9.3.10

புதிய கிளிநொச்சி


அழகு தேசமே
எழில் கொஞ்சும் பேரழகே-உன்
இறக்கை ஒடிந்து
இயற்கை வற்றி
இடிந்து போனதேனோ

உறக்கம் அறியா-எங்கள்
ஊர்களின் மெளனம் தான் என்ன..?
பட்டுப் போய் கிடக்கும்-என்
பழைய ஊரே
கிளிநொச்சி மண்ணே-நீ
கிலி கொண்டு இருப்பதேனோ...?
உன்னில் கொட்டுண்டு கிடக்கும்
அத்தனை அழகும் எங்கே...?

சாலையோரம் உயர்ந்து நின்ற
கட்டடங்களே...........
டிப்போ பேருந்து தரிப்பிடமே...
யாருக்கு ஏது செய்தீர்
தெருவின் ஓரம்
சிரித்து நின்ற
சந்திரன் பூங்காவே
உன்மீதும் புதியதோர் சிலையா..?
சிங்கள வெறியன்
நினைவுத் தூபியாம்
நீ அதிர்ந்தாவது
வீழ்த்திடமாட்டாயா..?

இதமிதமாய் குளிரவைத்த
சேரன் பாண்டியன்
சுவையூற்றுக்களே
உங்கள் அத்திவாரங்கள் எங்கே...?
நீதி உணர்த்திய
தமிழீழ நீதிமன்றமே....-நீ
தப்பிழைத்ததாய் அறிந்ததில்லையே....

செந்தமிழில் பளிச்சிட்ட

பதாகைகளே......
சிங்கள மொழியில் மாறியதன்
காரணம் தான் என்ன...?
எம் தேச அரசமரமே
உன்னடியில் முளைத்திருக்கும்
சிலைதான் ஏனோ
நீயாவது சரிந்து
வீழ்ந்திடமாட்டாயோ...?

தேசத்து வாழ்வுக்காய்
தேகத்தைக் கொடுத்த
உத்தமர் ஆலயங்களே
இறப்பின் பின்னும்
நின்மதியில்லைநம் தேசத்தில்

வெறும் கற்கள்
உம்மை என்னையா செய்தன..?
மீண்டும் முளைத்துவிடும்
என்ற அச்சம் தானோ
சூழவிருந்த சுவர்கள்
துப்பாக்கி தூக்கி
சுடும் என்ற பிரமையா?

ஓடோடிவரம் வேண்டிய
தேவாலயமே,கோவில்களே
எம் மண்ணைக் காத்திடு என்று
கெஞ்சிக் கேட்டோமே
ஏன் கடவுளே தரமறுத்தீர்

ஆண்டவரே...
அலரி மாளிகையில்
அவலக்குரல் இனியும் கேட்கதோ..?
கும்பிட்ட தெய்வங்களே-நீங்கள்
மனிதர்களாக மாறிவிட்டீர்களா?
சத்தியமாய் கேட்கிறேன்
கோபம் ஒன்றும்
என்மீது வேண்டாம்
குமுறி வெடிக்கும்
உள்ளத்துத் துடிப்பால் பேசுகிறேன்

ஆயிரமாயிரம் உயிர்களை
துடிக்க துடிக்க
பிழிந்து குடித்தவர்
எப்படி இறைவா அவர்க்கு
இப்படி வாழ்க்கை
நீதி தவறி நடந்தவர்

கொடுமைகள் இழைத்தவர்
நிலைப்பது என்பதில்லை-இது
உலக நியதியே
இவர்க்கு மட்டும்
சுவர்க்கமா...?

ஆண்டவரே
நெருப் பெரித்தவர்க்கு
கொடுத்துவிட்டாய் தண்டனை
தீயெடுத்துக் கொடுத்தவர்கு
எப்போது சாவு
மனித உரிமை மீறல்களாம்
உலகம் முழுதும் வெளிச்சம்
விசாரணையாம்...!
எதுவும் நடந்ததாய் தெரியவில்லை
செத்துக் கிடக்கிறது நீதி

ஆதாரம் ஏராளம்-ஆனால்
அணு கூட அசைவதாயில்லை
பொய்யும் புரட்டும்
சுத்து மாத்துக்கும்தானா
மவுசு இவ்வுலகில்


மீண்டும் மீண்டும்
நரக வேதனையா தமிழர்க்கு
நரகத்திற்கு சென்றால்
தமிழர்க்கு அது பெரிதாய் தோற்றிடாது
என்று நான் எண்ணுகின்றேன்

தமிழர் மனங்களில் கொதிக்கும்
எரிமலை குழம்பு
ஓர் நாள் வெடிக்கத்தான் செய்யும்
பற்றியெரியும் நெருப்பு
விடுதலைத்தீயாய் பற்றும்
ஓர் நாள்......
வரண்டு போன என் மண்ணே
சிரிப்பாய் ஓர் நாள்..


