1.10.11

இறக்கவைத்து, இறந்துபோன நம்பிக்கை...




பாகம் 1





















அகதி என்று
பெயர் தாங்கி
பெயர்ந்தோம்....
இன்றும் !!
அகதியென்றே பொறிக்கப்பட்டு
அலைகிறோம் நாடெல்லாம்.......

எங்கள் நிலம்
எங்கள் உரிமை
எமக்கு வேண்டும்.........
பேசினோம் பேசினோம்
முறை பலதாய்
பேசினோம் ...
செவிகளில் ஏற்றிடாத
செவிடர்கள் ஆனார்கள் ..

செவிப்பறை உடைய
சங்கெடுத்து ஊதினோம்..
எதிர்திசையாய் சங்கோடு
எமையழிக்க வந்தார்கள்..
பலமோடு பலமாக
பிரபஞ்சமே அதிர
பறைசாற்றினோம் பாரெல்லாம்..

உரிமை கேட்டு
வலிமை பெற்று
உயரப் பறந்தோம்..
வியந்து பார்க்க மட்டுமே -உலகின்
விழிகள் இருந்தது-தமிழர்
நீதியின் பக்கம்
தலைசாய்க்க தலைகள்
நேர்மையற்று கிடந்தது..

தொப்புள் கொடி
உறவென்று நம்பினோம்...
தொப்பை அறுத்து
சதிசெய்தது மட்டுமே
அவர்களின் கதை..

ஆலமர ஆணிவேராய்
ஆழவேரோடிய நம்பிக்கை-ஒவ்வோர்
தமிழர் மூச்சுள்ளும்
தலை நிமிர்ந்து நின்றது..

வெல்வோம் உரிமையை
கட்டுவோம் அரசொன்று..
பறப்போம் சுதந்திரமாய் -என
வருடங்கள் முப்பதும் தாண்டி
வளர்த்துக் கொண்டோம்..

துளி ஒன்றேனும்
துளிர் விடவில்லை-எம்
நம்பிக்கை மீதான
ஐயங்கள் என்று!!!

உண்மைகள் புரிந்து
கைகொடுக்கும் உலகென்று
கடைசி வரையும்
கனவு கண்டோம்..
இறுதி வரையும்
உறுதி கொண்டோம்..


















அதனாலே.....
நிகழ்பவை எல்லாமே
நிரந்தர விடுதலைக்கே -என
சகிக்கமுடியாத கொடுமைகளையும்
சமாளித்து வாழ்ந்தோம்
நாளை எமகென்றே...

இழந்தோம் அத்தனையும்
நம்பிக்கை வைத்தே-பின்னே
நம்பிக்கையே இறந்துபோனது!!!


தொடரும்.....

செம்பகம்..

29 comments:

  1. தொப்புள் கொடி
    உறவென்று நம்பினோம்...
    தொப்பை அறுத்து
    சதிசெய்தது மட்டுமே
    அவர்களின் கதை..//

    படிப்பதற்கு சங்கடமாக இருந்தாலும்
    சத்தியமான உண்மை

    ReplyDelete
  2. ஆறாத துயரம்.
    ஆற்ற முடியாத துக்கம். நம்பிக்கை வழியில் பயணம்.
    காலம் மாறும்.
    நாடு மலரும்.

    ReplyDelete
  3. வலிமிகுந்த வரிகள் சகோ

    //செவிப்பறை உடைய
    சங்கெடுத்து ஊதினோம்..
    எதிர்திசையாய் சங்கோடு
    எமையழிக்க வந்தார்கள்..//

    யார் பாதிக்கப்பட்டுயிருக்கிறார்களே
    அவர்கள் எழுதும்போது தான்
    அந்த வரிகளுக்கு உண்மையான உயிர் பிறக்கிறது

    ReplyDelete
  4. தமிழர்களை தமிழ் நாட்டிலேயே அகதிகள் என்று கொடுமை படுத்தினால்; தொப்புள் கோடியாவது, வெங்காயமாவது...

    ReplyDelete
  5. சொந்த மண்ணின் நினைவைக்
    கனவைப் போலத் துடைத்தெறிவதன்
    வலியை அறிவீர்களா

    அகதி முகாமில் பிறந்து அகதி முகாமில் வளர்ந்து
    முகாமின் மதிற்சுவரைத் தாண்ட அனுமதிக்கப்படாத
    ஈழத்தமிழ் மக்களை அகதி என்பீர்களா கைதி என்பீர்களா

    உங்கள் கவிதை வாசித்தவுடன் எனக்கு தொன்றியவை

    ReplyDelete
  6. மனம் வலிக்கத்தான் செய்கிறது செண்பகம். செய்வதறியாமல் நிற்கும் மக்களையும் இறந்த நம்பிக்கையையும் உணரும்போது இரத்தக்கண்ணீர் வழிகிறது விழிகளில்.

    ReplyDelete
  7. நீதியின் பக்கம்
    தலைசாய்க்க தலைகள்
    நேர்மையற்று கிடந்தது..//

    உண்மை வரிகள்!!!!!

