22.7.11

அடங்காத கொதிப்பு....



















மூச்சுவரை வந்த சுவாசம்
முழுதாய் முடங்கிப்போகிறது
தொண்டைக் குழியோடே..!!!!!
உள்ளக் கொதிப்பால்
உடலோ பற்றியெரிகிறது..

தமிழர் வல்லமையின்
தடம் பதித்த
முத்தான வெளியில்
மூதேவி ஒன்று
தாண்டவம் ஆடியதாம்..!!!
எங்கள் உயிர்களின்
எச்சங்கூட மிச்சமில்லாமல்
உறிஞ்சிக் குடித்த
பிணந்தின்னி கழுகு..
பிச்சை கேட்கிறதாம்..

கும்பிடக் கும்பிட
கொன்று குவித்தவர்..
உயிரோடு கருகிப்போக
குண்டுமழை பொழிந்தவர்...
நச்சு வாயுக்களால்-எங்கள்
மூச்சையே நின்றிடச்செய்தவர்..
சந்ததியே இல்லாமல்
கூண்டோடு அழித்தவர்..
பெற்றவரைத் தின்று
அனாதை பட்டத்தை கொடுத்தவர்..
அழகான பிறப்புக்களை
அங்கவீனர் ஆக்கிய
அட்டூழியக்காரன்...
வரலாறுகள் வாழ்ந்த
வீடுகளை கிண்டி கிழறியவர்..-இப்போ
எங்கள் கோட்டையில்
ஏறி நின்று
என்னையா கேட்கிறீர்???














அவரை வரவேற்க
அறுபத்தெட்டு நம்மவர் !!
ஏனோ போயினர்??
இதுவரைக்கும் புரியவில்லை..

ஐயாவை பார்க்க ஒரு பகுதி..
நடக்கும் நாடகத்தை
விடுப்புப் பார்க்க ஒரு பிரிவு..
வற்புறுத்தலின் அச்சத்தில்
சில பாவிகள்..
எதுவுமே அறியாதவர் ஒரு கூட்டம்..
இப்படியே குவிந்திருக்கும்..
சில கூட்டம்..
அப்படி இருக்கலாமோ???
இது என் சிந்தனை


எங்கள் கடவுள்கள்
எப்போதோ தொலைந்து போனார்கள்..
தொலைபேசி எடுத்தாலும்
தொடர்பு கொள்வார்களோ
அதுவும் சந்தேகம் தான்...

முத்த வெளியிலேயே ஐயாவுக்கு
மூச்சுத்திணறல் வந்திருக்கக் கூடாதோ?
நீதி இறந்து போனதால்
இவர்கள் நீடுழிகாலமும்
வாழ்வார்கள் போல்...
அக்கிரமங்கள் கட்டவிழ்க்க கட்டவிழ்க்க
ஆயுளும் அதிகரிக்குமோ ??
ஐயங்களோ அடுக்கடுக்காய் மனதில்
ஐயாவை நினைக்கையில்..

காலம் பதில் சொல்லுமென
காத்திருந்து களைத்தாச்சு..
கண்ணீரை மட்டும்
வழியவிட்டு
கண்ணீர் வற்றியது தான் மிச்சம்..
நடந்ததாய் எதுவுமில்லை..
படுகொலையின் நாயகனுக்கு
பாடையில் ஏற்றுவது எப்போதோ?
மண்கூட இவர் உடலை
உக்கி எடுக்க மறுக்கும்..
அப்படியான மனிதர்க்குத்தான்
இப்படி வாழ்க்கை..
வந்த பெருமூச்சை மட்டும்
பெரிதாய் விட்டு காத்திருப்போம் ..
என்ன செய்ய !!!!!

செம்பகம்

18 comments:

  1. //தமிழர் வல்லமையின்
    தடம் பதித்த
    முத்தான வெளியில்
    மூதேவி ஒன்று
    தாண்டவம் ஆடியதாம்..!!!
    எங்கள் உயிர்களின்
    எச்சங்கூட மிச்சமில்லாமல்
    உறிஞ்சிக் குடித்த
    பிணந்தின்னி கழுகு..
    பிச்சை கேட்கிறதாம்..//
    //வந்த பெருமூச்சை மட்டும்
    பெரிதாய் விட்டு காத்திருப்போம் ..
    என்ன செய்ய !!!!//

    நல் நூல்களில் அனைத்தும் தர்மம் தானே ஜெயிக்கிறது ...நிஜத்தில் மட்டும் ஏன் இப்படி

    ReplyDelete
  2. வருத்தமும், விரக்தியும், சுடும் நிஜமும் கவிதையில்.

    ReplyDelete
  3. //
    படுகொலையின் நாயகனுக்கு
    பாடையில் ஏற்றுவது எப்போதோ?
    //

    விரைவில் நடக்கும் நண்பா

    ReplyDelete
  4. வலிமிகுந்த கவிதை

    ReplyDelete
  5. மனிதராய் இருந்தால்
    கொஞ்சமேனும் நெஞ்சம்
    உறுத்தியிருக்கும்!!
    தலையில் மலம்
    சுமப்பவர்கள் அல்லவா?!!
    அதுதான் நடந்ததை
    மறந்துவிட்டு இங்கே
    பிச்சை கேட்கிறார்கள்.

    மானங்கெட்ட செயல்....

    காலத்தை புரட்டிபோட்ட
    சம்பவங்கள் நடந்த பூமி இது
    நடக்கும்
    நடக்கும்
    நாளைய சம்பவம்....

    ReplyDelete
  6. இதைத் திமிர்த்தனத்தின் உச்சம் எனச் சொல்லலாம்
    ஆற்றாது அழுத கண்ணீர் செல்வம் மட்டுமா உடைக்கும்
    இதுபோன்ற பிணம் தின்னி நாய்களின்
    திமிரையும் உடைக்கும்
    கொடுமைகளை நினைவுறுத்திப்போகும் பதிவு

    ReplyDelete
  7. //நீதி இறந்து போனதால்
    இவர்கள் நீடுழிகாலமும்
    வாழ்வார்கள் போல்...//
    வலி நிறைந்த வார்த்தைகள்!நீதி நிச்சயம் சாகாது நண்பரே!நம்புவோம்.

    ReplyDelete
  8. ///மண்கூட இவர் உடலை
    உக்கி எடுக்க மறுக்கும்..
    அப்படியான மனிதர்க்குத்தான்
    இப்படி வாழ்க்கை..
    வந்த பெருமூச்சை மட்டும்
    பெரிதாய் விட்டு காத்திருப்போம் ..
    என்ன செய்ய !!!!!/////

    வலியை
    வலிமையான
    மொழியின்
    வழியே சொல்லிய கவிதை

    வளமான
    வாழ்வை
    இழந்தவரின்
    இன்னலை
    மின்னலாய் வெளியிட்ட கவிதை

    மனம் வலித்தது - ஈழ அவலம்
    காதில் ஒலித்தது.

    ReplyDelete
  9. அக்கிரமங்கள் கட்டவிழ்க்க கட்டவிழ்க்க
    ஆயுளும் அதிகரிக்குமோ ??. . . தெய்வம் நின்று கொள்ளும். . .பார்க்கலாம். . .

    ReplyDelete
  10. வை.கோபாலகிருஷ்ணன் said...சொன்னது..
    தங்கள் வருத்தமும் வேதனையும் நன்கு புரிகிறது.
    நாங்களும் தங்களின் உணர்வுகளில் பங்கேற்கிறோம்.


    //வந்த பெருமூச்சை மட்டும்
    பெரிதாய் விட்டு காத்திருப்போம் ..
    என்ன செய்ய !!!!!//

    காலம் ஒரு நாள் மாறும்.
    அதுவரை காத்திருப்போம்..

    ReplyDelete
  11. //எங்கள் கடவுள்கள்
    எப்போதோ தொலைந்து போனார்கள்..//
    ஈழ அவலம்

    ReplyDelete
  12. வேதனை வார்தைகள் வடிவாகும்-விடி

    வெள்ளி முளைக்க விடிவாகும்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. இறந்த மக்களின் சாபம் நிச்சயம் ஏதாவது செய்யும்..
    dont worry my dear friend..

    ReplyDelete
  14. கவலை வேண்டாம் செண்பகம்.இன்றைய தேர்தல் செய்தி மனதிற்குச் சந்தோஷம்தானே.இந்த ஹிட்லரின் கோட்டைக்குள் இருந்தபடியே நம் சொந்தங்கள் தங்களுக்கு என்ன தேவை என்பதை உணர்த்தியிருக்கிறார்கள்தானே.எனவே பொறுத்திருப்போம் சகோதரி !

    ReplyDelete
  15. //நீதி இறந்து போனதால்
    இவர்கள் நீடுழிகாலமும்
    வாழ்வார்கள் போல்...//

    வேதனையின் உச்சக்கட்டம் .. வார்த்தைகளாக வெளிப்படுகின்றது

    ReplyDelete