உறவுகளே இந்த வீடியோவைப் பாருங்கள்...
பார்த்த பின் கவிதையை வாசியுங்கள்....
இப்படி ஏராளமான சகோதர/சகோதரிகள்
மண்ணுக்காக போராடி அங்கங்களை இழந்து தவிக்கிறார்கள்...
அவர்களுக்காக எனது மன ஆதங்கத்தை பகிந்து கொள்கிறேன்....
மனிதம் எப்போதோ
மரத்துப் போனதால்
அணுவணுவாய்
மரித்துக்கொண்டிருக்கிறது -இவர்கள்.
ஆன்மா!!!
சகித்துக் கொள்ள
சக்தியோ........
சத்தியமாய் எனக்கில்லை,,,,,,,,
இரத்தக் கண்ணீரின்
இறுகிய கறையை போக்க
எந்த மனம் இவ்வுலகில்...
பத்திரமாய் பிரசவித்து
பொத்திப் பொத்தி
வளர்த்த கனவுகள்..
செத்துக் கிடக்கும்
பெற்றவரோடு!!!!
இனப்பசிக்காய்
இரை தேடிய இவர்கள்-இப்போ
நிர்கதியிழந்து- இவர்கள்
பசிபோக்க யாருமின்றி!!!!
கண்ணீரின் கதையாகி நிற்கிறது...
பட்ட காயங்கள்..
பறி கொடுத்த அங்கங்கள் ..
உதிர்ந்து போன வாழ்க்கை..
இழந்து போன உறவுகள்...
இத்தனையும் தாண்டி
முடிவின் நுனியை
முட்டும் வரை -இந்த
பூமியில் வாழும் வலியே
மிகக் கொடுமை !!!
மனிதனை மனிதன்
யாசிக்காததால்..
மனங்கள் வலிப்பதை
மனிதன் யோசிப்பதில்லை!!!!
உடலில் பட்ட - சிறு
காயங்களை காட்டி
ஒதுக்கிச்செல்லும்-இந்த
உலகில்!!!!
இரு கரம்...
இரு கால்
இரு கண்...
மொத்தமாய்ச்சொன்னால்
அங்கங்களையே பறி கொடுத்து
அங்கலாய்க்கும் உறவுகளின்
கதிதான் என்ன?
இவர்கள் எதிர்காலத்தை
கை நீட்டி தூக்க
எந்த கடவுள் கைகொடுக்கும்?
சிறகு உதிர்ந்து
புன்னகை இறந்து
வாழ்வின் இன்பங்கள்
முடிவுற்று நீழ்கிறது...!!!
சாவின் வாய்ப்புகள்
சற்றே விலகிப் போனதால்
சாகும் வரை
சகித்துக் கொள்ள
காலம் பணித்து
ஏறி மிதித்து நிற்கிறது...
ஈழம் அன்று கிடைத்திருந்தால்
பொன்னாடை போர்த்தி
புகழ்ந்திருப்பார்....
விடுதலையின் அடையாளங்களாக
வீர மிடுக்குடன் மிளிர்ந்திருப்பார்...
இன்று கண்ணீரை மட்டும்
பரிசாக கொடுத்து விட்டு
ஏக்கத்தோடு வரலாறும்
எட்டிப்பார்க்கிறது!!!!
நிறைவேறாத வேட்கையும்
நிறைந்து போன துயரமும்
நீழ்கின்ற தனிமையும்
நெடுத்துப் போய்
காய்ந்து போன சருகுகளாய்
உலர்ந்து கிடக்கிறது
இவர்கள் மனங்கள்!!!!
இறந்து கொண்டிருக்கும் இவர்களை
உயிர்ப்பித்து விடுங்கள் உறவுகளே
இருண்டு கிடக்கும் வாழ்வில்
ஒளியேற்ற வேண்டும்....!!!!!
செம்பகம்
கொடுமை செண்பகம்.வலிக்கிறது.அதுவும் ஒரு பெண்ணாய் அவர்களின் நிலையை உணர்ந்தால்...நான் இங்கு வந்த காலங்களில் நினைப்பதுண்டு எங்கள் நாட்டில் ஊனமுற்றவர்கள் எங்காவது ஒருவர் இருவர்தானென்று.இப்போ சார்வசாதாரணமாக அங்கங்களை இழந்தவர்கள் வாழும் நாடாகிவிட்டது எங்கள் தேசம் !
ReplyDeleteஎங்கள் வலி யாருக்கும் சொன்னாலும் புரியாது.
ReplyDeleteஎன்ன சொல்றது என்று தெரியவில்லை சகோ ....
ReplyDeleteமனம் நடுங்கச் செய்யும் காட்சிகள்
ReplyDeleteபாதிப்பிலிருந்து மீள வெகு நேரம் ஆனது
தெய்வங்கள் இன்று
ReplyDeleteஅங்கங்கள் இழந்து
புகழ் இழந்து போனதால்
மனிதனால் மறந்து
துன்பங்கள் கொண்டு
சோகங்கள் தாங்கி
தன்மாணம் மறந்து
உதவி கேட்க
வைத்துவிட்டான்
துப்பாக்கி ஏந்தி
சொந்த மண்ணை காக்கையில்
அக்காக்கள் என்றும்
அண்ணாக்கள் என்றும்
புகழோடு வாழ்த்தி
பொருளாக கொடுத்து
புன்னகைத்த மனிதன்
தெய்வங்கள் கூட
ReplyDeleteதப்பாக போனால்
மறந்திடுவான்
மனிதன்
வலிக்கும் பதிவு....
ReplyDeleteவலிக்குது நண்பா ((
ReplyDeleteமனிதனை மனிதன்
ReplyDeleteயாசிக்காததால்..
மனங்கள் வலிப்பதை
மனிதன் யோசிப்பதில்லை!!!!
மனிதம் எங்கே போனது????
சகோ..தமிழ் மணத்தில் உங்க பதிவை போடுவது பற்றிய உங்கள் கேள்விக்கு
பதில்:
சில இடையூறுகளால் தமிழ்மணத்தின் சேவை தற்காலிகமாக நிறுத்தப் பட்டிருக்கிறது.
விரைவில் சீர் பெற்று வருமென் அவர்கள் சொல்லியிருக்கின்றனர்.
என்று தணியும்
ReplyDeleteஇந்த வலியும் ரணமும்
காலம் கனியுமென
காத்திருப்போம்.
அன்பன்
மகேந்திரன்
சகோ/உதாரணத்திற்கு தமிழ்மணத்தில் எமது பதிவு வரவேண்டுமெனில் என்ன செய்ய வேண்டுமென்ற முறையை விளக்கமாக அடுத்த பதிவைத்தாங்களன்.....//its ur question..
ReplyDeleteஅன்பு நட்பே
ReplyDeleteஉங்களின் வலைத்தளத்தில்
பின்தொடருபவர்கள் களத்தில்
நுழைய முடியவில்லை
சரி செய்து பாருங்கள்.
சரியானதும் நிச்சயம் செர்ந்துவிடுகிறேன்.
உங்களின் எழுத்துக்கள்
என்னைக்கவர்ந்தது.
அன்பன்
மகேந்திரன்
மனம் கனக்க வைத்த பதிவு + காணொளி
ReplyDeleteமனதை கனக்க வைத்து விட்டாய் செம்பகம் இவர்களுக்கு நான் நிச்சயம் கடவுளை பிரார்த்திப்பேன்
ReplyDeleteநன்றி
ஜேகே
”காலம் ஒரு நாள் மாறும் - நம்
ReplyDeleteகவலைகள் எல்லாம் தீரும்!”
தற்போதைய சூழல் இந்திய நடுவணரசால் சலனமற்று இருப்பினும், ஆட்சி மாறுகையில் காட்சியும் மாறும் என நம்புவோம்! - நெல்லி. மூர்த்தி http://nellimoorthy.blogspot.com/
வலிகள் நிறைந்த வாழ்வு அது சொல்லும் துயரங்கள் தாங்கி வந்த கவிதை மனசு கனக்கிறது யாரால் இவர்களுக்கு நல்ல வழிகிடைக்கும் என எங்குகிறேன்!
ReplyDelete:( வரிக்கு வரி வலிகள் மட்டுமே நிறைந்த நீண்ட கவிதை :( கவிதை இல்லை ஈழம் கிடைக்கவில்லை, உயிர் சல்லிக்காசாகி போனது, :( உறவுகளை இழந்து உடைமைகளை இழந்து வீடு வாசல் இழந்து இறுதியில் கற்பையும் இழந்து உடல் உறுப்புகளையும் இழந்து சரித்திரமே வெட்கி தலை குனியும் மனிதம் மறந்த மிருகங்களின் செயல்களால் இன்று கேள்விக்குறியான மனங்களின் நிலை :( கண்ணீர் வருவதை தடுக்கமுடியவில்லை.. :( உள்ளம் துடிப்பதை தடுக்க இயலவில்லை செண்பகம்...
ReplyDeleteவரிகள் ஒவ்வென்றும் வலிகள் நிறைந்த உணர்வுகள்...
ReplyDeleteபடிக்கும்போது மனது கனக்கிறது...
This comment has been removed by the author.
ReplyDeleteவலிகள் நிறைந்தக் கவிதை..
ReplyDeleteஹேமா said...
ReplyDeleteகொடுமை செண்பகம்.வலிக்கிறது.அதுவும் ஒரு பெண்ணாய் அவர்களின் நிலையை உணர்ந்தால்...நான் இங்கு வந்த காலங்களில் நினைப்பதுண்டு எங்கள் நாட்டில் ஊனமுற்றவர்கள் எங்காவது ஒருவர் இருவர்தானென்று.இப்போ சார்வசாதாரணமாக அங்கங்களை இழந்தவர்கள் வாழும் நாடாகிவிட்டது எங்கள் தேசம் !
!!!!ஹேமாஅக்கா உங்க வரவிற்கும் கருத்திற்கும் நன்றிகள்
Rathi said...
ReplyDeleteஎங்கள் வலி யாருக்கும் சொன்னாலும் புரியாது.
!!!உண்மையாத்தான் நண்பி....
உங்க வரவிற்கும் கருத்திற்கும் நன்றிகள்
ரியாஸ் அஹமது said...
ReplyDeleteஎன்ன சொல்றது என்று தெரியவில்லை சகோ ....
உங்க வரவிற்கும் கருத்திற்கும் நன்றிகள்!!!
Ramani said...
ReplyDeleteமனம் நடுங்கச் செய்யும் காட்சிகள்
பாதிப்பிலிருந்து மீள வெகு நேரம் ஆனது!!!
இப்படி எத்தனையோ இருக்கு,,,,,
உங்க வரவிற்கும் கருத்திற்கும் நன்றிகள்!!
கவி அழகன் said...
ReplyDeleteதெய்வங்கள் கூட
தப்பாக போனால்
மறந்திடுவான்
மனிதன்...
கவியழகா இவர்கள் தப்பாய் போகலையே...
உங்கள் அன்பான கருத்து நிறைந்த பின்னூட்டத்திற்கு வாழ்த்துக்கள்...
அரசன் said...
ReplyDeleteவலிக்கும் பதிவு....
உங்க வரவிற்கும் கருத்திற்கும் நன்றிகள்!
கந்தசாமி. said...
ReplyDeleteவலிக்குது நண்பா ((
ஆமாம் வலிக்கத்தான் செய்யும் சகோ...
உங்க வரவிற்கும் கருத்திற்கும் நன்றிகள்!
குணசேகரன்... said...
ReplyDeleteமனிதனை மனிதன்
யாசிக்காததால்..
மனங்கள் வலிப்பதை
மனிதன் யோசிப்பதில்லை!!!!
மனிதம் எங்கே போனது????
சகோ..தமிழ் மணத்தில் உங்க பதிவை போடுவது பற்றிய உங்கள் கேள்விக்கு
பதில்:
சில இடையூறுகளால் தமிழ்மணத்தின் சேவை தற்காலிகமாக நிறுத்தப் பட்டிருக்கிறது.
விரைவில் சீர் பெற்று வருமென் அவர்கள் சொல்லியிருக்கின்றனர்.
சகோ..உங்கள் உதவிக்கு நன்றிகள்....
உங்க வரவிற்கும் கருத்திற்கும் நன்றிகள்!
மகேந்திரன் said...
ReplyDeleteஎன்று தணியும்
இந்த வலியும் ரணமும்
காலம் கனியுமென
காத்திருப்போம்.
அன்பன்
மகேந்திரன்
மகேந்திரன் said...
அன்பு நட்பே
உங்களின் வலைத்தளத்தில்
பின்தொடருபவர்கள் களத்தில்
நுழைய முடியவில்லை
சரி செய்து பாருங்கள்.
சரியானதும் நிச்சயம் செர்ந்துவிடுகிறேன்.
உங்களின் எழுத்துக்கள்
என்னைக்கவர்ந்தது.
அன்பன்
மகேந்திரன்
!!!!உறவே உங்கள் புதிய வருகைக்கும் ஊக்கத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...
சில வேளைகளில் அப்படித்தன் இருக்கு என்னவென்று புரியவில்லை..
இப்ப சரியாய் இருக்கு,,,,
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteமனம் கனக்க வைத்த பதிவு + காணொளி..
!!!!உறவே உங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...
இன்றைய கவிதை said...
ReplyDeleteமனதை கனக்க வைத்து விட்டாய் செம்பகம் இவர்களுக்கு நான் நிச்சயம் கடவுளை பிரார்த்திப்பேன்
நன்றி
ஜேகே
!!!!உறவே உங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...
உங்கள் பிராத்தனைக்கு நன்றிகள்...
Moorthy said...
ReplyDelete”காலம் ஒரு நாள் மாறும் - நம்
கவலைகள் எல்லாம் தீரும்!”
தற்போதைய சூழல் இந்திய நடுவணரசால் சலனமற்று இருப்பினும், ஆட்சி மாறுகையில் காட்சியும் மாறும் என நம்புவோம்! - நெல்லி. மூர்த்தி http://nellimoorthy.blogspot.com/
எவரைத்தான் நம்புவது சகோ..
உங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...
Nesan said...
ReplyDeleteவலிகள் நிறைந்த வாழ்வு அது சொல்லும் துயரங்கள் தாங்கி வந்த கவிதை மனசு கனக்கிறது யாரால் இவர்களுக்கு நல்ல வழிகிடைக்கும் என எங்குகிறேன்!
இவர்களின் வறுமையை ஒளிக்க எம்மால்த்தான் முடியும் சகோ...
உங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...
மஞ்சுபாஷிணி said...
ReplyDelete:( வரிக்கு வரி வலிகள் மட்டுமே நிறைந்த நீண்ட கவிதை :( கவிதை இல்லை ஈழம் கிடைக்கவில்லை, உயிர் சல்லிக்காசாகி போனது, :( உறவுகளை இழந்து உடைமைகளை இழந்து வீடு வாசல் இழந்து இறுதியில் கற்பையும் இழந்து உடல் உறுப்புகளையும் இழந்து சரித்திரமே வெட்கி தலை குனியும் மனிதம் மறந்த மிருகங்களின் செயல்களால் இன்று கேள்விக்குறியான மனங்களின் நிலை :( கண்ணீர் வருவதை தடுக்கமுடியவில்லை.. :( உள்ளம் துடிப்பதை தடுக்க இயலவில்லை செண்பகம்...
உங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...
மாணவன் said...
ReplyDeleteவரிகள் ஒவ்வென்றும் வலிகள் நிறைந்த உணர்வுகள்...
படிக்கும்போது மனது கனக்கிறது...
உங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் ,ஊக்கத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...
* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteவலிகள் நிறைந்தக் கவிதை..
உங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் ,ஊக்கத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...
என் வார்த்தைகள் வலுவிழந்து போகின்றன
ReplyDeleteகண்ணீர் துடைக்க விரல்கள் கூட இன்றி தவியா தவிக்கும் எம்மின சகோதரிகளை காக்க வழி இன்றி
செத்த சவமாக நான்
வெறென்ன சொல்ல சகோதரி
மனம் கனத்துப்போனது
Very painful kavithaiVery painful kavithai
ReplyDeleteகுருடனாய் ஏனோ பிறக்கவில்லை-இந்த
ReplyDeleteகொடுமையைக் கண்டும் இறக்கவில்லை
வருடம் இரட்டுக்குமேலே ஆயினவே-இவர்
வாழவும் வழியின்றி போயினவே
உள்ளம் வலிக்குது செண்பகமே -இந்த
உலகம் காணட்டு்ம் செண்பகமே
அல்லல் பட்டே அழுகின்றார்-மூன்று
அபலைகள் கண்ணீர் பொழிகின்றார்
துடைக்க பத்து விரலில்லை-கண்ணீர்
துடைக்க ஒற்றை கையில்லை
நடக்க ஒற்றை காலில்லை -எந்த
நாட்டுக்கும் உலகில் கண்ணில்லை
இன்னும் எழுதிட நினைக்கின்றேன்-என்
இருவிழி நீரில் நனைகின்றேன்
மன்னும் இறைவா தொழுகின்றேன்-ஈழ
மக்களை எண்ணி அழுகின்றேன்
புலவர் சா இராமாநுசம்
மனம் கனக்கிறது. சில சமயங்களில் இந்த பிரபஞ்சத்தின் மேலும் பிரபஞ்சத்தை இயக்கும் சக்தியின் மேலும் இனம் தெரியாத கோபம் கூட வருகிறது சகோ. நம்ஈழத்தமிழ் சகோதர சகோதரிகளின் உறவுகளை இழந்த வாழ்க்கை மனதைச் சுடுகிறது.
