உனக்கும் எனக்குமான
உறவின் புரிதல்கள்.....
நீண்ட காலங்களென -நீநிச்சயமாய் மறுக்க முடியாதவை
எத்தனையோ மனிதர்களை
எதிர்கொண்ட என் வாழ்வில்
உனை மட்டும்
கணக்கிடத் தவறியதன்
காரணம் தேடுகின்றேன்....
உலகம் என் முதுகை
வியப்போடு தட்டுகிறது...
உனக்கும் இந் நிலையா??????
வார்த்தைகள் வரமறுக்க
தலையை மட்டும் மௌனமாய் அசைக்க
தள்ளிவிட்டாய் என்னை !!!!!மறந்திடு என்று
சுகமாய் விலகினாய்
நீ பகிர்ந்த காதல்,.........
நீ தந்த முத்தம்..........
அத்தனையும் என்ன செய்ய????
பத்திரமாய் உடலோடு காவுகின்றேன்...
ஏனெனில்.................
உனக்கு திருப்பி அளித்திட...!!!!!
என் நெஞ்சத்துள்
நிறைத்து வைத்து
யாசித்த காலங்கள்.......
இதய இடுக்கைக்குள்
அடுக்கி வைத்த ஆசைகள்......
தின்றுவாழும் உன் நினைவுகள்......
தூக்கத்தையே தொலைத்து
புரண்டு புரண்டு
படுத்த சாமங்கள்.....
காற்சட்டைக்குள் பத்திரப் படுத்திய -உன்
காகித கிறுக்கள்கள்....-அதை
அடிக்கடி புரட்டிப் பார்த்த
நிமிடங்கள்............
சாவின் விளிம்பைத் தொடுகையில்
உன்னை நினைத்தேதப்பித்த பொழுதுகள்.....
தொலை பேசியே பேசமுடியாத
தொலைவில் வாழ்ந்த போதும்
கிடைக்கும் அரிய வாய்ப்புகளில்
பத்துமாதம் சுமந்தவளை தவிர்த்து
உன்னோடு மட்டும் உரையாடிய நேரங்கள்....
இப்படி இப்படி எத்தனையோ...
அத்தனையும் புரட்டுகையில்
இழந்து போன காலத்தைஎண்ணி எண்ணி வெம்புகின்றேன்...
நீ அனுப்பிய
நினைவுப் பரிசுகள்....
பிரியங்கள் பகிர்ந்த
காகித மடல்கள்...-உன்
நிழற்படங்களைத் தாங்கிய
சேகர ஏடுகள்.........
சேகரித்து வைத்த
என் கரங்கள்....
எனை அறியாமலே
விறு விறுக்கின்றன !!!!!
எரிக்க எடுத்த
தீக்குச்சியின் பெருஞ்சீற்றம்
வழமைக்கு மாறாய்......
எரிவின் வெட்பத்தால்
பிரபஞ்சமே பொசுங்கி விடுவதாய்
வெஞ்சினத்தோடு எரிந்தன....
உன் நிராகரிப்பிற்கான
காரணம் மட்டும்
இன்று வரை புரியவில்லை
இதற்கான மறுதாக்கம்
ஓர் நாள்.......
வாழ்க்கை வலிக்கையில்
நீயாகவே புரிந்து கொள்வாய் ...!!!!!!!!!
செம்பகம்
நண்பனின் உண்மைச்சம்பவத்தை வரிகளாக்கினேன்.
:)
ReplyDeleteநல்ல முயற்சி
வாழ்த்துகள் விடிவெள்ளி
யார் பிரிய நேர்ந்தாலுமே, பிரிவு துயர் கொடுமை. அதுவே காதலனானால் கொடுமையிலும் கொடுமை.
ReplyDeletenalla kavithai..!
ReplyDeletevazhththukkal.
ம்ம்.....பிரிவின் வலியை சொல்லி விட்டீர்கள்.
ReplyDeleteநல்லா இருக்குதுங்க.. நல்ல வடிவம் கவிதைக்கு.. வாழ்த்துக்கள்
ReplyDeleteபிரிவு எப்பவும் வலி தான்
ReplyDeleteநல்லா இருக்கு விடிவெள்ளி
பிரிவின் வலியின் வழியில் ஆழமாய் போகிறது கவிதை வாழ்த்துகள்...விடிவெள்ளி
ReplyDeleteபிரிவு கொடுமையில்லை ஏனென்றூ தெரியாததுதான் கொடுமை..
ReplyDeleteஅருமை விடிவெள்ளி
good!
