28.8.11

பிரிகிறேன் இப்போது..உயரம் ஏற்ற
ஊக்கம் தந்து
தோள் தட்டிய
தோழமைகளே..-எனது
பதிவுலக உறவுகளே!!!

பிரிகிறேன் பிரிகிறேன்
பதிவுலகை விட்டு
பிரிகிறேன்...
நிரந்தரமற்ற எனது
பதிவுலக வாழ்வில்
வருவதும் போவதுமே-எனது
வாழ்வாச்சு..

சில நாட்களில் வரலாம்....
சிலவேளை..
சில மாதங்களின் பின்னே
சந்திக்கலாம்...
மறந்திடேன் உங்களை..
மறுபடியும் வரும் வரை
மறந்திடாதீர் என்னையும்.!!!!.

காலத்தின் மாற்றங்கள்
சாதகமாயும் ,,,,,சாதகமற்றும்
நிலவுகையில்
உதிப்பதும்.....
சட்டென மறைவதும்
எனது கதையானது...

இன்ரனெற் வசதி
இல்லாதபோதும்..
கணனிக்கு ஓய்வு
கிடைக்காத போதும்
உங்கள் பக்கம் எனது
வருகையும் பின்னூட்டமும்
இல்லாமலே போனது...
காரணம் இதுவே!!!

ஈழத்தில் கண்ட
அவலத்தின் காட்சிகளை
வெளிச்சொல்ல முடியாது போகையில்
எழுத்துக்களில் ஆற்ற நினைத்தேன்..
தனிமை வாட்டியபோது...
மனம் வலிக்கும்போது...
பொழுது போக்காக
ஒரு புறம் இருந்தது
இந்த வலைப்பூ..
வேறு எந்தவித
குறிக்கோளும் எனக்கில்லை..

அண்ணனின் நண்பனால்
கிடைத்தது இந்த
வலைத்தள அறிமுகம்..
அவருக்கு எனது
முதல் நன்றி..

கட்டம் கட்டமாய்
சின்னச் சின்னதாய்
நண்பர்களே ..
உங்களின் வருகையால்-நீவீர்
சொல்லும் கருத்துரையால்
மெல்லென
வளர்கிறேன் பதிவுலகில்..
உங்களுக்கு எனது
மனமார்ந்த நன்றிகள்...

உறவுகளே!!!!
மீண்டும் என்
கால் பதிக்கும் வரை
மறந்திடாதீர் என்னை..
பிரிகிறேன் இப்போது..

செம்பகம்..27 comments:

 1. என்றுமே உன்னை மறக்கமாட்டோம் சகோதரி... இனி வரும் காலம் தங்களுக்கு மகிழ்ச்சி நிலைக்கட்டும்... சென்று வாருங்கள்..... நிம்மதியை வென்று வாருங்கள்.....

  ReplyDelete
 2. பிரிவு என்பது பரிவற்ற கொடுமை தான்... நம்மிடம் நல்ல விதமாக பழகிய எவரும் பிரிகையில் கண்களில் நீர்துளி எட்டிப்பார்ப்பது சகஜம் தான்.... நீங்கள் எங்கு சென்றாலும் இறைவன் ஆசி தங்கள் கூடவே இருக்கட்டும்.... வாழ்த்துக்கள் சகோ... வரும் வரை காத்திருப்போம்

  ReplyDelete
 3. உங்கள் பிரிவுப் பதிவைப் படிக்கும் போது மனம் வலிக்கிறது.ஏதோ தவிர்க்க முடியாத காரணங்களால் நீங்கள் தற்காலிகமாகப் பிரிகிறீர்கள்.இது நிரந்த ரமல்ல.காத்திருப்போம் உங்கள் வருகைக்காக!அது வரை எங்கள் வாழ்த்துகள் உங்களுக்குத் துணை நிற்கும்!

  ReplyDelete
 4. அன்பு சகோதரி செம்பகம்

  முதற்கண் தொழிலும் அதைச் சார்ந்த
  பணிகளும் அவசியம். முதலில் அதை நோக்குங்கள்.
  எண்கள் நெஞ்சில் நீங்கா இடம் எப்போதும் உங்களுக்கு உண்டு.
  நீங்கள் வரும் வரை உங்களுக்கான கருத்துப் பெட்டிகள்
  காத்து வைத்திருக்கிறேன்.
  மீண்டும் வருக.

  ReplyDelete
 5. மீண்டும் சீக்கிரம் வாருங்கள்...

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. சீக்கிரமே இணைந்துவிட நானும் உங்களுக்காக பிரார்த்திக்கொண்டு இருப்பேன் செண்பகம்....

  செண்பகத்தை மறக்கமுடியுமா?

