22.8.11

ஆதிக்க அறிமுகங்கள்..








நிரந்தரமாய் தொலைத்தோம் -எங்கள்
நிம்மதியான வாழ்வை..
நீதி தேடி அலைகிறோம்
நேர்மையோடு எவருமில்லை..

அன்று தொட்டு
இன்று வரை
காண்பதெல்லாம் ...
கேட்பதெல்லாம்..
நிகழ்வதெல்லாம்..
உயிர் பறிப்புக்களும் ..
குருதி பாய்ச்சலுமே...

சபிக்கப்பட்டு படைக்கப்பட்டதா??-அல்ல
சாக்கடை நாட்டில் வாழ்வதாலோ??
இலங்கை ஜனநாயகத்தை
புகழ்ந்து உரைக்க
வரி ஒன்றேனும்
இல்லை தமிழில்..
தூக்கி கொடுத்து விட்டு
தூரத்தில் நின்று
வேடிக்கை பார்க்கிறது
பிரித்தானியா????

மரண வாழ்வை
முழுதாய் பரிசளித்து
மார்தட்டி சிரிக்கிறது!!!!


புதிய புதிய அறிமுகங்களாய்
இன அழிப்பிற்கும்...
உயிர் உறிஞ்சலுக்கும்....
கட்டவிழ்த்தி விடுவது
ஆதிக்க வரலாறு..-இப்போ
கிறீஸ் மனிதனாய்
உருவெடுத்திருக்கிறது..
ஆயிரம் கேள்விகளோடு
விடை தெரியாத
மர்மங்களாக இன்றுவரைக்கும்..

குண்டுமழைக்குள்ளும்..
இரத்த ஆற்றிலும்
மூழ்கி குளித்த
தமிழ் நங்கையர்
அச்ச உணர்வோடு
அல்லல் படுவதை எண்ண
மனம் வலிக்கிறது..

எங்கள் ஏக்கமும்..
எங்கள் கண்ணீரும்..
எங்கள் அச்சங்களும்..
எங்கள் பெயர்வுகளும்..
எங்கள் உயிர் பறிப்புக்களும்..
சுதந்திரமற்ற வாழ்க்கையும்..
முடிவு பெறாத
முடிவிலியாகி
சிங்களத்து பிடியில்
தமிழர் நாடித்துடிப்புகள்
தொக்கி நிற்கிறது..

இருந்தும்!!!
எஞ்சியிருக்கும் உயிரோடு
உரிமைகள் கிடைக்கும்-என்ற
நம்பிக்கை கொண்டு
தமிழர் சுவாசங்கள்
இன்றும் சுவாசித்துக்கொள்கிறது..
நம்பிக்கையே வாழ்க்கை ஆனதால்!!!!

செம்பகம்










25 comments:

  1. நம்பிக்கை மீது நம்பிக்கை இழந்து விடாமல் இருக்க - ஏதேனும் ஒரு திசையிலிருந்தாவது சாதகக்காற்று வீசட்டும்.

    ReplyDelete
  2. வேதனை தரும் வரிகள்

    கண்டிப்பாய் விடிவு வரும்

    வேதனை தரும் கொடியவர்கள்
    விலகியே செல்வார்கள்

    ReplyDelete
  3. அரக்கன் ஆதிக்க வெறியன்
    துரோகி நயவஞ்சகன் நாதாரி
    இத்தனைக்கும் பொருள் விளங்காது
    தத்தளித்த காலம் ஒன்று இருந்தது
    அனைத்தும் தான்தான் என
    இலங்கை ராணுவம் நிரூபித்தபின்னே
    அந்த அ நாகரீக வார்த்தைகளுக்கு
    இப்போதெல்லாம் அர்த்தம் தேடி அலைவதில்லை
    மனம் கனக்கச் செய்து போகும் பதிவு

    ReplyDelete
  4. நம் நம்பிக்கை வீதியில் தென்றல் தவழும் நாள் வரும் சகோதரி.
    காத்திருப்போம்.....

    ReplyDelete
  5. இன்றும் சுவாசித்துக்கொள்கிறது..
    நம்பிக்கையே வாழ்க்கை ஆனதால்!!!!-

    அருமையான வரிகள்,..
    பாராட்டுகள்..

    ReplyDelete
  6. வேதனை கொண்ட வரிகள்....

    ReplyDelete
  7. நம்பிக்கைகள் பலிக்கட்டும்!

