முதன் முதலாய் பாடிய
முதற்கவிதையே அம்மா
உனை வரிக்க
வடிவெடுத்த வார்த்தைகளோ
வரிசைகளாய்...........
சுமையோடு சுமந்து
சுமை தாங்கியானாய்..
பத்து மாதம் தான் -எனை
பத்திரமாய் சுமந்தாய் அல்ல ,,,
இப்போதும்,,,-என்
சுமைதாங்கும் தூண்தானே
நீ அம்மா..
உன்.........
கற்பனைக் கருவறையுள்
கருத்தரித்த கனவுகளோ
கடலைப்போல் என்றாய்
அத்தனையும் .......
நடந்ததும் நடக்காததுமாய்...
நகர்கிறது உன் ஏக்கம்...
வாழ்க்கையோடு காலம்
வலிந்திளுக்கும் யுத்தத்தில்
வலிமையோடு வாழ
வழிகள் பல
கற்றுத் தந்தாய்..
வாழ்கிறேன் என்றாலும்
முடியவில்லை என்னால்..
உதைத்து உதைத்து
உருண்டு புரண்டு -உன்
உயிர் வாங்கிய போதும்
உனக்கு வலி எடுத்திருக்கும்-ஆனால்,,,
ஈரைந்து மாதமும்
உவகையோடுதானே காத்திருந்தாய் -அதனால்
உனை உதறிச்செல்ல
உளம் மாற்றிய
சூழல்கள்... அத்தனையும்
தூக்கி எறிந்தேன்..
ஏனெனில் நீ
உடைந்து போவாய் என்பதற்காய் !!!
உன் கரம் பற்றி வாழ்கின்றேன்...
விலகி வந்த போது
விதியென்று நினைத்தேன்..
பிரிவு எம்மை
பிரித்து வைத்தாலும்
அதை வெல்ல
பாதைகள் தேடுகிறேன்..
காத்திருப்பாயா எனக்காய்!!!
ஏற்றங்களில் ஏறும் போது
பெருமையடைந்தேன் உன் பிள்ளையென்று..
வாழ்க்கை வலித்த போது
வாய்விட்டு கேட்டேன்...
ஏன் என்னை பெற்றாய் என்று!!!
சிரித்த முகத்துடன்
தந்தாய் வரைவிலக்கணம்..
தோல்வியும் துன்பமும்
தோளின் மேல் குந்திய போதும்
முதுகில் தடவும்
முதல் மனிதமும் நீதானே,,,
அன்னையே நீ
அருகிலில்லாத தனிமை
வெறுமையான ஒன்றாய்
வெறுத்துக்கிடக்கிறது...
எட்ட நின்றிடினும்
தொட்டுவிடு ...உன்
நுனி விரல் தீண்டும் ஸ்பரிசம்
அதுவே போதும்..
அதிக பிரியம் இருப்பதாலோ-உன்
அருகில் வாழ வரமற்றேன்...
அதிசயப்பிறவியே,,,
அற்புதமான அப்பாவை கைப்பிடித்து
அருமையான உடன் பிறப்புக்களை
பரிசளித்தாய்...
நன்றி சொல்ல
வார்த்தைகளோ என்னிடம் இல்லை ...
சேந்து வாழ முடியாததால்
சோர்ந்து போகவில்லை-ஏனெனில்
மறுபடியும் உன் கருவறையுள்
எனை அணைத்துக்கொள்வாய்.....
நித்தமும் உன்
நிழலோடு வாழ்வதற்கு,,,
செம்பகம்
உறவுகளே! நான் தற்போது இன்ரனெற் வசதியற்ற இடத்தில் இருப்பதால் உங்கள் வலைப்பக்கம் வரமுடியவில்லை.
கிடைத்தவுடன் உங்கள் பக்கம் வருவேன்..
அம்மா என்றால் அன்பு..
ReplyDeleteஅனைத்தையும் துறந்த
பட்டினத்தாரும் தாய் அன்பை துறக்காது
அவளது இறுதிக்காலம் வரை ஊரை விட்டு
வெளியேறாமல் இருந்தார் என்று காண்கிறோம்.
அம்மா..
வார்தைகளால் சொல்ல முடியாது..
பகிர்வுக்கு நன்றி..
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ - பக்கமும் வாருங்களேன்.
நன்றி..
//அதிக பிரியம் இருப்பதாலோ-உன்
ReplyDeleteஅருகில் வாழ வரமற்றேன்...//
மனதை கவர்ந்த வரிகள்
வாழ்த்துக்கள் சகோ
அருமையான கவிதை சகோதரா...
ReplyDeleteஅம்மாவின் அருகாமையை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
'பரிவை' சே.குமார்.
அருமையான கவிதை சகோதரா...
ReplyDeleteஅம்மாவின் அருகாமையை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
//தோல்வியும் துன்பமும்
ReplyDeleteதோளின் மேல் குந்திய போதும்
முதுகில் தடவும்
முதல் மனிதமும் நீதானே,,,//
அருமையான கவிதை வரிகள் .
தாயில்லாமல் தானே எவரும் வருவதில்லை
ReplyDeleteஆயினும் தாயின் சிறப்பு குறித்து பெருமை குறித்து
எத்தனை பேரால் இத்தனை அழகாக
சொல்லிப்போக முடிகிறது
மீண்டும் மீண்டும் படித்து
கவிதையின் நயத்தில் சொக்கிப்போனேன்
தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
கவிதை அருமை வாழ்த்துக்கள்
ReplyDeleteதப்பாக போனது என்பதன் கருத்து
சிற்பங்கள் செய்யும் போது தப்பாக போனால் கை கால் குறை வந்தால் மதிப்பில்லை என்று சொல்ல வந்தேன்
தவறாக எண்ணவேண்டாம்
//தோல்வியும் துன்பமும்
ReplyDeleteதோளின் மேல் குந்திய போதும்
முதுகில் தடவும்
முதல் மனிதமும் நீதானே,,,///
இதை படிக்கும் போது என்னை அறியமல் தொண்டை அடைத்து கண்ணீர் கசிந்தது.
