23.2.10

பெற்றவளுக்கு.......

















நான்கு பக்க சுவருக்குள்
நலிவுற்றுக்கிடக்கிறேன்
திக்கெல்லாம் எனக்கு
இருளாகித்தெரிகிறது
விதி செய்த சதியா - அல்ல
தமிழ் மகன் என்ற தவறா

பத்துமாதம் கருவறையுள்
பக்குவமாய் சுமந்தாய்
இத்தரையில் பிரசவித்தாய்
சித்திரவதைக்காகவா......?

ஏது பிழை செய்தேன்
இது வரைக்கும் நானறியேன்
சந்தேகமென்று சொல்லி
சாட்டையடி அடிக்கிறார்கள்
உதைக்கிறார்கள்....
மிதிக்கிறார்கள்....
நகத்தைக் கூட
சும்மா விடவில்லை
ஏதேதோ எல்லாம்
என்னைச்சுற்றி நடக்கிறது

கூட இருந்தவர் பலரை
கூட்டிச்சென்றனர் உடையின்றி - அவர்
கெதி என்னென்னவோ

நான்.....இதுவரைக்கும்
துப்பாக்கி தூக்கி
விசைவில் அழுத்தியதில்லை
நீ அறிவாய்

வன்னி மண்ணில் வாழ்ந்து
தமிழை யாசித்தவன் - அங்கு
நித்தமும் நடந்த
யுத்தத்தை கண்டவன்
கொத்துக்கொத்தாய் தமிழரை
கொன்ற விதம் பார்த்தவன்

சிங்கள இராணுவத்தை-முன்பு
சத்தியமாய் கண்டதில்லை
இன்று தான் காண்கின்றேன்
பிணம் கூடத்தின்பார்கள்
குருதியைக்குடிப்பார்கள்
மனிதர் என்ற சொல்லிற்கே
அர்த்தமற்ற மிருகங்கள்

அம்மா
ஆயுதம் தூக்கி அடியென்று
ஆழ்மனசு சொல்கிறது
வன்முறையால் வன்முறையை
அடக்குவது உண்மையம்மா
சந்திரன் உடைந்தால்
நிலவில்லை
சிறைகுள்ளே என்
சுவாசம் அடங்கிப்போனலும்
மறு பிறவியில் உன் மகனாய்
பெற்று விடு அம்மா.


செம்பகம்

3 comments:

  1. உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன் , உங்களை பின் தொடர்கிறேன்
    http://vittalankavithaigal.blogspot.com
    vittalan@gmail.com

    ReplyDelete
  2. வார்த்தைகள் அடங்குகின்றன செண்பகம்.
    உணர்வுகள் எழுத்தாகி கண்ணீர் வடிக்கிறதே !

    ReplyDelete
  3. T.V.ராதாகிருஷ்ணன் said...
    vittalankavithaigal said...
    ஹேமா said...
    உங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete