்
நம்பிக்கையற்ற வாழ்வாய்
நலிந்து கொண்டிருக்கிறது -அதனால்
நிகழ்ந்த பின்னே
நடக்கும் வழியை
நினைத்துப் பார்க்கிறேன் ...
ஏமாற்றமற்று வாழ்வதற்கு !!!

செம்பகம்

30 comments:

  1. Arumaiyana Kavithai...
    Romba Nalla irukku.

    ReplyDelete
  2. எதிர் பார்ப்புகளின் மிச்சம்
    ஏமாற்றமாகிப் போவதால்
    நம்பிக்கையற்ற வாழ்வாய்
    நலிந்து கொண்டிருக்கிறது // அசத்தலான வரிகள்..

    ReplyDelete
  3. //இரவுக்கும் பகலுக்கும்
    இளைப்பாற நேரமிருக்கு -இந்த
    இதயத்தின் துடிப்பிற்கு
    இறந்த பின்பே.//

    தற்பொழுதுள்ள நிலையை சோகவலியுடன் பிரதிபலிக்கிறது.... கவிதை அழகான சோகம் மிகுந்து அற்புதமாய் தொகுத்துள்ளீர்கள்...

    ReplyDelete
  4. //சாதிக்க துணிகையில்
    சோதிக்க நினைக்கிறது காலம்..
    ஏதேதோ எண்ணி
    எடுத்து வைக்கும் ஒரு அடியும்
    ஏமாற்றங்களாகி விடுகிறது ..//

    அப்படியே வாழ்க்கையில் நடந்துக்கொண்டிருக்கிறது... இதற்கு விடிவு எப்பொழுது இறைவா... கவிதை மனதில் நிற்கிறது

    ReplyDelete
  5. //நிகழ்ந்த பின்னே
    நடக்கும் வழியை
    நினைத்துப் பார்க்கிறேன் ...
    ஏமாற்றமற்று வாழ்வதற்கு !!//
    ///அருமை கவிதை ...வாழ்க்கைக்கு தேவையான கருத்து //

    TODAYS TOPIC ,,,,IN MY BLOG
    கமலஹாசனுக்கு விஸ்வருபத்தால் வரப்போகும் நஷ்டம்

    ReplyDelete
  6. எண்ணங்களின் வலிகளை அழகாக பிரதிபலிக்கும் வரிகள்

    //நீழ்கின்ற பகல்களின்
    நிறுத்த முடியாத குழப்பங்கள்
    நின்மதியற்ற சுவாசங்களாய்
    அடைபட்டு தவிக்கிறது..//

    ReplyDelete
  7. ஏமாற்றமற்று வாழ்வதற்கு

    சில்லிட வைக்கும் சிந்தனைத் துளிகள்
    உங்கள் கவிதையெங்கும் தெளித்துக்கிடக்கின்றன

    அருமை அருமை.

    ReplyDelete
  8. காலம் ஒரு நாள் மாறும்,நம் கவலைகள் யாவும் தீரும்!
    கவிதை அருமை !

    ReplyDelete
  9. சாதிக்க துணிகையில்
    சோதிக்க நினைக்கிறது காலம்..
    ஏதேதோ எண்ணி
    எடுத்து வைக்கும் ஒரு அடியும்
    ஏமாற்றங்களாகி விடுகிறது ..

    பலமுறை

    எண்ணத்தின் பிரதிபலிப்பு

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  10. காத்திருப்பின் தகிப்பு
    கவிதையெங்கும் அனலாய் சுடுகிறது
    புரண்டு புரண்டு படுத்து
    புண்ணாகிப் போவது படுக்கையும்தான்..
    அருமையான சொற்சித்திரம்
    மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்
    அற்புதக் கவிதை

    ReplyDelete
  11. //இரவுக்கும் பகலுக்கும்
    இளைப்பாற நேரமிருக்கு -இந்த
    இதயத்தின் துடிப்பிற்கு
    இறந்த பின்பே..-அதனால்
    இறுதி வரையும் ஏக்கத்தோடே
    இயங்கிக் கொண்டிருக்கிறது..////

    இன்னலான வாழ்க்கையை
    இயல்பான வரிகளில்
    தந்தமைக்கு
    தங்க நன்றிகள்.

    ReplyDelete
  12. //இரவுக்கும் பகலுக்கும்
    இளைப்பாற நேரமிருக்கு -இந்த
    இதயத்தின் துடிப்பிற்கு
    இறந்த பின்பே..-அதனால்
    இறுதி வரையும் ஏக்கத்தோடே
    இயங்கிக் கொண்டிருக்கிறது..//

    சான்சே இல்லை. மிகமிக அருமையான வரிகள். அனைத்து வரிகளிலும் இ . மிக ரசித்தேன் சகோ

    ReplyDelete
  13. வலிநிறைந்த கவிதை வரிகளை
    அருமையாக வகுத்த உங்களுக்கு
    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
    சகோ .....

