24.9.11

மறுபடியும் தோழமையுடன்....


எப்போது இணைவேனோ -என்ற
ஏக்கம் என்னில்
அப்போது எழுந்தது..
அத்தனைக்கும் விடையாய்
மாதம் ஒன்றை நெருங்கையில்
இப்போதே காண்கின்றேன்...

மனதில் ஓர் மகிழ்வும்...
நெஞ்சில் ஓர் நிமிர்வும்...
உதட்டில் ஓர் புன்னகையும் ...
ஏட்டில் ஓர் மாறுதலுமாய்..
மீண்டும் உங்களுடன்
இணைந்து கொள்ளும்
பெருமிதம் இப்போ -இந்த
வலைப் பூவுக்குள்ளே !!!

நலமா!!
என் நேச உறவுகளே..
என் பதிவுலக நெஞ்சங்களே!
உங்களோடு இணைவதில்
உறவுகளே!
உள்ளத்தில் அதிக இன்பம்
ஊற்றாய் பெருகுமே...
எதிரெதிரே கைகுலுக்கி
புன்னகை பூக்கும் நினைவு
உங்களை சந்திக்கையிலே..

பேசப்பட்ட தாய் மொழியும்
மூச்சு அடங்கியபடி
உறங்கு நிலையில்...

பல மைல்கள்
பறந்து வந்தாலும்
பாழ்பட்ட தனிமையோ
விடுபட்டதாய் இல்லை..-ஆனாலும்
உங்களோடு இணைவதில்
தனிமையும் இனிக்குமே...
எண்ணத்தில் சுரக்குமே..
கவிதையை நனைக்குமே..
மீண்டும் உங்களோடு
கைகுலுக்கிய மன
பெருங் கழிப்போடு..............


செம்பகம்..48 comments:

 1. மன மகிழ்வோடு வரவேற்கிறேன் சகோதரி
  தொடரட்டும் இம்மகிழ்ச்சி

  சீக்கிரம் திரும்பியதற்கு நன்றி

  ReplyDelete
 2. வணக்கம், வந்தனம்!
  மீள் வருகைக்கு வாழ்த்துக்கள்!

  நலம் தானே?

  ReplyDelete
 3. நலமா!!
  என் நேச உறவுகளே..
  என் பதிவுலக நெஞ்சங்களே!//

  நாங்கள் இருக்கிறோம்,
  நீங்க எப்படி?

  ReplyDelete
 4. தாய் மொழி மூச்சு அடங்க விடமாட்டோம்!!!
  ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கேன்,வந்து பாக்கிறது

  ReplyDelete
 5. மறுபடி வணக்கம். பணி தொடரட்டும். வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 6. //உங்களோடு இணைவதில்
  தனிமையும் இனிக்குமே...
  எண்ணத்தில் சுரக்குமே..//

  ம்ம்

  மீண்டு(ம்) வந்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. நூறாவது பாலோவர்ஸ்க்கு ஸ்பெஷலளட்வாஸ் வாழ்த்துக்கள் :-)

  ReplyDelete
 8. வருக வருக
  சகோதரி
  வானளாவிய வாழ்த்துக்கள்
  தொடருங்கள்
  உங்கள் சபையில் ஏராளமானோர்
  காத்திருக்கிறோம்
  படைப்புகளை ரசிக்க.....

  ReplyDelete
 9. //மனதில் ஓர் மகிழ்வும்...
  நெஞ்சில் ஓர் நிமிர்வும்...
  உதட்டில் ஓர் புன்னகையும் ...
  ஏட்டில் ஓர் மாறுதலுமாய்..
  மீண்டும் உங்களுடன்
  இணைந்து கொள்ளும்
  பெருமிதம் இப்போ -இந்த
  வலைப் பூவுக்குள்ளே !!!//

  WELCOME!
  வருக வருக வருகவே!
  வாழ்த்துகள்.
  vgk

  ReplyDelete
 10. பதிவுகள் தொடரட்டும் நம்
  பாசப் பகிர்வுகளும் அப்படியே
  வந்ததற்கும் கவி தந்ததற்கும்
  நன்றி!

  ReplyDelete
 11. கடந்த ஒருமாதம் இன்பமாய் அமைந்ததா? மீள்வருகைக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. நாங்கள் இருக்கிறோம் உங்கள் தனிமையை இனிமையாக்க.வரவேற்கிறோம்!
  நலமா?

  ReplyDelete
 13. தங்களது வருகை மகிழ்ச்சி அளிக்கிறது.... வாருங்கள் சகோ...

  ReplyDelete
 14. வாங்க செம்பகா ,சுகம்தானே ,உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி .

  ReplyDelete
 15. M.R said...
  மன மகிழ்வோடு வரவேற்கிறேன் சகோதரி
  தொடரட்டும் இம்மகிழ்ச்சி

  சீக்கிரம் திரும்பியதற்கு நன்றி..  அன்பு உறவே !!
  உங்கள் வரவுக்கு எனது நன்றிகள்.

  ReplyDelete
 16. நிரூபன் said...சொன்னது
  நலமா!!
  என் நேச உறவுகளே..
  என் பதிவுலக நெஞ்சங்களே!//

  நாங்கள் இருக்கிறோம்,
  நீங்க எப்படி?


  சகோதரனே நானும் நலமே.வருகைக்கு எனது நன்றிகள்.

  ReplyDelete
 17. மைந்தன் சிவா said...சொன்னது
  தாய் மொழி மூச்சு அடங்க விடமாட்டோம்!!!
  ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கேன்,வந்து பாக்கிறது.


  அப்படியேதான் சகோதரா.
  தங்கள் வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 18. kovaikkavi said....சொன்னது
  மறுபடி வணக்கம். பணி தொடரட்டும். வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.  வாங்க அக்கா ..தொடர்கிறேன்...
  தங்கள் வருகைக்கு எனது அன்பான நன்றிகள்.

  ReplyDelete
 19. ஆமினா said....சொன்னது..
  //உங்களோடு இணைவதில்
  தனிமையும் இனிக்குமே...
  எண்ணத்தில் சுரக்குமே..//
  ம்ம்
  மீண்டு(ம்) வந்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..

  !!
  அன்பு உறவே உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 20. மகேந்திரன் said..சொன்னது...
  வருக வருக
  சகோதரி
  வானளாவிய வாழ்த்துக்கள்
  தொடருங்கள்
  உங்கள் சபையில் ஏராளமானோர்
  காத்திருக்கிறோம்
  படைப்புகளை ரசிக்க.....

  வாங்க வாங்க அன்பு உறவே..
  நிச்சயமாக தொடங்குகிறேன்.
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் எனது நன்றிகள்.

  ReplyDelete
 21. வை.கோபாலகிருஷ்ணன் said...
  //மனதில் ஓர் மகிழ்வும்...
  நெஞ்சில் ஓர் நிமிர்வும்...
  உதட்டில் ஓர் புன்னகையும் ...
  ஏட்டில் ஓர் மாறுதலுமாய்..
  மீண்டும் உங்களுடன்
  இணைந்து கொள்ளும்
  பெருமிதம் இப்போ -இந்த
  வலைப் பூவுக்குள்ளே !!!//

  WELCOME!
  வருக வருக வருகவே!
  வாழ்த்துகள்.
  vgk..


  பெரியவரே வருக வருக.
  தங்கள் வருகைக்கு எனது நன்றிகள்.

  ReplyDelete
 22. சென்னை பித்தன் said..சொன்னது.
  பதிவுகள் தொடரட்டும் நம்
  பாசப் பகிர்வுகளும் அப்படியே
  வந்ததற்கும் கவி தந்ததற்கும்
  நன்றி!


  பெரியவரே வாருங்கள் நிச்சயமாக தொடர்கிறேன்.
  உங்கள் வருகைக்கு எனது நன்றிகள்.

  ReplyDelete
 23. அம்பலத்தார் said...
  கடந்த ஒருமாதம் இன்பமாய் அமைந்ததா? மீள்வருகைக்கு வாழ்த்துக்கள்..


  உறவே!!
  உங்களை சந்தித்த பின் தான் இன்பம் பெருகும்.
  உங்கள் வருகைக்கு எனது நன்றிகள்.

  ReplyDelete
 24. கோகுல் said...சொன்னது.
  நாங்கள் இருக்கிறோம் உங்கள் தனிமையை இனிமையாக்க.வரவேற்கிறோம்!
  நலமா?


  வாங்க சகோ..
  நலமே.தங்கள் வருகைக்கு நன்றிகள்.

  ReplyDelete
 25. மாய உலகம் said.சொன்னது..
  தங்களது வருகை மகிழ்ச்சி அளிக்கிறது.... வாருங்கள் சகோ...  வருக வருக வருக சகோ..
  அதனால் நானும் மகிழ்வடைகிறேன்..உங்கள் வருகைக்கு எனது நன்றிகள்.

  ReplyDelete
 26. angelin said..சொன்னது...
  வாங்க செம்பகா ,சுகம்தானே ,உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி .  வங்க அக்கா வாங்க ..
  எனக்கும் அப்படியேதான் ரொம்ப மகிழ்ச்சி.

  .தங்கள் வருகைக்கு நன்றிகள்.

  ReplyDelete
 27. இரு கரம்கூப்பி இனிமையாய் முகம் மலர்ந்து தோலோடு தோல்நின்று வரவேற்கிறோம் செம்பா
  வருக வருக உங்கள் கவியை தருக , உருக உருக படிப்போம் மகிழ

  ReplyDelete
 28. மீண்டும் விடிவெள்ளி முளைத்ததில் சந்தோஷம்.
  எழுதுங்கள்... வலிகள் எல்லாம் பறந்து போகும்.

  ReplyDelete
 29. கவி அழகன் said...சொன்னது.
  இரு கரம்கூப்பி இனிமையாய் முகம் மலர்ந்து தோலோடு தோல்நின்று வரவேற்கிறோம் செம்பா
  வருக வருக உங்கள் கவியை தருக , உருக உருக படிப்போம் மகிழ.....


  !!
  கவியழகே !!!
  கவிதையிலேயே ஒரு வரவேற்பு..
  கவியழகாக்கு அதுவே சிறப்பு..
  நிச்சயமாக இடையிடையே தருவேன் கவிதனை..
  கவியின் வருகைக்கும் கவி வரவேற்பிற்கும் எனது மனம் நெகிழ்ந்த நன்றிகள்..

  ReplyDelete
 30. சே.குமார் said..சொன்னது..
  மீண்டும் விடிவெள்ளி முளைத்ததில் சந்தோஷம்.
  எழுதுங்கள்... வலிகள் எல்லாம் பறந்து போகும்.

  !!!
  வாங்க வாங்க அன்பிற்குரிய,என் பதிவுலக நீண்டகால உறவே..
  தொடர்வேன் நிச்சயமாக..
  உங்கள் வருகைக்கும் ஊக்குவிப்பிற்கும் எனது அன்பான நன்றிகள்..


  உங்கள் வலைப்பூவிற்குள் நுழைய முடியாமல் இருக்கிறதே என்ன பிரச்சனை.பலதடவை முயற்சித்தேன் முடியவில்லையே

  ReplyDelete
 31. பல மைல்கள்
  பறந்து வந்தாலும்
  பாழ்பட்ட தனிமையோ
  விடுபட்டதாய் இல்லை..-ஆனாலும்
  உங்களோடு இணைவதில்
  தனிமையும் இனிக்குமே...
  எண்ணத்தில் சுரக்குமே..
  கவிதையை நனைக்குமே..
  மீண்டும் உங்களோடு
  கைகுலுக்கிய மன
  பெருங் கழிப்போடு..............//மீண்டும் விடிவெள்ளி முளைத்ததில் சந்தோஷம்.வருக வருக உங்கள் கவியை தருக .............

  ReplyDelete
 32. Welcome back...உங்கள் படைப்புகளை வாசிக்க காத்திருக்கிறோம் சகோதரி......

  ReplyDelete
 33. நான் உங்கள் நூறாவது Follower...வாழ்த்துக்கள்...ரெவெரி

  ReplyDelete
 34. அன்பின் செண்பகம்,

  இடையே சட்டென தென்றல் காணாமல் போனது போல் போனாலும் எங்கள் எல்லோரையும் பிரிய மனமில்லாது
  நம் வீட்டிலிருந்து தொலைவில் போகும் நம் வீட்டு பெண்ணாய் செண்பகம் நீங்க போனப்போ எனக்கும் எப்ப திரும்ப உங்களை பார்ப்போம் என்று இருந்தது....

  இதோ வந்தாச்சு தென்றல் திரும்ப எங்கள் மனம் நிறைக்க.....

  அன்பு வரவேற்புகள் செண்பகம்.... நீங்க சௌக்கியமாப்பா?

  உங்கள் கவிதை வரிகளில் இருக்கும் உற்சாகம் அப்படியே உங்க அன்பு மனதை சொல்கிறதுப்பா...

  தொடர்ந்து இணைந்திருக்க என் அன்பு பிரார்த்தனைகள்பா...

  ReplyDelete
 35. தங்களை வலைச்சரத்தில அறிமுகம் செய்திருந்தேன் பார்த்தீர்களா...

  ReplyDelete
 36. பார்த்தேன் சகோ...
  அறிமுகத்திற்கு நன்றி..
  எப்படி நலமா?

  ReplyDelete
 37. "..பாழ்பட்ட தனிமையோ
  விடுபட்ட..." மாட்டீர்கள்.

  தாய் மொழி உறவுகளுடன்
  இணையத்தில் இணைவதால்
  தனிமையும், ஏக்கமும்
  தானே பறந்தோடும்.

  ReplyDelete
 38. சகோதரியே நலமா, வரவேற்கிறோம் உங்களை.

  ReplyDelete
 39. மாலதி said.சொன்னது....
  பல மைல்கள்
  பறந்து வந்தாலும்
  பாழ்பட்ட தனிமையோ
  விடுபட்டதாய் இல்லை..-ஆனாலும்
  உங்களோடு இணைவதில்
  தனிமையும் இனிக்குமே...
  எண்ணத்தில் சுரக்குமே..
  கவிதையை நனைக்குமே..
  மீண்டும் உங்களோடு
  கைகுலுக்கிய மன
  பெருங் கழிப்போடு..............//மீண்டும் விடிவெள்ளி முளைத்ததில் சந்தோஷம்.வருக வருக உங்கள் கவியை தருக .............


  வாங்க வாங்க அன்பு உறவே..
  நிச்சயமாக தொடங்குகிறேன்.
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் எனது நன்றிகள்.

  ReplyDelete
 40. ரெவெரி said..சொன்னது......
  Welcome back...உங்கள் படைப்புகளை வாசிக்க காத்திருக்கிறோம் சகோதரி......

  நான் உங்கள் நூறாவது Follower...வாழ்த்துக்கள்...ரெவெரி..  வருக சகோ..
  நிச்சயமாக....
  உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது மனாமார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 41. மஞ்சுபாஷிணி said...
  அன்பின் செண்பகம்,

  இடையே சட்டென தென்றல் காணாமல் போனது போல் போனாலும் எங்கள் எல்லோரையும் பிரிய மனமில்லாது
  நம் வீட்டிலிருந்து தொலைவில் போகும் நம் வீட்டு பெண்ணாய் செண்பகம் நீங்க போனப்போ எனக்கும் எப்ப திரும்ப உங்களை பார்ப்போம் என்று இருந்தது....

  இதோ வந்தாச்சு தென்றல் திரும்ப எங்கள் மனம் நிறைக்க.....

  அன்பு வரவேற்புகள் செண்பகம்.... நீங்க சௌக்கியமாப்பா?

  உங்கள் கவிதை வரிகளில் இருக்கும் உற்சாகம் அப்படியே உங்க அன்பு மனதை சொல்கிறதுப்பா...

  தொடர்ந்து இணைந்திருக்க என் அன்பு பிரார்த்தனைகள்பா...


  அக்கா வருக வருக..
  உங்களோடு இணைந்திருப்பதுதான் எனது மகிழ்வும்..
  உங்கள் அன்புக்கும் ,கருத்துக்கும்,வரவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..

  ReplyDelete
 42. Dr.எம்.கே.முருகானந்தன் said...
  "..பாழ்பட்ட தனிமையோ
  விடுபட்ட..." மாட்டீர்கள்.

  தாய் மொழி உறவுகளுடன்
  இணையத்தில் இணைவதால்
  தனிமையும், ஏக்கமும்
  தானே பறந்தோடும்.  ஆமாம் டொக்ரர்...நீங்க சொன்னது போலே தாய் மொழி உறவுகளுடன் இணையும் போது அனைத்தும் பறந்தோடுவது உண்மைதான்..
  உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் எனது அன்புகலந்த மனமார்ந்த நன்றிகள் டொக்ரர்.

  ReplyDelete
 43. N.H.பிரசாத் said..சொன்னது.......
  சகோதரியே நலமா, வரவேற்கிறோம் உங்களை.


  சகோதரனே நான் நலம்.
  நீங்க நலம் தானே?

  உங்கள் வரவேற்பிற்கும்,தங்கள் வருகைக்கும் எனது மனம் மகிழ்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 44. நீங்கள் கவிதையில் விளக்கியுள்ள
  அதே உணர்வு உண்மையில் என்னிடத்தும் இருந்தது
  அந்த உணர்வை அப்படியே ஒரு அழகிய படைப்பாக்கி
  அருமையாக மீண்டும் பதிவினைத் தொடர்ந்தது
  மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது
  தொடர்ந்து சந்திப்போம்.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 45. வாங்க நலமா...?
  தங்களின் வருகை மகிழ்ச்சியை தருகிறது...

  ""உங்களோடு இணைவதில்
  தனிமையும் இனிக்குமே...""

  -மனதை தொட்ட வரிகள்...

  ReplyDelete
 46. Welcome Back !!!

  Loneliness is divinity.
  Unity is almighty !!!

  ReplyDelete
 47. வருக! வருக! வருகவே! வாழ்த்துக்கள் தோழி.....

  ReplyDelete
 48. சகோதரி நலமா? ரெம்ப நாளா எழுதவில்லை. இன்று வந்துள்ளேன் இறை அருள் கிட்டட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://wwww.kovaikkavi.wordpress.com

  ReplyDelete