    ReplyDelete
  8. //நிரந்தரமாய் தொலைத்தோம் -எங்கள்
    நிம்மதியான வாழ்வை..
    நீதி தேடி அலைகிறோம்
    நேர்மையோடு எவருமில்லை..//

    ஆரம்ப வரிகளே முழு கவிதைக்கும்
    முன்னுரை போல இருக்கிறது

    வாழ்த்துக்கள்

    உங்கள் மன வலியை புரிந்துக் கொள்கிறேன்.

    வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  9. ஏக்கப் பெருமூச்சுகள்
    எரிமலை யாகும் ஒருநாள்
    அந்நாள் விடிவெள்ளி தோன்றும் நன்னாள்
    வரும்! வரும்! வரும்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. சிங்களத்து பிடியில்
    தமிழர் நாடித்துடிப்புகள்
    தொக்கி நிற்கிறது..


    ..... விரைவில் இந்த நிலைமை மாறி விடியல் வர வேண்டுமே, இறைவா!

    ReplyDelete
  11. சொல்லி அழ வார்த்தையில்லை
    சோகத்தைச் சுட்டெரிக்க இன்னும்
    சொக்கன் வரம் கிடைக்கவில்லை
    கக்கனும் இன்று இல்லை நல்ல
    காமராசுவும் இங்கில்லை.
    கேட்பதற்கு நாதியில்லை
    கேட்க திராணியுள்ள குள்ள
    நரிகளுக்கோ பங்காளிச் சண்டைக்கே
    நேரம் போதவில்லை......

    ReplyDelete
  12. ஈழம் என்றாலே சோகம்தானா?என்று மாறுமோ?கடவுளே?

    ReplyDelete
  13. மன வேதனை கொண்ட வரிகள்...

    ReplyDelete
  14. நம்பிக்கையே வாழ்க்கை ஆனதால்!!!!

    எத்தனை நாள் தான் வாழ்வது..பார்போம் காலம் வரும்..

    கவிதை அருமை..

    ReplyDelete
  15. நம்பிக்கை என்றும் வீண் போகாது என்பார்கள்.
    நாளைப்பொழுதுதாவது நல்லபொழுதாக விடியட்டும் என்று காத்திருப்போம்.

    ReplyDelete
  16. நரகர்கள் பிடியிலிருந்து நல்லவர்களை காப்பாற்று இறைவா .... எத்தனையோ பேரை இப்படி நிம்மதி இல்லாமல் ஆக்கிவிட்ட அந்த நாதாரிகள் நாசமாக போகட்டும் .....

    ReplyDelete
  17. இந்த நூற்றாண்டிலும் இந்த அநியாயத்தை உலகமே வேடிக்கை பார்ப்பதே வாடிக்கையாக்கி கொண்டிருக்கிறது... அதென்ன ஒரு பக்கம் வாழ்ந்து கொண்டு இன்னோரு பக்கம் செத்துக்கொண்டு ... இதற்கு இறைவா உலகை முழுவதுமாய் அழித்துவிடலாம் அல்லவா

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. காலத்திற்கேற்ற கவிதை...சமகால கிறிஸ் மனிதன் முதற் கொண்டு, பிரித்தானியாவின் வருகையின் பின்னர் தமிழர் வாழ்வில் ஏற்கப்பட்ட பேரினவாதத்தின் கழுகுப் பிடியினையும் பாடி நிற்கிறது.

    ReplyDelete
  20. நம்பிக்கைகளும் நம்பிக்கைநோக்கிய நகர்வுகளும் வீண்போவதில்லை.

    ReplyDelete
  21. இருந்தும்!!!
    எஞ்சியிருக்கும் உயிரோடு
    உரிமைகள் கிடைக்கும்-என்ற
    நம்பிக்கை கொண்டு
    தமிழர் சுவாசங்கள்
    இன்றும் சுவாசித்துக்கொள்கிறது..
    நம்பிக்கையே வாழ்க்கை ஆனதால்!!!!//கவிதை அருமை..

    ReplyDelete
  22. வலி நிறைந்த கவிதை சகோ....

    ReplyDelete
  23. valikaL வலிகள் மீண்டும் மீண்டும்

    ReplyDelete
  24. எனது அன்பான உறவுகளே உங்கள் பின்னூட்டத்திற்கும்,வருகைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..

    ReplyDelete