    ReplyDelete
  14. கலக்கிட்ட பாஸ்

    ReplyDelete
  15. விரக்தியும் வேதனையும்
    பரப்பியக் கவிதையால் உள்ளத்தே
    உசுப்பிய வார்த்தைகள் இங்கே
    உடைந்து வெளிப்பட்டதே - முட்டை
    ஓட்டை உடைத்து வந்தக் குஞ்சாய்...

    விடியலுக்கு இல்லை வெகு தூரம்
    விடிவெள்ளி முளைத்தாச்சு - இனி
    நொடிப் பொழுதும் நிற்க வேண்டாம்
    படிப் படியாய் முன்னேறி மிகவிரைந்தே
    வடித்திடுவாய் விரக்தி தனையே...

    தமிழ் விரும்பி.
    http://tamizhvirumbi.blogspot.com/

    ReplyDelete
  16. கவிதையில் சோகம் வரிக்கு வரி தெரிகிறது...
    நம்பிக்கையை கூட தகர்த்துவிடும் போலிருக்கிறதே...

    ஏமாற்றமற்று வாழ்வதற்கு எதிர்ப்பார்ப்புகளற்று வாழ பழகவேண்டுமோ என்று எண்ண வைக்கும் அளவுக்கு வரிகள் மிக மிக சிறப்பு செண்பகம்...

    வாழ்க்கையே ஒரு அட்வென்ச்சர் தானே... எல்லாமே ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு வெற்றியை நோக்கி அடி எடுத்து வைத்து கிடைத்தால் வெற்றி இல்லையேல் அனுபவப்பாடம் என்று நாட்களை நம்பிக்கையுடன் நகர்த்த என் அன்பு வாழ்த்துகள்....

    ReplyDelete
  17. நிகழ்ந்த பின்னே
    நடக்கும் வழியை
    நினைத்துப் பார்க்கிறேன் ...
    ஏமாற்றமற்று வாழ்வதற்கு !!! மீண்டும் எதிர்பார்ப்புகள் தொடரத்தான் செய்கின்றன. . .அருமையான கவிதை. . .

    ReplyDelete
  18. கவிதைக்கு 60 மார்க்

    பிளாக் லே அவுட்டுக்கு 80 மார்க்

    ReplyDelete
  19. nalla kavithai, manathai neruda vaikkira vatikal sakothatije.

    ReplyDelete
  20. நம்பிக்கைமேல் நம்பிக்கை வையுங்கள்... நாளைய உலகம் நமக்காகட்டும்...

    ReplyDelete
  21. சகோ!
    எதையும் எடுத்துக் காட்டி பாராட்ட
    விரும்பவில்லை, ஒரு வேளை ஏதேனும்
    பிடிக்காதது இருந்திருந்தால், எடுத்துச்
    சொல்லியிருப்பேன்
    மாதுளை முத்துக்களாக ஊட்டச்
    சத்துடன் முளைக்கும் வித்துக்க ளாக
    அனைத்தும் உள்ளன
    புலவர் சா இராமாநுசம்
    முடிச்சு கண்டு வாழ்த்துரைத்தீர் நன்றி!

    ReplyDelete
  22. kavidhai nallarukku!!!! Be happay :))

    ReplyDelete
  23. இன்று எனது வலைப்பதிவில்

    நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

    நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்

    http://maayaulagam-4u.blogspot.com

    ReplyDelete
  24. செண்பகம் மனம் சோர்ந்தீர்களானால் படுக்கையில் விழுத்திவிடும்.இன்னும் முடியும்.விழ விழ எழும்புவேன் என்று உறுதி கொள்ளுங்கள் தோழி !

    ReplyDelete
  25. இரவுக்கும் பகலுக்கும்
    இளைப்பாற நேரமிருக்கு -இந்த
    இதயத்தின் துடிப்பிற்கு
    இறந்த பின்பே.// words are shorp.

    My friend, my laptop OS was affected by w32blast virus.trying to remove it. so that delay for reply..now i am replying at net cafe...thanks for ur comments.

    ReplyDelete
  26. ''..நிகழ்ந்த பின்னே
    நடக்கும் வழியை
    நினைத்துப் பார்க்கிறேன் ...
    ஏமாற்றமற்று வாழ்வதற்கு !!!...''
    இது நல்லது... முயற்சி..முயற்சி.. வெற்றி தரும்....
    vetha.Elangathilakam
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  27. அருமை.. அருமை..
    காட்டான் குழ போட்டான்...

    ReplyDelete
  28. நாளை என்று
    நினைப்பதெல்லாம்
    நான்கு வருடங்களாகி விடுகிறது..
    பூமியோ ஒரு சொட்டும்
    பரிவின்றி சுழன்று கொண்டிருக்கிறது..//.அருமையான கவிதை. . .

    ReplyDelete
  29. நண்பர்கள் தின வாழ்த்துக்கள் சகோ..

    ReplyDelete