செம்பகம்

21 comments:

 1. //உறக்கம் அறியா-எங்கள்
  ஊர்களின் மெளனம் தான் என்ன..?
  பட்டுப் போய் கிடக்கும்-என்
  பழைய ஊரே
  கிளிநொச்சி மண்ணே-நீ
  கிலி கொண்டு இருப்பதேனோ...?
  உன்னில் கொட்டுண்டு கிடக்கும்
  அத்தனை அழகும் எங்கே...?///


  ///மீண்டும் மீண்டும்
  நரக வேதனையா தமிழர்க்கு
  நரகத்திற்கு சென்றால்

  தமிழர்க்கு அது பெரிதாய் தோற்றிடாது
  என்று நான் எண்ணுகின்றேன்//

  வலியை வாங்கி விழிகளுக்குள்
  காட்சி காட்டுகிறது கவிதை...
  ஆதங்கமான அழகு....கவிதை...வாழ்த்துகள்...

  ReplyDelete
 2. வலி நிறைந்த வரிகள்

  ReplyDelete
 3. வலி உணர்த்தும் கவிதை நண்பா.

  ReplyDelete
 4. பலரின் உள்ளத்தில் இருக்கும் வலியைச் சொல்லும் கவிதை. விடியல் வந்துவிடாதா எனும் ஏக்கம் கொண்ட கவிதை. மனதின் எண்ணங்களை அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.

  ReplyDelete
 5. நண்பா வலி இருப்பதை இனி நாம் யாருக்கும் காட்டி கொள்ள தேவையில்லை .யார் வந்து உதவ போகிறார்கள்
  நமக்கு நாமே தோழமையுடன் இருப்போம் புதியவர்களை (--------)

  ReplyDelete
 6. படிக்கும்போதே வேதனையாக இருக்கிறது.

  ReplyDelete
 7. seemangani அவர்களே சாவின் விழிம்பில் வாழ்ந்து அனுபவிக்காத அத்தனையும் அனுபவித்தவர்கள் நாங்கள்.
  இறுதி வரைக்கும் மண்ணை எம் விட்டு விலக மனமின்றி வாழ்ந்தவர்களில் நானும் ஒருவர்..
  மனசுக்குள் நிரம்பி வழியும் வலிகளும், ஆதங்கங்களும் யாரிடமும் சொல்ல முடியாமல் தாள்களுக்கும் பேனாவுக்கும் மட்டுமே இதுவரைகாலமும் சொல்லி ஆறினேன்.இப்போ........என்
  துடிப்பை இதனூடாக சொல்லி ஆறுகின்றேன்.
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...................

  ReplyDelete
 8. நேசமித்ரன் அவர்களே
  மனசுக்குள் நிரம்பி வழியும் வலிகளும், ஆதங்கங்களும் யாரிடமும் சொல்ல முடியாமல் தாள்களுக்கும் பேனாவுக்கும் மட்டுமே இதுவரைகாலமும் சொல்லி ஆறினேன்.இப்போ........என்
  துடிப்பை இதனூடாக சொல்லி ஆறுகின்றேன்.
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...................

  ReplyDelete
 9. சே.குமார் அவர்களே
  என்துடிப்பை இதனூடாக சொல்லி ஆறுகின்றேன்.
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...................

  ReplyDelete
 10. V.Radhakrishnan அவர்களே
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...................

  ReplyDelete
 11. A.சிவசங்கர் அவர்களே
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...................

  ReplyDelete
 12. சைவகொத்துப்பரோட்டா அவர்களே
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...................

  ReplyDelete
 13. வேதனையும் வலியும் நிறைந்ததுதான் வாழ்க்கையென்றாகிவிட்டது. சிலருக்கு வெளியே தெரியும் சிலருக்கு தெரியாது, தெரியாமல் காட்டிக்கொள்வார்கள் அவ்வளவுதான்.

  வரிகளில் கொட்டிக்கிடக்குது வலி.
  வலி நீக்க வேண்டிக்கொள்கிறேன் இறைவனை../
  தொடர்ந்து எழுதுங்கள் தொடந்துவருகிறேன்..


  நேரம்கிடைக்கும்போது இதையும்வந்துபாருங்கள்..

  http://fmalikka.blogspot.com/2010/03/7.html

  ReplyDelete
 14. வாசித்திருக்கிறேன் உங்கள் பதிவுகளை.ஆனால் என்ன பின்னூட்டம் இட்டு இந்த வலி குறையும் எனத் தெரியாததால் மௌனமாய் சென்று இருக்கிறேன்.

  ReplyDelete
 15. மெளனம்தான் ஆட்கொள்கிறது.....

  பதில் தோன்ற மறுக்கிறது....

  ReplyDelete
 16. நம்பிக்கையே வாழ்க்கை.வலிமையும்!

  நம்பிக்கையோடு இருப்போம்...விடிவெள்ளி.

  ReplyDelete
 17. விடிவெள்ளி!உங்கள் கவிதையின் சோகம் உலுக்குகிறது.எப்படிப்பின்னூட்டமிட.
  நம்புங்கள் நல்லது நடக்கும்

  ReplyDelete
 18. கண்மணி/kanmani அவர்களே உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
  வலிகள் அதிகம் தான்..........
  சொல்ல முடியாமல் தவித்தபோது
  வரிகளாக்க நினைத்தேன்.......

  ReplyDelete
 19. பா.ராஜாராம் அவர்களே உங்கள் கருத்துக்கும்
  வருகைக்கும் நன்றி.

  நம்பிக்கையோடு தான் வாழ்ந்தோம்............
  ஆனால்?????????????????????

  ReplyDelete
 20. க.நா.சாந்தி லெட்சுமணன் அவர்களே
  உங்கள் கருத்துக்கும்
  வருகைக்கும் நன்றி.

  ReplyDelete