ReplyDeleteஅருமையான கவிதை விடிவெள்ளி..! பரிவு வலிதான் என்றாலும், வலியால் கவிதை கிடைத்ததால், அந்த பிரிவுக்கு நன்றி!
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள்..!
-
DREAMER
நேசமித்ரன் அவர்களே உங்கள் தொடர்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.....
தமிழ் உதயம் அவர்களே
ReplyDeleteஉங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்
எனது மனமார்ந்த நன்றிகள்.....
சே.குமார் அவர்களே உங்கள் தொடர்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.....
இராமசாமி கண்ணண் அவர்களே
ReplyDeleteஉங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும்
எனது மனமார்ந்த நன்றிகள்.....
சைவகொத்துப்பரோட்டா said...
ReplyDeleteம்ம்.....பிரிவின் வலியை சொல்லி விட்டீர்கள்
சைவகொத்துப்பரோட்டா அவர்களே
உங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும்
எனது மனமார்ந்த நன்றிகள்.....
Sivaji Sankar said...
ReplyDeleteநல்லா இருக்குதுங்க.. நல்ல வடிவம் கவிதைக்கு.. வாழ்த்துக்கள்
Sivaji Sankar அவர்களே
உங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும்
எனது மனமார்ந்த நன்றிகள்..
padma said...
ReplyDeleteபிரிவு எப்பவும் வலி தான்
நல்லா இருக்கு விடிவெள்ளி
padma அவர்களே
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்
எனது மனமார்ந்த நன்றிகள்.....
seemangani said...
ReplyDeleteபிரிவின் வலியின் வழியில் ஆழமாய் போகிறது கவிதை வாழ்த்துகள்...விடிவெள்ளி
seemangani அவர்களே
உங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும்
எனது மனமார்ந்த நன்றிகள்
thenammailakshmanan said...
ReplyDeleteபிரிவு கொடுமையில்லை ஏனென்றூ தெரியாததுதான் கொடுமை
thenammailakshmanan அவர்களே
அது தானே தெரியவில்லை......
seemangani அவர்களே
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
எனது மனமார்ந்த நன்றிகள்
வானம்பாடிகள் said...
ReplyDeletegood!
வானம்பாடிகள் அவர்களே
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்
எனது மனமார்ந்த நன்றிகள்.....
DREAMER said...
ReplyDeleteஅருமையான கவிதை விடிவெள்ளி..! பரிவு வலிதான் என்றாலும், வலியால் கவிதை கிடைத்ததால், அந்த பிரிவுக்கு நன்றி!
தொடர்ந்து எழுதுங்கள்..!
DREAMER அவர்களே
சரியா சொல்லியிருக்கிறீங்க.......\
தொடர்ந்து எழுதுகிறேன்
தொடர்ந்து வாருங்கள்.....
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்
எனது மனமார்ந்த நன்றிகள்
குட்டிக்கவிதை எழுதுங்க பாஸ்!
ReplyDeleteதாவூதீருது!
அப்பப்பா எத்தனை வலி இந்த பிரிதலில். அந்த புரிதலை தொலைக்கவும் முடியுமா என்ன? சாதரணமான வார்த்தைகள் அல்ல பிரிந்து விடுவோம் என்பது, ரணம் தோய்த்த வார்த்தைகள். அற்புதமாய் செதுக்கி உள்ளீர்கள் விடிவெள்ளி. வாழ்த்துக்கள்!
ReplyDeleteவால்பையன் said...
ReplyDeleteகுட்டிக்கவிதை எழுதுங்க பாஸ்!
தாவூதீருது
வால்பையன் அவர்களே சரி சரி எழுதுகின்றேன்....
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்
எனது மனமார்ந்த நன்றிகள்
காவிரிக்கரையோன் MJV said...
ReplyDeleteஅப்பப்பா எத்தனை வலி இந்த பிரிதலில். அந்த புரிதலை தொலைக்கவும் முடியுமா என்ன? சாதரணமான வார்த்தைகள் அல்ல பிரிந்து விடுவோம் என்பது, ரணம் தோய்த்த வார்த்தைகள். அற்புதமாய் செதுக்கி உள்ளீர்கள் விடிவெள்ளி. வாழ்த்துக்கள்!
காவிரிக்கரையோன் அவர்களே உங்கள் கருத்திற்கும், ஊக்கத்திற்கும், முதல் வருகைக்கும் மிக மிக நன்றி.
தொடர்ந்து வாருங்கள் கவிதைகள் காத்திருக்கும்..