என் தாயுமானவரே
என் தோழனுமானவரே
எல்லாமுமாய் கலந்த
என் அன்புக்கணவரே !
முகிழ் உடைத்து
முகை விரித்து
இதழ் பரப்பி - உந்தன்
மணம் வீசிய
மகிழ்வான நாளல்லவா இன்று !
உமைப்பற்றி வரிக்க
வடிவெடுக்கும் வார்த்தைகளோ
அலையலையாய் திரண்டு
அடிபடுகிறது என்னோடு - ஒரு
புத்தகமே எழுதிடச் சொல்லி !
நிறுத்திக் கொள்கிறேன் - ஏனெனில்
இந்த நொடி போதாது
உந்தனை புகழ்ந்துரைக்க !
அன்பின் சிகரமே - உந்தன்
விடிகின்ற பொழுதெல்லாம்
வசந்தமாய் விடியட்டும் !
அடிவைக்கும் இடமெல்லாம்
அதிசயமே நிகழட்டும் !
அதிஸ்டங்கள் உம்மீது
அள்ளி அள்ளிச் சொரியட்டும் !
எண்ணிய எண்ணங்கள் யாவும்
எளிதாக நடக்கட்டும் !
சந்தோச சாரலெல்லாம்
உம் மீது வீசட்டும்!
நீ கண்ட துயரெல்லாம்
உமை விட்டு ஓடட்டும் !
நீ காணா இன்பமெல்லாம்
உமை வந்து சேரட்டும் !
கை தவறி போனதெல்லாம் - உந்தன்
கரம் மீண்டும் தழுவட்டும் !
வருகின்ற நற்காலம் - உந்தன்
வாசற்கதவை தட்டட்டும் !
வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
உடல் உள சுகத்தோடு
நோய் நொடியின்றி
நீங்கள்
நீடூழி காலம்
நிறைவோடு வாழ
இறைவனை இறைஞ்சி
வாழ்த்துகின்றேன்
என்
அன்புக் கணவனே
உந்தனை
இப்பிறந்த நாளினிலே !
அன்புடன் ..
செம்பகம்
No comments:
Post a Comment