  ReplyDelete
 8. உவப்ப தலைகூடி உள்ளப் பிரிதல் என்பது
  வருத்தமே அன்பரே
  நலங் காண வருவீர் நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 9. இதயப்பூர்வமான உறவுக்கு என்றுமே ஒரு துரதிர்ஷ்டம் உண்டு. அந்த உறவில் பிரியம் அதிகமாகும்போது பிரிவு உண்டாகிவிடும். அல்லது பிரிவு உண்டாகும்போது பிரியம் அதிகமாகி விடும். சென்று வருக செண்பகம். தங்களுக்கு கடவுள் அருளால் நலமே விழைக என வாழ்த்தி தற்காலிகமாக வழிஅனுப்புகிறேன். விரைவில் எங்களை மகிழ்விக்க வருவீர்களென்ற நம்பிக்கையுடன் - கடம்பவனகுயில்

  ReplyDelete
 10. சென்று வாருங்கள். பணி நிர்பந்தங்களை வென்று வாருங்கள். மீண்டும் சீக்கரமாக மீண்டு வாருங்கள்.
  மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் போது ச்ந்திப்போம். வாழ்த்துக்கள். vgk

  ReplyDelete
 11. ரெவெரிAugust 28, 2011 at 11:41 PM

  நல்ல பதிவு....
  இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...
  ரெவெரி...

  ReplyDelete
 12. //மீண்டும் என்
  கால் பதிக்கும் வரை
  மறந்திடாதீர் என்னை..//
  நீங்கள் வரும் வரை உங்களுக்கா காத்திருப்போம்.
  take care.

  ReplyDelete
 13. நீங்கள் திரும்பி வருவீர்கள் எண்டு நம்புகிறேன்.....

  ReplyDelete
 14. payanam entha thadankalum illamal nalla muraigil amaiya iraivanai vendokinran.

  ReplyDelete
 15. செம்பகம் அக்கா. இது தற்காலிக பிரிவுதான். நிச்சயம் உங்கள் வரவுக்காக நாங்கள் காத்திருப்போம். . .வலி என் மனதிலும். . .போய் வாருங்கள். . .

  ReplyDelete
 16. உலகில் எதுவும் நிரந்தரமல்ல.... சகோதரி. பிரிவுகளும்தான். நீங்கள் மீண்டும் வரும்வரை உங்களுக்காய் காத்திருப்போம். அதுவரை நலமாக, மகிழ்வாக வாழ வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 18. மீண்டும் சீக்கிரம் வாருங்கள்...

  ReplyDelete
 19. மீண்டும் புத்துணர்ச்சியுடன் வாருங்கள் நட்புடன் காத்திருக்கின்றேன் .!

  ReplyDelete
 20. come again! God bless you.
  Vetha. Elangathilakam.

  ReplyDelete
 21. அன்புள்ள சகோதரிக்கு,

  இது பிரிவு இல்லை.. நீங்கள் எடுத்துகொள்ளும் சிறிது கால ஓய்வு என்று நினைத்துக்கொள்கிறோம்...

  மீண்டு(ம்) வந்து எங்களுடன் பதிவுலகத்திலும் நட்புறவு பேண வேண்டுகிறேன்...

  உங்கள் வாழ்வும் நீங்கள் செய்யும் பணி சிறக்கவும் என் மனமார்ந்த வாழ்த்துகள்...

  விரைவில் சந்திப்போம்...

  ReplyDelete
 22. நேரம் கிடைக்கும் பொழுது எழுதுங்கள்

  தமிழைப் பருக கண்டிப்பாக காத்திருக்கிறோம் நண்பரே

  அன்புடன்
  திகழ்

  ReplyDelete
 23. அன்புடன் சென்று வாருங்கள் ,வந்ததும் எனக்கு தெரியப்படுத்துங்கள் சகோதரி பதிவுலகில் நான் இருந்தால்.

  தங்கள் வாழ்வில் சந்தோசம் கிட்ட இந்த சகோதரனின் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 24. வாழ்ந்தவர் கோடி
  மறைந்தவர் கோடி
  மக்களின் மனதில்
  நின்றவர் யார்?
  இத்தனை உள்ளங்களிலும் ஈரம் கசிய அன்பு பாராட்டிய நீரே!
  சகோதிரி நிச்சயம் மீண்டும் சிந்திப்போம்...
  சென்று வாருங்கள்...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 25. மாய உலகம் said...
  இன்றைய வலைச்சரத்தில் தங்களை
  அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
  நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

  ReplyDelete
 26. ஈழத்தில் கண்ட
  அவலத்தின் காட்சிகளை
  வெளிச்சொல்ல முடியாது போகையில்
  எழுத்துக்களில் ஆற்ற நினைத்தேன்..
  தனிமை வாட்டியபோது...
  மனம் வலிக்கும்போது...
  பொழுது போக்காக
  ஒரு புறம் இருந்தது
  இந்த வலைப்பூ..
  வேறு எந்தவித
  குறிக்கோளும் எனக்கில்லை..
  -உணர்ந்து சொல்லிருக்கிங்க...
  வரவுக்காக காத்திருக்கிறேன் தோழி

  ReplyDelete
 27. என் பிரியமான உறவுகளே உங்கள் வழியனுப்புதல் போலே
  அனைத்தும் நன்றாய் நிகழ்ந்தது...
  அனைவருக்கும் அன்புடன் எனது மனமார்ந்த நன்றிகள்...

  ReplyDelete