அம்மா மிகவும் பலவீனப்படுத்தும் வார்த்தை.
அம்மா..
ReplyDeleteஅற்புதமான காவிதை..
அருமை நண்பரே..
அம்மம்மா!
ReplyDeleteஅம்மா பற்றிய
அருமையான
கவிதையம்மா!
வாழ்த்துக்கள்.
பாராட்டுக்கள்.
அனைத்திலும் பொய் இருக்கும் ,அம்மாவின் அன்பை தவிர .
ReplyDeleteஅம்மாவின் அன்பு
பிரதி பலன் எதிர்பாராதது
பிறப்பிலிருந்து இறப்பு வரை நமக்கு ஒரே போல் அன்பு தருவது அம்மா
எவ்வளவு உயர்ந்தாலும் நாம் என்றுமே அம்மாவுக்கு குழந்தையே .
ஈரைந்து மாதங்கள் நம்மை சுமந்தவளை நாம் கடைசிவரை நெஞ்சில் சுமக்க கடமைப்பட்டுள்ளோம் .
நன்றி சகோ
கவிதை-கனத்தல் மனதில்!!
ReplyDelete"உனை
ReplyDeleteஉதறிச்செல்ல
உளம் மாற்றிய
சூழல்கள்... அத்தனையும்
தூக்கி எறிந்தேன்..
ஏனெனில் நீ
உடைந்து போவாய் என்பதற்காய் !!!
உன் கரம் பற்றி வாழ்கின்றேன்..."
அற்புதமான வரிகள்.... வாழ்த்துக்கள் நண்பரே!
முந்தித் தவம்கிடந்து முன்னூறு நாள்சுமந்து
ReplyDeleteஅந்தி பகலாய்ச் சிவனை ஆதரித்து
தொந்தி சரிய பெற்றவள் தாய்
அவள் புகழ் பாடிய உங்களைப்
பாராட்டுகிறேன்
புலவர் சா இராமாநுசம்
தாயின் பாசத்தை நிறைவாய் வரிகளில் வடித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமையான வரிகள்...
ReplyDeleteஅம்மா என்னும் உலக பொதுமறை சொல்லுக்கே தனி அன்பு என்றும் உண்டு...
வாழ்கிறேன் என்றாலும்
ReplyDeleteமுடியவில்லை என்னால்..
வரிகள் அல்ல வேதனையான வலிகள்.....
உணர்வுபூர்வமான உன்னத கவிதை .... வாழ்த்துக்கள் சகோ...
//சேந்து வாழ முடியாததால்
ReplyDeleteசோர்ந்து போகவில்லை-ஏனெனில்
மறுபடியும் உன் கருவறையுள்
எனை அணைத்துக்கொள்வாய்.....
நித்தமும் உன்
நிழலோடு வாழ்வதற்கு,,,//
அம்மாவைப்பார்க்கும் போது சோகத்தோடுக்கூடிய பாசம் நினைவுக்கு வருகிறது....
அம்மாவின் பாசத்துக்கு நான் கண்ணீரே பரிசாய் பதிலுக்கு.........
அன்பு நட்பே விடிவெள்ளி
ReplyDeleteஅருமையான காவியம் படைத்திருக்கிறீர்கள்.
அம்மா..
என்ற சொல்லே ஒரு இதிகாசம் தான்
எத்துனை எத்துனை உறவுகள்
நம்மை சுற்றி வரினும்
அம்மாவுக்கு நிகர் வேறு எதுவும் இல்லை
அம்மா ஒரு ஆகமம்
அம்மாவைக் கைப்பிடித்தபடிதானே எங்கள் வாழ்க்கை.அற்புதமாய் உணர்வுகளை வெளிக்காட்டியிருக்கிறீர்கள் செண்பகம் !
ReplyDelete//தோல்வியும் துன்பமும்
ReplyDeleteதோளின் மேல் குந்திய போதும்
முதுகில் தடவும்
முதல் மனிதமும் நீதானே,,,//
அழகான வரிகளுடனான கவிதை அருமை..
தாய்மையை எத்தனை சிறப்பித்து எழுதினாலும் திகட்டுவதே இல்லை, படிக்க சலிப்பதே இல்லை... எழுத களைப்பதும் இல்லை..... சுமக்க தாய் களைக்காதபோதும் வயோதிகத்திலும் மகனின் பசியை அறிந்து சாப்பிட்டியாப்பா என்று கேட்கும் அன்பிலும் மனம் மட்டுமல்ல நம்மையே கரைத்துவிடும் அன்பு தான் தாயின் அன்பு... தன்னலமற்ற தாயின் அன்பை வரி வரியாய் சிலாகித்து எழுதிய வரிகளாய் தாய்மை கவிதை சிறப்பு... அன்பு வாழ்த்துகல் செண்பகம்.
ReplyDeleteஅம்மாவுக்கான அழகிய சமர்ப்பணம்!
ReplyDelete//சேர்ந்து வாழமுடியாததால்
ReplyDeleteசோர்ந்துபோகவில்லை//
அருமையான வரிகள்.அற்புதமான கவிதை! தொடரட்டும் உங்களது கவிதைகள்.
தோல்வியும் துன்பமும்
ReplyDeleteதோளின் மேல் குந்திய போதும்
முதுகில் தடவும்
முதல் மனிதமும் நீதானே,,,amma...amma....
Have you received my email about your request
http://kovaikkavi.wordpress.com
Nice
ReplyDelete