ReplyDeleteவலிமிகுந்த நாட்களை எண்ணி இன்னும் கண்ணீர் சிந்த ஜீவன் மிச்சம் இருக்கிறது நண்பரே/
ReplyDeleteமனம் கனக்கச் செய்யும் பதிவு.வலி நிறைந்த கவிதை வரிகள்.
ReplyDeleteஎங்கள் சகோதிரிகள் சிந்திய ஒவ்வொரு ரத்தத் துளியிலும் புதுப் புது வீரன் முளைக்கும் காலம் வெகு தூரம் இல்லை என நம்புவோம்..
ReplyDeleteகனத்த இதயத்தோடு...
வேண்டும் மீண்டும் ஒரு ஸ்ரீராம அவதாரம்.
நாடு இல்லை, வீடு இல்லை,
நம்பிக்கைத்தர நல்லோர்
யாரேனும் இல்லை
வாழ்(ழ)வில்லை, வழியும் இல்லை
மரத்துப்போன மனத்திற்கு
மறதி என்னும் மருந்தும் இல்லை
கனத்த இதயம், கலங்கிய கண்கள்
சொல்ல வார்த்தையில்லா,
ஊமையாகிறேன்?....
பரமனுக்கும் அடுக்குமோ,
இந்த பயங்கரக் கொடுமை?
ஓ.... நீதி தேவனே! எங்கே போனாய்?
மானுடம் மறித்துப்போனது,
மனிதநேயம் மண்ணுக்குள் போனது.
அத்தனையும் போனபின்னும்,
ஏன்? இன்னும்
எங்கள் உயிர் மட்டும்
போகவில்லை?
எங்கள் கூக்குரல் தரும் அவலம்
உனக்கும் கேட்கவில்லையா? - இல்லை
எங்கள் மக்களோடு நீயும் வீழ்ந்தாயோ?
உன்னை அழைத்து ஒன்றும் ஆகா
படைத்தவன் எங்கே அவனையே
அழைக்கிறேன்
இறைவா!
பொறுத்தது போதும்
பொறையே வெடித்து சிதறுமுன்
பூமிக்கு இறங்கி வா!
இல்லையாயின்...
சத்தியம் ஜெயிக்க, சமதர்மம் நிலைக்க
மீண்டும் இங்கே...
ஸ்ரீராமன் அவதரிக்கட்டும்!!.
- தமிழ் விரும்பி
http://tamizhvirumbi.blogspot.com/
வலியுடன் கூடிய வரிகள்...
ReplyDeleteவெறும் வார்த்தையால் சொல்ல முடியாத.... கொடுமையல்லவா... இந்த உலகில் மனித நேயம் என்பது துளிகூட இல்லையா.... உலகமே அல்லவா வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது...
இறைவா நீயுமா வேடிக்கைப் பார்க்கிறாய்....
rajeshnedveera
///சாவின் வாய்ப்புகள்
ReplyDeleteசற்றே விலகிப் போனதால்
சாகும் வரை
சகித்துக் கொள்ள
காலம் பணித்து
ஏறி மிதித்து நிற்கிறது...///
ரொம்ப வலிக்கச் செய்த வரிகள்....
கண் கலங்கவும் கோபப்படவும் தான் என்னால் முடிகிறது...வேறு என்ன செய்ய சகோ?
ReplyDelete"இதுவும் கடந்து போகும்" என்ற நம்பிக்கை தான் இப்பொழுது தேவை.
A.R.ராஜகோபாலன் said...சொன்னது
ReplyDeleteஎன் வார்த்தைகள் வலுவிழந்து போகின்றன
கண்ணீர் துடைக்க விரல்கள் கூட இன்றி தவியா தவிக்கும் எம்மின சகோதரிகளை காக்க வழி இன்றி
செத்த சவமாக நான்
வெறென்ன சொல்ல சகோதரி
மனம் கனத்துப்போனது\
என்ன பிந்திட்டீங்க...
உங்கள் கருத்திற்கும் வரவிற்கும் எனது நன்றிகள்...
"என் ராஜபாட்டை"- ராஜா said...சொன்னது
ReplyDeleteVery painful kavithaiVery painful kavithai..\
வேலை முடித்து கொடுத்தாச்சா சகோ/
உங்கள் கருத்திற்கும் வரவிற்கும் எனது நன்றிகள்...
புலவர் சா இராமாநுசம் said...
ReplyDeleteகுருடனாய் ஏனோ பிறக்கவில்லை-இந்த
கொடுமையைக் கண்டும் இறக்கவில்லை
வருடம் இரட்டுக்குமேலே ஆயினவே-இவர்
வாழவும் வழியின்றி போயினவே
உள்ளம் வலிக்குது செண்பகமே -இந்த
உலகம் காணட்டு்ம் செண்பகமே
அல்லல் பட்டே அழுகின்றார்-மூன்று
அபலைகள் கண்ணீர் பொழிகின்றார்
துடைக்க பத்து விரலில்லை-கண்ணீர்
துடைக்க ஒற்றை கையில்லை
நடக்க ஒற்றை காலில்லை -எந்த
நாட்டுக்கும் உலகில் கண்ணில்லை
இன்னும் எழுதிட நினைக்கின்றேன்-என்
இருவிழி நீரில் நனைகின்றேன்
மன்னும் இறைவா தொழுகின்றேன்-ஈழ
மக்களை எண்ணி அழுகின்றேன்
புலவர் சா இராமாநுசம்
July 13, 2011 6:47 PM
ஐயா உங்கள் மனக்கொதிப்பை கவிதை வழியே நீட்டிற்கு விதைத்து விட்டீர்கள்...
அருமையான வரிகள் ....
உங்கள் பின்னூட்டத்திற்கும், வரவிற்கும் எனது நன்றிகள்...
கடம்பவன குயில் said...சொன்னது
ReplyDeleteமனம் கனக்கிறது. சில சமயங்களில் இந்த பிரபஞ்சத்தின் மேலும் பிரபஞ்சத்தை இயக்கும் சக்தியின் மேலும் இனம் தெரியாத கோபம் கூட வருகிறது சகோ. நம்ஈழத்தமிழ் சகோதர சகோதரிகளின் உறவுகளை இழந்த வாழ்க்கை மனதைச் சுடுகிறது.
உங்கள் கருத்திற்கும் வரவிற்கும் எனது நன்றிகள்...
விமலன் said...சொன்னது...
ReplyDeleteவலிமிகுந்த நாட்களை எண்ணி இன்னும் கண்ணீர் சிந்த ஜீவன் மிச்சம் இருக்கிறது நண்பரே/
உண்மைதான் சகோ/
உங்கள் கருத்திற்கும் வரவிற்கும் எனது நன்றிகள்...
சென்னை பித்தன் said...சொன்னது...
ReplyDeleteமனம் கனக்கச் செய்யும் பதிவு.வலி நிறைந்த கவிதை வரிகள்.
என்ன ஐயா இரண்டு வரியில் போய் விட்டீங்க,,,
உங்கள் கருத்திற்கும் வரவிற்கும் எனது நன்றிகள்...
தமிழ் விரும்பி said..சொன்னது...
ReplyDeleteஎங்கள் சகோதிரிகள் சிந்திய ஒவ்வொரு ரத்தத் துளியிலும் புதுப் புது வீரன் முளைக்கும் காலம் வெகு தூரம் இல்லை என நம்புவோம்..
கனத்த இதயத்தோடு...
வேண்டும் மீண்டும் ஒரு ஸ்ரீராம அவதாரம்.
நாடு இல்லை, வீடு இல்லை,
நம்பிக்கைத்தர நல்லோர்
யாரேனும் இல்லை
வாழ்(ழ)வில்லை, வழியும் இல்லை
மரத்துப்போன மனத்திற்கு
மறதி என்னும் மருந்தும் இல்லை
கனத்த இதயம், கலங்கிய கண்கள்
சொல்ல வார்த்தையில்லா,
ஊமையாகிறேன்?....
பரமனுக்கும் அடுக்குமோ,
இந்த பயங்கரக் கொடுமை?
ஓ.... நீதி தேவனே! எங்கே போனாய்?
மானுடம் மறித்துப்போனது,
மனிதநேயம் மண்ணுக்குள் போனது.
அத்தனையும் போனபின்னும்,
ஏன்? இன்னும்
எங்கள் உயிர் மட்டும்
போகவில்லை?
எங்கள் கூக்குரல் தரும் அவலம்
உனக்கும் கேட்கவில்லையா? - இல்லை
எங்கள் மக்களோடு நீயும் வீழ்ந்தாயோ?
