9.8.11

எதற்கோ தெரியவில்லை..?அபிவிருத்திகளோ உச்ச வேகத்தில்
நடந்தேறிய வண்ணம் .-ஆனால்
அடிவைக்கும் இடமெல்லாம்
கையில் பேணியுடன்
அங்குமிங்குமாய்..

இருக்கும் அறையைவிட்டு
வெளிப்புறமாய் கால் வைத்தால்- மனம்
வலிக்காமல் திரும்பியதில்லை
ஒரு நாளும்...

ஏராளம் கேள்விகளோடு
அந்தரிக்கும் மனதை
அடக்க முடியாமல்
சிந்தித்துக்கொண்டே
பஸ் தரிப்பிடத்தை
தவற விட்டதுமுண்டு..

தோல் சுருங்கி
தொண்டைக்குழி உள்விழுந்து
சுவாசிக்கக் கூட
சக்தியற்ற நிலையில்
முதியவர்கள்...

பச்சிளம் குழந்தையை
பக்கத்தில் சரித்துவிட்டு
கிழிசல் உடைகளோடு
பெண் ஜீவன்கள்...

அங்கங்களை இழந்து
இயங்காத குறையோடு
பார்க்கவே முடியாத
பரிதாப நிலையோடு
பலர்..

கண்ணில்லை..
காலில்லை..
கையில்லை...
ஆனால் பாடுவதற்கு
குரல் இனிமை..
கௌரவக் கையேந்தல்கள்
ஒரு பக்கமாய்..

மன நோயால் பாதிப்படைந்து
மனம் போன போக்கோடு
பல மனித உலாவல்கள்..

இப்படி இப்படியாய்
அங்கும் இங்குமாய்
விதைக்கப்பட்டு கிடக்கிறது
மனிதப்பிறப்புக்கள்..

ஓயாத போர் நடந்த
நம் நாட்டில்
இதே நிலையில்-எம்
மக்கள் எவரையும் கண்டதில்லை
எம் கண்கள்...
எல்லாமே!!
எங்கள் சூரியதேவனால்
கட்டி அமைக்கப்பட்ட
அதிசய வழிப்படுத்தல்...
திட்டமிடல்கள்...
உடலை சிலிர்க்கத்தான் செய்கிறது..
நிரந்தர நாடொன்றாய்
தமிழீழம் கிடைத்திருந்தால்
வியக்கும் வழியில்
நாடு மிளிர்ந்திருக்கும்...-அதற்கு
சந்தேகம் ஏதுமில்லை...


மனம் வலித்தாலும் -அதில்
ஓர் பெருமை எனக்குள்ளே-பின்னர்
அடுக்கடுக்கான பெருமூச்சுடன்
எங்கெல்லாம் போகும் நினைவுகள்...
கட்டிவைத்துக் கொள்கிறேன்
பத்திரமாய் இதயத்துள்....


பாதைகளை நோக்கியபடி!!!!செம்பகம்

43 comments:

 1. நிரந்தர நாடொன்றாய்
  தமிழீழம் கிடைத்திருந்தால்
  வியக்கும் வழியில்
  நாடு மிளிர்ந்திருக்கும்...-அதற்கு
  சந்தேகம் ஏதுமில்லை...

  எங்கெல்லாம் போகும் நினைவுகள்...
  கட்டிவைத்துக் கொள்கிறேன்
  பத்திரமாய் இதயத்துள்....


  பாதைகளை நோக்கியபடி!!!
  !
  இழப்புகள் ஆயிரம் இருப்பினும்
  நம்பிக்கையோடு தொடரும் நம் பயணம்
  நிச்சயம் இலக்கு கொண்டு சேர்க்கும்
  தரமான தன்னம்பிக்கையூட்டும் பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. //நிரந்தர நாடொன்றாய்
  தமிழீழம் கிடைத்திருந்தால்
  வியக்கும் வழியில்
  நாடு மிளிர்ந்திருக்கும்...-அதற்கு
  சந்தேகம் ஏதுமில்லை...//

  தன்னம்பிக்கையூட்டும் பதிவு.

  ReplyDelete
 3. என்ன சொல்லி பாராட்டுவது என்றே தெரியவில்லை..
  அருமையான வரிகள்..
  அசத்தல் காவிதி...

  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 4. வேதனையாக இருக்கிறது.

  ReplyDelete
 5. //நிரந்தர நாடொன்றாய்
  தமிழீழம் கிடைத்திருந்தால்
  வியக்கும் வழியில்
  நாடு மிளிர்ந்திருக்கும்.//

  கண்டிப்பாக நிரந்தர நாடாக தமிழீழம் கிடைக்கும் சகோ...மனம் வலித்தாலும் ஒரு நாள் மகிழ்ச்சியில் செழிக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம் சகோ.

