நாட்டை விட்டு
கடந்து வந்தேன்
இறங்கி வைத்த
முதல் அடி
விமான நிலையம்
காண்பவர் எல்லாம்
வேற்று மொழியுடையோர்
எங்கு போய்
ஏது செய்வது
எதுவும் அறியேன்
கூட வந்தவர் பின்னே
ஓடோடி நடந்தேன்
இடை நடுவில்
திக்குத் திக்காய்
பிரிந்தார்கள் அவர்கள்
அருகில் வந்தவரிடம்
லைக்கேஜ் எடுக்குமிடம்
சைகையால் கேட்டேன்
எதிர்த்திசை நோக்கி
எளிதாய்க் காட்டினார்
கடவுள் புண்ணியமென
கட கடவென நடந்தேன்
அட பாவி...............
அவருக்கு விளங்கியது ஏதோ-அது
களிப்பறைக் கூடம்
பின்னால் வந்த கிழவனிடம்
வழியைக் கேட்டேன் -அவர்
சிரித்து விட்டு போனார்
என்னையா கொடுமை
யாரிடம் போய்
எப்படிக் கேட்க..?
நம்ம நாட்டில
இங்கிலீசு கதைச்சால்
இழிச்சிட்டு போவாங்க -எனக்கு
ஆங்கிலீசும் கம்மி...
மாறி மாறி அலைந்து
மண்டை வெடிச்சு
வெளிநாடோ........-அதுஒரு நாளோடே
வெறுத்துப் போயிற்றுறோட்டுக்கு வந்தேன்
கார் சாரதியிட்ட
முகவரியைக் கொடுத்தேன்
தன் மொழியில பேசினான்
என்ன விளங்கும் எனக்குஅரை குறையாய்
விளங்க வைச்சு
ஏறி விட்டேன் வாகனத்தில
நெடு நேரமாய் நகருது
எங்க போகுதோ
நின்ற பின் தான் தெரியும்
ஓய்வறையோ ...........அல்ல
கழிப்பறையோ என்று !!!!!!!!
செம்பகம்
நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநானும் வெளிநாட்டுல இப்படி டர்ரியல்லாகியிருக்கேன்.
ReplyDeleteஇராமசாமி கண்ணண் அவர்களே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteஆடுமாடு கூட்டமே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeletevery nice your poem........
ReplyDeletegood......
நல்ல கவிதை. வாழ்த்துகள்.
ReplyDeleteநல்லாருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteமுதல் முறை வெளிநாடு செல்பவரின் அனுபவம் கண்டிப்பாக இப்படித்தான் இருந்திருக்கும். எனக்கு இன்னும் இந்த அனுபவம் கிடைக்கல :) . கிடைக்கும்போது நிச்சயம் உங்களை நினைத்துக்கொள்வேன்.
ReplyDeleteT.V.ராதாகிருஷ்ணன் அவர்களே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteஅண்ணாமலையான் அவர்களே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteஅறிவு GV அவர்களே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteவாழ்க்கைப் பயணத்தைத் திட்டமிட்டு அமைத்துக் கொள்வது என்பது மிகவும் சிரமமான ஒன்றாக இருப்பினும், நாம் செல்ல இருக்கும் பயணத்தைச் சிறப்புடனும், ஓய்வறையாகவே இருக்கும்படி வைத்துகொள்வதும் நம்மிடத்தில் தான் உள்ளது. நல்லதொரு கவிதை.
ReplyDeleteV.Radhakrishnan அவர்களே
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி