24.8.11

இலக்கின் வழியே நானுமாய்.....





புதியதோர் வாழ்க்கையில்
புகுந்து சுழல
காலச் சக்கரம்
கை நீட்டி அழைக்கிறது..

நீண்ட நாட்களின் 
நிலையான காத்தல்
நிஜமானதாய் இப்போது...

கட்டுக் கட்டாய் 
கட்டி வைத்த
கற்பனைக் கட்டுக்களை
கட்டவிழ்க்கும் வாய்ப்பு
மிக அருகிலே.....

கால் தடக்கி வீழ்ந்தாலும்
கடந்து விடுவேன் -என்ற
திண்ணம் இப்போ
ஆழமாய் மனதில்..

விடிகின்ற பொழுதுகளை
வல்லமையோடு வரவேற்று
கழிகின்ற இரவுகளை
கைகொடுத்து அனுப்பி
காத்திருக்கிறேன் அந்த நொடிக்காய்..

நிமிடங்கள் வருடமாகிய
பொழுதுகள் மாறி
வருடங்களும் நிமிடமாக
பயணிக்கும் ஓர் நினைவு..

விலகாத தனிமையை மட்டும்
விரல் நுனியில் பற்றியவாறு
வாழ்க்கையின் படகு சற்று

நகர தொடங்குகிறது..

கைகோர்த்து விட்ட
அந்த சக்திக்கு
நன்றி சொல்லி -என்
இலக்கின் வழியே நானுமாய்.....

செம்பகம்

33 comments:

  1. சமூகத்தின் அலையோடு பயணிக்கும்
    உங்கள் வாழ்க்கை இலக்கு அருமை
    சகோதரி.

    ReplyDelete
  2. இலக்கு நோக்கி எங்களையும் அழைத்துச் சென்ற கவிதை..

    ReplyDelete
  3. விலகாத தனிமையை மட்டும் விரல் நுனியில் என்று அலைபாயும் வேதனையை அழகுற சொல்லிவிட்டீர்கள்.

    ReplyDelete
  4. நீண்ட இரவு கழிந்து வந்த, விடியலில்
    நகர தொடங்கிய வாழ்க்கையின் படகு, உங்களை இலக்கு நோக்கி கொண்டு சேர்க்கட்டும்..

    ReplyDelete
  5. விலகாத தனிமையை மட்டும்
    விரல் நுனியில் பற்றியவாறு
    வாழ்க்கையின் படகு சற்று
    நகர தொடங்குகிறது..

    கைகோர்த்து விட்ட
    அந்த சக்திக்கு
    நன்றி சொல்லி -என்
    இலக்கின் வழியே நானுமாய்...// அருமையான சொல்லாடல்..
    அசத்தல் கவிதை..

    ReplyDelete
  6. இலக்கு கவிதை..அசத்தல்...

    ReplyDelete
  7. விலகாத தனிமையை மட்டும்
    விரல் நுனியில் பற்றியவாறு
    வாழ்க்கையின் படகு சற்று
    நகர தொடங்குகிறது..


    ....அருமையான கவிதைங்க.

    ReplyDelete
  8. //கால் தடக்கி வீழ்ந்தாலும்
    கடந்து விடுவேன் -என்ற
    திண்ணம் இப்போ
    ஆழமாய் மனதில்..//

    நிச்சயம் தாங்கள் அனைத்துத் தடைகளையும் கடந்து விடுவீர்கள். வாழ்த்துக்கள். vgk

    ReplyDelete
  9. இலக்கு நோக்கி எல்லோரையும் பயணிக்க வைக்கும் கவிதை.

    ReplyDelete
  10. //விடிகின்ற பொழுதுகளை
    வல்லமையோடு வரவேற்று
    கழிகின்ற இரவுகளை
    கைகொடுத்து அனுப்பி
    காத்திருக்கிறேன் அந்த நொடிக்காய்//

    காத்திருக்கும் அந்த நொடி
    கண்டிப்பாய் வரும் அன்பரே!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. சந்தோசத்தை எட்டிப் பார்க்கும் சந்தோசம்

    உணர்வுகள் அருமை சகோதரி

    ReplyDelete
  12. விலகாத தனிமையை மட்டும்
    விரல் நுனியில் பற்றியவாறு
    வாழ்க்கையின் படகு சற்று

    நகர தொடங்குகிறது..//

    நம்பிக்கை துளிர்விடும் வரிகள் கவிதையில் அசத்தலாய் சகோ

    ReplyDelete
  13. விலகாத தனிமையை மட்டும்
    விரல் நுனியில் பற்றியவாறு
    வாழ்க்கையின் படகு சற்று

    நகர தொடங்குகிறது..//

    நகர தொடங்கிய படகு ... மகிழ்ச்சியில் தள்ளாடியவாறே இலக்கை வேகமாக அடையட்டும்... கவிதை கலக்கல் சகோ

    ReplyDelete
  14. நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html

    ReplyDelete
  15. கவிதை உணர்கின் உச்சம்!!

    ReplyDelete
  16. கால் தடக்கி வீழ்ந்தாலும்
    கடந்து விடுவேன் -என்ற
    திண்ணம் இப்போ
    ஆழமாய் மனதில்..//

    அழகாய் இருக்குது........ரசித்தேன்..

    ReplyDelete
  17. அன்பு உறவுகளே உங்கள் வருகைக்கும்,கருத்துரைக்கும்,
    எனது அன்பான நன்றிகள்...

    ReplyDelete
  18. அருமையான கவிதை

    ReplyDelete
  19. அருமையான வரிகள்.......

    ReplyDelete
  20. மிக மிக அருமை
    நல்லதொரு தன்னம்பிக்கை ஊட்டும் பதிவு
    வார்த்தைகள் மிக லாவகமாக வந்துவிழுந்து
    கவிதைக்கு மெருகூட்டுகிறது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. வாழ்த்துகள்... புதியதொரு கைபிடித்தல் வாழ்வின் இலக்கை என்றும் மகிழ்வாக எட்டிபிடிக்க ஒன்றாக இணைந்திருக்கட்டும்...

    ReplyDelete
  22. மிகவும் நல்ல கவிதை. ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. கால் தடுக்கி வீழ்ந்தாலும்
    கடந்து விடுவேன் -என்ற
    திண்ணம் இப்போ
    ஆழமாய் மனதில்..
    நல்ல வரிகள். . .அருமை

    ReplyDelete
  24. ////விலகாத தனிமையை மட்டும்
    விரல் நுனியில் பற்றியவாறு
    வாழ்க்கையின் படகு சற்று
    நகர தொடங்குகிறது...////

    உண்மை தான் நண்பரே..
    விட்டு விலாகதது அது மட்டும் தான்
    தனியாய் வந்தோம்... இருப்பது எப்படியாயினும்
    போவதும் தனிமையிலே தானே... கவிதை நன்று...

    ReplyDelete
  25. >>விடிகின்ற பொழுதுகளை
    வல்லமையோடு வரவேற்று
    கழிகின்ற இரவுகளை
    கைகொடுத்து அனுப்பி
    காத்திருக்கிறேன் அந்த நொடிக்காய்..



    வார்த்தை விளையாடுதே?

    ReplyDelete
  26. அழகான அர்தம் பொதிந்த கவிதை நம்பிக்கையுடன் இரவை அனுப்பி காத்திருக்கும் விடியல் பொழுதைப்போல் தொடருங்கள்!

    ReplyDelete
  27. // நிமிடங்கள் வருடமாகிய
    பொழுதுகள் மாறி
    வருடங்களும் நிமிடமாக
    பயணிக்கும் ஓர் நினைவு..//

    அற்புதமான கற்பனை! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. கைகோர்த்து விட்ட
    அந்த சக்திக்கு
    நன்றி சொல்லி -என்
    இலக்கின் வழியே நானுமாய்.....
    //
    நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  29. தனிமையை விரல் நுனியில் பற்றிக் கொண்டு தொடருகின்றீர்கள். அதுவும் ஒருவகையில் நல்லதே. கூட்டுச் சேருகின்ற பயணம் இடையூறு பல தந்துநிற்கும். தொடரும் பயணம் வெற்றியுடன் திகழ வாழ்த்துகள்

    ReplyDelete
  30. ''..விலகாத தனிமையை மட்டும்
    விரல் நுனியில் பற்றியவாறு
    வாழ்க்கையின் படகு சற்று


    நகர தொடங்குகிறது...''
    பயணம் இனிக்கட்டும்..வாழ்த்துகள்..
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  31. தடைகளைத் தாண்டி முன்னேறத் துடிக்கும் உள்ளத்தின் உணர்வுகளை இக் கவிதை மூலம் சொல்லியிருக்கிறீங்க.

    ReplyDelete