  ReplyDelete
 6. வலிகள் மிகுந்த கவிதை அருமை...

  ReplyDelete
 7. தன்னம்பிக்கையுடன் காணும் கனவு பலிக்காமல் போனதாய் வரலாறு கிடையாது.

  //நிரந்தர நாடொன்றாய்
  தமிழீழம் கிடைத்திருந்தால்
  வியக்கும் வழியில்
  நாடு மிளிர்ந்திருக்கும்...-அதற்கு
  சந்தேகம் ஏதுமில்லை...//

  இது வரலாறு படைக்கப்போகும் கனவு.
  நிச்சயமாக சந்தேகமில்லை.

  ReplyDelete
 8. ஓயாத போர் நடந்த
  நம் நாட்டில்
  இதே நிலையில்-எம்
  மக்கள் எவரையும் கண்டதில்லை
  எம் கண்கள்...
  எல்லாமே!!//நிரந்தர நாடாக தமிழீழம் கிடைக்கும் நிச்சயமாக சந்தேகமில்லை.

  ReplyDelete
 9. வேதனைகளை அதீத கற்பனைகள் கொண்டும் மறைக்கலாம். உண்மை உரைக்கும் கவிதை.

  ReplyDelete
 10. வலி மிகுந்த கவிதை

  ReplyDelete
 11. நண்பரே உங்கள் தமிழ் அருமை ...
  எந்த வரியை சுட்டி காட்டுவது
  அத்தனையும் நெஞ்சை சுட்டதே !

  ReplyDelete
 12. அருமையான தமிழ் சகோ ! !

  ReplyDelete
 13. இயலா மனிதப் படைப்புகள் பற்றிய
  அழகுக்கவிதை.
  மனம் கனக்கும் கவிதை.

  ReplyDelete
 14. //கட்டிவைத்துக் கொள்கிறேன்
  பத்திரமாய் இதயத்துள்....

  பாதைகளை நோக்கியபடி!!!!//

  காலம் ஒரு நாள் மாறும்.
  கவலைகள் யாவும் தீரும்.

  நம்பிக்கையுடன் இருங்கள்.
  நல்லதே நடக்கும்.

  அன்புடன் vgk

  ReplyDelete
 15. கண்ணில் காணும் வேதனைகள் மாறும் சகோதரி
  விரைவில் மாறும் .கண்ட கனவும் நிறைவேறும் .
  நம்புவோம் .

  ReplyDelete
 16. நம்பிக்கை மனதில் தேக்கிக்கொண்டு வலிகளை கூட வலிமையாக்கிக்கொள்ள இதோ உங்கள் கவிதை வரிகளிடம் தான் கற்கவேண்டும் செண்பகம்... ஆம் உண்மையே... தமிழீழம் அன்றே கிடைத்திருந்தால் பொன்னாய் மின்னியிருந்திருக்கும்... ஆனால் தளர்ந்துவிடவில்லை.. இழக்க இனி ஒன்றுமில்லை என்றாலும் ஹிம்சையோ அஹிம்சையோ சாத்வீகமோ போராட்டமோ உயிர் மூச்சு இறுதியாய் நிற்கும் வரை தொடர்ந்துக்கொண்டே இருக்கும் நம்பிக்கை மனதில் தேக்கிக்கொண்டு வலியை வலிமையாக்க மருந்தாய் உட்கொண்டு.....

  அருமையான நம்பிக்கை தெறிக்கிறது ஒவ்வொரு வரிகளிலும் செண்பகம்.... நானும் காத்திருக்கிறேன் ஈழம் மலரும் சுதந்திர சுவாசம் சுவாசிக்கும் நம் மக்களின் நம்பிக்கை மெய்க்கும் என்றே....

  அன்பு வாழ்த்துகள் செண்பகம்...

  ReplyDelete
 17. வலிகள் நிறைந்த கவி வரிகள் ...

  ReplyDelete
 18. கண்ணில்லை..
  காலில்லை..
  கையில்லை...
  ஆனால் பாடுவதற்கு
  குரல் இனிமை..
  கௌரவக் கையேந்தல்கள்
  ஒரு பக்கமாய்..


  ...very sad to know that.

  ReplyDelete
 19. //கட்டிவைத்துக் கொள்கிறேன்
  பத்திரமாய் இதயத்துள்....
  பாதைகளை நோக்கியபடி!!!!//

  நம்பிக்கைதான் வாழ்க்கை. நல்லது நடக்குமென நம்புவோம்.

  ReplyDelete
 20. //நிரந்தர நாடொன்றாய்
  தமிழீழம் கிடைத்திருந்தால்
  வியக்கும் வழியில்
  நாடு மிளிர்ந்திருக்கும்...-அதற்கு
  சந்தேகம் ஏதுமில்லை//

  ஒருநாள் அந்தத் திருநாள் வரும்!வரும்!

  ReplyDelete
 21. வலிகள் மிகுந்த கவிதை அருமை...

  ReplyDelete
 22. வலிகளில் தான் வைராக்கியம் பிறக்கும் ..
  முன்னோக்கி செல்வோம் வெற்றி காண்போம்

  ReplyDelete
 23. ''....இப்படியாய்
  அங்கும் இங்குமாய்
  விதைக்கப்பட்டு கிடக்கிறது
  மனிதப்பிறப்புக்கள்..''

  வேதனை தான் சகோதரா!...
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 24. நிச்சயம் வலி தீரும் நாள் வெகு கிட்டத்தில்! நம்புவோம்! நடக்கும்!

  ReplyDelete
 25. ஈழக்காட்சிகளை கண்முன் கொண்டுநிறுத்தும் அருமையான கவிதை. வாழ்த்துக்கள் நண்பா.

  ReplyDelete
 26. மன வலிக்கிறது தோழி.எத்தனை கனவுகளை எம் கண்ணில் சுமந்தபடி அந்த சூரிய வெளிச்சத்தில் நம்பிக்கை வைத்திருந்தோம்.என்றாலும் சோர்வு வேண்டாம்.வெளிச்சம் தந்த சூரியன் காட்டிய வழியில் நிச்சயம் தொடர்வோம் செண்பகம் !

  ReplyDelete
 27. அருமையான கவிதை. ஆனால் எனக்கு ஒரே ஒரு வருத்தம். தயவு செய்து திரட்டிகளின் ஓட்டு பட்டைகளை உங்கள் பதிவுகளில் இணைக்கவும். படித்து விட்டு ஓட்டு போடாமல் போவதற்கு என் மனம் ஒப்புக்கொள்ள மாட்டேங்குது.

  ReplyDelete
 28. பச்சிளம் குழந்தையை
  பக்கத்தில் சரித்துவிட்டு
  கிழிசல் உடைகளோடு
  பெண் ஜீவன்கள்...//
  யதார்த்தம் ..
  வாழ்க்கை நிலை..
  வரிகள் சில இடங்களில்
  சுடுகிறது.

  ReplyDelete
 29. வேதனையை உண்டாக்கும் வரிகளின் மூலம் நிகழ்ந்தவற்றின் நிரந்தர வலியை உணர்ந்து கொள்ள முடிகிறது. யாராலும் பகிர்ந்து கொள்ள முடியாத மரண வேதனை அது.

  ReplyDelete
 30. //தயவு செய்து திரட்டிகளின் ஓட்டு பட்டைகளை உங்கள் பதிவுகளில் இணைக்கவும். படித்து விட்டு ஓட்டு போடாமல் போவதற்கு என் மனம் ஒப்புக்கொள்ள மாட்டேங்குது.//

  உண்மைதான்...

  ReplyDelete
 31. நடக்கும்... என்றேனும் ஒருநாள் நடக்கும்

  ReplyDelete
 32. வலி தரும் வரிகள்

  ReplyDelete
 33. நெஞ்சைக் கனக்க வைக்கும் வார்த்தைகள்.

  ReplyDelete
 34. ""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளுடன்..

  அனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..

  (உங்களுக்கு சொல்வது பொருத்தமில்லை என்று நினைக்க வேண்டாம் சகோ)

  ReplyDelete
 35. விரைவில் தமிழ் ஈழ சுதந்திரதின விழா வாழ்த்து என பகிரும் நாள் வரட்டும்..

  ReplyDelete
 36. valththukkal. kavithai very nice.

  ReplyDelete
 37. ஓயாத போர் நடந்த
  நம் நாட்டில்
  இதே நிலையில்-எம்
  மக்கள் எவரையும் கண்டதில்லை
  எம் கண்கள்...
  எல்லாமே!!
  எங்கள் சூரியதேவனால்//விரைவில் தமிழ் ஈழம்

  ReplyDelete
 38. வந்தேன்.... அதே இடுகை உள்ளது. வாழ்த்துகள் சகோதரா!
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 39. வலிகள் மனத்தை உலுக்குகிக்றன.

  ReplyDelete
 40. வலி நிறைந்த வரிகள்...

  ReplyDelete
 41. எனது அன்பான உறவுகளே உங்கள் பின்னூட்டத்திற்கும்,வருகைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..

  ReplyDelete