உன்னை அழைத்து ஒன்றும் ஆகா
படைத்தவன் எங்கே அவனையே
அழைக்கிறேன்
இறைவா!
பொறுத்தது போதும்
பொறையே வெடித்து சிதறுமுன்
பூமிக்கு இறங்கி வா!
இல்லையாயின்...
சத்தியம் ஜெயிக்க, சமதர்மம் நிலைக்க
மீண்டும் இங்கே...
ஸ்ரீராமன் அவதரிக்கட்டும்!!.
- தமிழ் விரும்பி
சகோ /உங்கள் மனக்கொதிப்பை கவிதை வழியே நீட்டிற்கு விதைத்து விட்டீர்கள்...
அருமையான வரிகள்
உங்கள் கருத்திற்கும் முதல்வரவிற்கும் எனது நன்றிகள்...
மாய உலகம் said...
ReplyDeleteவலியுடன் கூடிய வரிகள்...
வெறும் வார்த்தையால் சொல்ல முடியாத.... கொடுமையல்லவா... இந்த உலகில் மனித நேயம் என்பது துளிகூட இல்லையா.... உலகமே அல்லவா வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது...
இறைவா நீயுமா வேடிக்கைப் பார்க்கிறாய்....
rajeshnedveera
சகோ /அவருக்கு எப்போதோ கண் மங்கிப்போச்சு எங்கள் விடயத்தில்,,,,,,,
உங்கள் கருத்திற்கும் முதல்வரவிற்கும் எனது நன்றிகள்...
FOOD said...சொன்னது..
ReplyDeleteஈழத்தின் வலிகள் இன்னும் என் நெஞ்சினில் சுடுகிறது... ,,,
உங்கள் கருத்திற்கும் முதல்வரவிற்கும் எனது நன்றிகள்...
Mohamed Faaique said....சொன்னது,,,,
ReplyDelete///சாவின் வாய்ப்புகள்
சற்றே விலகிப் போனதால்
சாகும் வரை
சகித்துக் கொள்ள
காலம் பணித்து
ஏறி மிதித்து நிற்கிறது...///
ரொம்ப வலிக்கச் செய்த வரிகள்....
உங்கள் கருத்திற்கும் வரவிற்கும் எனது நன்றிகள்...
R.Puratchimani said...சொன்னது,,.
ReplyDeleteகண் கலங்கவும் கோபப்படவும் தான் என்னால் முடிகிறது...வேறு என்ன செய்ய சகோ?
"இதுவும் கடந்து போகும்" என்ற நம்பிக்கை தான் இப்பொழுது தேவை.
எப்படி அப்படி நினைத்துவிட முடியும் சகோ../?
உங்கள் கருத்திற்கும் முதல்வரவிற்கும் எனது நன்றிகள்...
vargi said...ற்கு ஓர் அன்பான வேண்டுகோள் !!!!!எங்கிருந்தாலும் காரியாலயத்திற்கு வந்து பினூட்டமிட்டுச்செல்லுமாறு வேண்டிக்கொள்கிறேன்.
ReplyDeleteஅன்புடன்
உரிமையாளர்,
ஹிஹிஹி..........
கண்ணீர் முட்டுகிறது...
ReplyDeleteதமிழ் ஈழத்திட்கு துரோகம் செய்த அனைவருக்கும் தண்டனை நிச்சயம்... ஏற்கனவே ஒருவருக்கு கிடைத்தாகிவிட்டது...
ReplyDeleteகாணொளி கொடூர காட்சிகள்.... நெஞ்சு பொறுக்குதில்லையே.....
ReplyDeleteஅன்புள்ள தோழமைக்கு,
ReplyDeleteவணக்கம்.
உங்கள் வலைப்பக்கத்தில் என் பாதம் பதிப்பதில் மிக்க மகிழ்ச்சி...
வலிகளின் வேதனை படுவோருக்கு மட்டும்தான் தெரியும்... இருந்தாலும் அதனை அனைவரும் உணரும் வண்ணம் வார்த்தையில் உணர்வுகளை அழகாக படம்பிடித்து காட்டியுள்ளீர்கள்... படிக்கின்ற போதே காட்சிகள் கண்ணுக்குள் வந்துபோகின்றன... உறவுகளை, உடல் அங்கங்களை இழந்து தவிக்கும் ஒவ்வொரு உயிருக்கும் என்ன பதில் சொல்ல முடியும் என்று மனதுக்குள் வினாக்கள் மட்டும் புகுந்துகொண்டு...
நாளை ஈழம் மலரலாம்...மலரும்...கண்டிப்பாக...
ஆனால் இந்தநிலைக்கு ஆளாகிய உறவுகளின் கதி... சிந்திக்க, செயல்பட என்ன செய்வதென்று புரியாமல் குழப்பங்கள் மட்டுமே... இவர்களுடைய வாழ்க்கை ஒளிபெற என்ன செய்ய வேண்டும்.. எப்படி பிரகாசிக்க செய்யமுடியும் என்று யோசிக்க வைத்துகொண்டு... இறைவன் ஏதாவது வழி கொடுப்பான்.. வலி துடைப்பான் என்ற உணர்வோடு நானும் ஒருவனாய்...
கல்லறையாய் மாறிய இடங்கள் விரைவில் கருவறையாய் மாறட்டும்... இன்பங்கள் எங்கும் பாய்ந்து ஓடட்டும்... துயரங்கள் யாவும் பகலவனை கண்டபோல் பனிப்போல் மறையட்டும்...உறவுகள் எங்கும் செழிக்கட்டும்... மனிதம் எங்கும் வாழட்டும்...
// சகித்துக் கொள்ள
ReplyDeleteசக்தியோ........
சத்தியமாய் எனக்கில்லை,,,,,//
உங்களுக்கு மட்டுமல்ல. எங்களுக்கும்தான். நல்லது நடக்கும் எனக் காத்திருப்போம்.
வணக்கம் சகோ செம்பகம்,
ReplyDeleteகொஞ்சம் வேலையாக இருக்கிறேன், கண்டிப்பாக இன்று இரவு உங்கள் வலைக்கு வருகிறேன்.
பதறவைக்கும் வரிகள்..
ReplyDeleteகாணொளியை காணும் மனதைரியம் எனக்கில்லை.. மன்னிச்சுக்கோங்க.
நண்பரே
ReplyDeleteமனசு வலிக்குது உடல் நடுங்குகிறது என்று ஒரு வார்ததையில் சொல்லி கடந்து சேல்ல முடியவில்லை நண்பரே உண்மையில் விவரிக்க முடியாத மன உளைச்சலை ஏற்ப்படுத்துகிறது அதைவிட அவர்களின் ஒருவனாக அல்லது அவர்களின் சொந்த சகோதரனாக நின்று யோசித்தால் கண்கள் தானாக உடைகின்றது.
மகிழ்வாய் உங்கள் பதிவிற்கு வந்தேன் . காணொளி கண்டதும் ,கவிதை வரி தெரியவில்லை கண்களில் நீர் , மனம் கனமானது.என்ன சொல்வது சகோதரி , தொண்டையில் ஏதோவொரு பந்து வந்து அடைத்து கொள்கிறது .மனம் பாரமாய் செல்கிறேன் சகோ .
ReplyDeleteவலிகளில் விழிகளை கரைய வைத்த பதிவு
ReplyDeletekavithi vatikalil em uravukalin enraiya vaalkkaiyai kaankiren,entha vaalkkaiyai ninaiththu naan kalankiya kalankal................
ReplyDeleteவலி நிறைந்த ப்கிர்வு.
ReplyDeleteஉறவுகளே இந்த வீடியோவைப் பாருங்கள்...
ReplyDeleteபார்த்த பின் கவிதையை வாசியுங்கள்....//
ம்....ம்...
இவர்களை நேரில் கண்ட பின்னர் நானும் ஒரு கவிதையினைப் எழுதியிருந்தேன். முன்னாள் போராளிகளின் கண்ணீர் கதை...எனும் தொனியில்.
என்ன செய்ய, காலம் காலன் வடிவில் எம் கைகளைக் கட்டி, இன்னோர் சந்ததியின் வேர்களை சிறுகச் சிறுக அறுத்துக் கொண்டிருக்கிறது.
கவிதை....மணி முடி தரித்து, வெற்றித் தேரில் ஏற்றி வலம் வர வேண்டியவர்கள்- இன்று கவனிப்பாரற்று இருப்பதைச் சொல்லி நிற்கிறது.
ReplyDeleteஇந்த நிலை மாறி, இவர்கள் வாழ்வில் விடியல் தோன்ற யாராவது உதவ முன் வரமாட்டார்களா என அவர்களுக்காக மனம் ஏங்குகிறது.