    அகதியின் வாழ்க்கையின் வலிகளை உணரமுடிகிறது

    ReplyDelete
  8. எமது இழப்புக்களை,ஏக்கங்களை எதிர்பார்ப்புக்களை நச்செனச் சொல்லி இருக்கிறீர்கள்

    ReplyDelete
  9. வேதனையாக இருக்கிறது.

    ReplyDelete
  10. மனதை சங்கடப்படுத்தும் தங்களின் வேதனை வரிகள் நன்கு புரிகிறது. இனியாவது சீக்கரமாக நல்ல காலம் பிறக்கட்டும்.

    ReplyDelete
  11. வலி நிறைந்த வரிகள்!
    அதே வலி என் நெஞ்சிலும்.

    ReplyDelete
  12. ஒவ்வொரு வரியிலும்
    வலியின் வேதனையை
    தாங்கி நிற்க்கிறது
    விடியும் நாளை
    நமது நாள்
    என்ற உணர்வோடு..!

    கவிதை மிக அருமை...

    படித்து முடிக்கும் கணம்
    கவிதைச் சொல்லும் வலி
    என் மனதில்...

    ReplyDelete
  13. இனிய இரவு வணக்கம் அக்காச்சி,

    எங்களின் இறந்த கால நரக ஞாபகங்களையும் நாம் நிமிர்ந்து வாழ்ந்த சொர்க்க வாழ்வின் இனிமைப் பொழுதுகளின் வீரம் முறுக்கேறிய கணங்களையும் நினைவுபடுத்திக் கவிதை பயணிக்கிறது.
    அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  14. உங்களது வலியை வரிகளில் பார்க்கும்போதே வலிக்கிறதே... நேரில் சந்தித்த கொடுமைகளை வெறும் வரிகள்... எத்தனை ஜென்மங்களானாலும் ஆறா வடுவாக மனதில் நீடித்த விட்ட கொடுமை.. கண்ணிர் வர வைக்கிறது சகோ

    ReplyDelete
  15. உண்மை வரிகள்...உணர்வு வரிகள் சகோதரி...

    ReplyDelete
  16. வலிக்கிறது...
    படம் வலியை இன்னும் அதிகரிக்கிறது.

    வலித்தாலும் உண்மைதான் என்று உணரும் போது வலியின் வீரியம் கூடுகிறது விதியை நொந்தபடி..

    ReplyDelete
  17. சத்தியமான வரிகள் படம் வேதனையை தருகிறது

    ReplyDelete
  18. தொலைத்தவை என்பதை விட தொலைக்கப்பட்டவை...வலி நிறைந்த கவிதை!

    ReplyDelete
  19. மனம் வலிக்கிறது சகோதரி. செய்வதறியாமல் நிற்கும் மக்களையும் அவர்களின் நம்பிக்கையையும் உணரும்போது விழிகளில் கண்ணீர் வழிகிறது.

    ReplyDelete
  20. ////உரிமை கேட்டு
    வலிமை பெற்று
    உயரப் பறந்தோம்..
    வியந்து பார்க்க மட்டுமே -உலகின்
    விழிகள் இருந்தது-தமிழர்
    நீதியின் பக்கம்
    தலைசாய்க்க தலைகள்
    நேர்மையற்று கிடந்தது..///

    உண்மைதான் தோழி...
    சுயநலச் சுடுகாட்டில் -தமிழ்
    இனமானம் உயிரோடு
    எரிக்கப்பட்டுவிட்டது?!!

    கவலை வேண்டாம்
    பீநீக்காய் உயிர்பெறும்...
    பேதமைகளை வென்றே
    சாதனைகள் புரியவே!

    ReplyDelete
  21. வலிகளைப் பதிவாக்குகிறீர்கள் செண்பகம்.நல்லது !

    ReplyDelete
  22. எப்படி சொல்வது என்று தெரியவில்லை. உங்கள் வலிகள் ரசிக்கும்படி இருக்கிறது என்றா?
    வெட்கப்படுகிறேன் எண்கள் கையாலாகாத்தனத்தை எண்ணி.

    ReplyDelete
  23. செண்பகம் சுகம்தானே.எங்கே ஆளைக் காணோம் !

    ReplyDelete
  24. hii.. Nice Post

    Thanks for sharing

    For latest stills videos visit ..

    www.ChiCha.in

    www.ChiCha.in

    ReplyDelete
  25. வலி மிகுந்த வரிகள் மிகவும் மனதுக்கு வேதனையாக உள்ளன.
    சிந்திக்க வைக்கும் சிறந்ததோர் ஆக்கம்.

    http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.ht

    RESPECTED MADAM,

    I WOULD LIKE TO SHARE ANOTHER AWARD WITH YOU.

    PLEASE VISIT MY BLOG & ACCEPT IT.

    THANKING YOU,
    VGK

    ReplyDelete
  26. Congratulationssssss for getting AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

    ReplyDelete
  27. Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

    ReplyDelete
  28. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (01/07/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete