
எட்டி எட்டி உதைக்கிறது காலம்
கணப்பொழுதில் ..............
திடுக்கென வலிக்கிறது துன்பங்கள்....
நான் முந்தி
நீ முந்தி-என
அடுக்கடுக்காய் சம்பவிக்கும்
துயரங்களில்
வாழ்வே வேண்டாமென்ற
ஏக்கங்கள் நடுவே
திடீரென சிரிக்க வைக்கும்
ஓர் மகிழ்வு...........
சிரிக்கத்துணிந்த போது
அதையும் மீறி வருகிறது
சோதனைகள்.....
வாசல் முழுதும்
நிறைந்து வழிகிறது
வேதனைகள் ....
மனதின் குழப்பங்களை
மனந்திறந்து பேச எத்தனிக்கையில்
உள்ளத்தையே ஊனமாக்கும்
சில மனிதர்கள்.....
யார் சரி ?
யாரை நம்புவது ?
எப்படிச்சொல்ல ?
மனிதர்களையே புரியாத போது
போடா மனிதாவென
மனிதனை வெறுக்க வைக்கிறது காலம்
இப்படி இப்படி
வலிக்காமலும்..............
சலிக்காமலும்................
வாழ்க்கை நகர்வதில்லை
துன்பங்கள் இணையாத வாழ்க்கை
என்றும் இல்லை....
இதுவே விதியென்று
வெளி மனதாய் முனகி விட்டு
காலபெருவெளியின்
நீள நெடுக்கில் நகர்கிறது
வாழ்க்கை.....
செம்பகம்