26.2.10

நண்பனே நினைவிருக்கிறதா....




















நீயும் நானும்

அருவரியில் அறிமுகமானோம்
படித்தது ஒரே பள்ளி
படிப்பில் மட்டும் போட்டி
குறும்பு வித்தைகளால்
குறையாமல்வேண்டும் தண்டனைகள்
நினைவிருக்கா நண்பனே..?

கணித வாத்தியாரிடம்
காதில் வேண்டும் முறுக்கு
அடிக்க முயன்றால்
அசத்தும் அசல் சிரிப்பு
பக்கத்து வகுப்பு
பரமேசின் சைற்றடிப்பு
வருகிறதா நினைவில்..?

வடிவேல் வாத்தியார்
வாற்கட்டை ஒழித்து
வசமாய் மாட்டியது
மணியக்கா வீட்டு
மாங்காய்க்குகல்லெறிந்து
மண்டை மண்டையாய்
வேண்டியது.........
பள்ளி முன்றலில்
அடிக்கடி இருக்கும்
முட்டுக்கால்.........

தோழா எங்கள்
பள்ளி வாழ்வில்
எத்தனை சந்தோசிப்பு
ஞாபகம் இருக்கிறதா...?
என்னைப்புரிந்திருப்பாய்

இணை பிரியா
நண்பர்கள் அன்று
வெளிநாடு என்று
வெளியேறினாய்
பிரிவிற்காய் துடித்தாய்
வழியனுப்பும் போதும்
விழிகசியச் சென்றாய்

இன்று ..........
நீயாரோ நான்யாரோ
தொலைபேசி எடுத்தாலும்
தொடர்புகொள்ள மறுக்கிறாயே
ஏனோ புரியவில்லை...?


செம்பகம்

7 comments:

  1. காலத்தோடு சேர்ந்து நாமும் சுழன்றுவிடுகிறோம். ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
    கவிதை நன்றாக உள்ளது. ஏன் இன்னும் தமிழிஷில் இணைக்கவில்லை..?

    ReplyDelete
  2. கவிதை நன்றாக உள்ளது

    :)

    ReplyDelete
  3. அறிவு அவர்களே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    தமிழிஸ்ஸில் இணைத்திருக்கிறேன்.

    ReplyDelete
  4. நேசமித்ரன் அவர்களே
    உங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  5. சந்தோஷ் அவர்களே
    உங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete