27.8.11

வாழ்க நீ பல்லாண்டு..


உடன் பிறவா சகோதரியே
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!!!!


27.08.2011








இனிய !!!
காலம் உன் 
கரம் பற்றி
அதிஸ்டங்களை உன்மீது
அள்ளிச் சொரிந்து
வாழ்க்கை முழுதும் 
வனப்பு வீசிட................

சோகங்கள் ஒளிந்து
சோலை வனமாக-உன் 
மனமெல்லாம் சந்தோசிக்க............

ஏற்றங்களில் அடிவைத்து -நல்
மாற்றங்கள் நீ காண.....

ஏக்கங்கள் எல்லாமே
எளிதாய் கைசேர..........

தாக்கங்கள் முழுதாய்
தகர்த்தே நீ ஒதுக்கிட.........


நாளும் நலமுடன்
நீடூழி நீ வாழ்ந்திட
மலர்கின்றபொழுதெல்லாம்
மகிழ்வோடு நீயிருக்க............

புலர்கின்ற புதிய அகவையில்
வாழ்க வாழ்கவென!!!!
ஒருகொடியில் பூத்த
இருமலரான உன் சோதரியையும்
வாழ்த்துகின்றேன் இந் நாளிலே...





அன்புடன் ..
செம்பகம்

22 comments:

  1. உங்களின் உடன்பிறவா சகோதரிக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ. வாழ்வின் அனைத்து வளங்களும் அதிர்ஷ்டமும் பெற்று அவர்கள் மகிழ்வுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  2. உடன்பிறவா சகோதரிக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    பல்லாண்டு வாழியவென
    வாழ்த்தி, எல்லா நலமும் பெற்றிட இறைவனை இறைஞ்சுகிறேன்.

    ReplyDelete
  3. அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் சகோ!

    ReplyDelete
  4. உங்கள் உடன் பிறவா சகோதரிக்கு எங்களுடைய வாழ்த்துக்களும்
    உரித்தாகட்டும்....

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  6. சகோதரிக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. உங்கள் அன்புறவிற்கு எனது அன்பானவாழ்த்துக்களும் உரித்தாகட்டும்!

    ReplyDelete
  8. நாளும் நலமுடன்
    நீடூழி நீ வாழ்ந்திட
    மலர்கின்றபொழுதெல்லாம்
    மகிழ்வோடு நீயிருக்க............
    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  9. தங்களது உடன் பிறவா சகோதரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அவர்கள் வாழ்வில் எல்லா வளமும் ,நலமும் பெற்றிட இறைவனை பிரார்த்திக்கிறேன் சகோதரி

    ReplyDelete
  10. சகோதரிக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. வாழ்த்துக்கவி மிக மிக அருமை செண்பகம்...

    என்னுடைய மனம் நிறைந்த அன்பு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சகோதரிக்கு....

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. என்னுடைய வாழ்த்துக்களும்..
    வணக்கங்களும்..

    ReplyDelete
  14. Hi my dear "MANY MANY HAPPY RETURN'S OF THE DAY".

    ReplyDelete
  15. என்னுடைய வாழ்த்துக்களும்...
    வணக்கங்களும்...

    ReplyDelete
  16. பிறந்த நாள் காணும் நம் அன்பு சகோதரிக்கு அன்பு வாழ்த்துக்கள் .... வாழ்த்து கவிதை கலக்குது சகோ

    ReplyDelete
  17. என்னுடைய வாழ்த்துக்களும். கவிதை நல்லா இருக்கு.

    ReplyDelete
  18. சகோதரிக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. !!!அன்பு உறவுகளே உங்கள் உளம் கனிந்த வாழ்த்துக்கள் என்றென்றும் சோதரிகளை
    ஆசீர்வதிக்கட்டும்....சோதரிகளை சந்தோசிக்க வைத்த உங்கள் வாழ்த்துகளுக்கும்,வருகைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..

    !1அவர்களும் உங்களின் வாழ்த்துக்களுக்கு உளமார்ந்த நன்றிகள் தெரிவித்தார்கள்..

    ReplyDelete
  20. வணக்கம் அக்காச்சி,
    உங்களின் தோழிக்கு, என் உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்க் கொள்கிறேன்.

    ReplyDelete
  21. என்ன பதிவுலகை விட்டுப் பிரியப் போகிறேன் என்று ஒரு பதிவு எழுதியிருந்தீங்க. ஆனால் வந்து பார்த்தேன், காண முடியலையே?

    ReplyDelete