9.6.11

வாழ்க்கை
























எட்டி எட்டி உதைக்கிறது காலம்
கணப்பொழுதில் ..............
திடுக்கென வலிக்கிறது துன்பங்கள்....
நான் முந்தி
நீ முந்தி-என
அடுக்கடுக்காய் சம்பவிக்கும்
துயரங்களில்
வாழ்வே வேண்டாமென்ற
ஏக்கங்கள் நடுவே
திடீரென சிரிக்க  வைக்கும்
ஓர் மகிழ்வு...........

சிரிக்கத்துணிந்த போது
அதையும் மீறி வருகிறது
சோதனைகள்.....
வாசல் முழுதும்
நிறைந்து வழிகிறது
வேதனைகள் ....

மனதின் குழப்பங்களை
மனந்திறந்து பேச எத்தனிக்கையில்
உள்ளத்தையே ஊனமாக்கும்
சில மனிதர்கள்.....

யார் சரி ?
யாரை நம்புவது ?
எப்படிச்சொல்ல ?
மனிதர்களையே புரியாத போது
போடா மனிதாவென
மனிதனை வெறுக்க வைக்கிறது காலம்

இப்படி இப்படி
வலிக்காமலும்..............
சலிக்காமலும்................
வாழ்க்கை நகர்வதில்லை
துன்பங்கள் இணையாத வாழ்க்கை
என்றும் இல்லை....
இதுவே விதியென்று
வெளி மனதாய் முனகி விட்டு
காலபெருவெளியின்
நீள நெடுக்கில் நகர்கிறது
வாழ்க்கை.....     

செம்பகம்

78 comments:

  1. வாழ்க்கை முழுக்க நிரம்பி வழிகிற சோகம். விதி எனலாம் இல்லை மதி கொண்டு வெல்லலாம். சோக கவிதை சுகமாகட்டும்.

    ReplyDelete
  2. தமிழ் உதயம் said...
    வாழ்க்கை முழுக்க நிரம்பி வழிகிற சோகம். விதி எனலாம் இல்லை மதி கொண்டு வெல்லலாம். சோக கவிதை சுகமாகட்டும்.

    தமிழ் உதயம் said...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  3. வலிக்காமலும்..............
    சலிக்காமலும்................
    வாழ்க்கை நகர்வதில்லை!!


    வாழ்க்கையின் தத்துவமே இதுதான் நண்பா.

    ReplyDelete
  4. முனைவர்.இரா.குணசீலன் said...
    வலிக்காமலும்..............
    சலிக்காமலும்................
    வாழ்க்கை நகர்வதில்லை!!


    வாழ்க்கையின் தத்துவமே இதுதான் நண்பா.


    முனைவர்.இரா.குணசீலன் அவர்களே
    உங்கள் முதல் வரவிற்கும் கருத்திற்கும் நன்றிகள்

    ReplyDelete
  5. செண்பகம் சுகம்தானே.எங்க ஆளையே காணேல்ல நிறைய நாளா !

    பதிவே சொல்கிறது வாழ்வின் வேதனையை.
    தொடர்ந்து பதிவிடுங்கள்.மனமும் சுகமாகும் !

    ReplyDelete
  6. vidivelli said...
    ஹேமா said...
    செண்பகம் சுகம்தானே.எங்க ஆளையே காணேல்ல நிறைய நாளா !

    பதிவே சொல்கிறது வாழ்வின் வேதனையை.
    தொடர்ந்து பதிவிடுங்கள்.மனமும் சுகமாகும் !


    நண்பியே நான் நல்ல சுகம்....
    வேறு இடத்திற்குச் சென்றபோது இன்ரனெட் வசதியில்லாமல் போய்விட்டது....
    வசதியிருக்கும் போது வருவேன்..
    நீங்கள் மறக்காமல் இருந்ததற்கு நன்றி..
    உங்கள் கருத்திற்கும் வருகைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  7. //வலிக்காமலும்..............
    சலிக்காமலும்................
    வாழ்க்கை நகர்வதில்லை//

    ஆம். இன்ப துன்பங்கள் கலந்த வாழ்க்கையை நல்ல கவிதையாகப் படைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //வலிக்காமலும்..............
    சலிக்காமலும்................
    வாழ்க்கை நகர்வதில்லை//

    ஆம். இன்ப துன்பங்கள் கலந்த வாழ்க்கையை நல்ல கவிதையாகப் படைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.



    ஐயா உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் எனது நன்றிகள்....

    ReplyDelete
  9. வாழ்க்கையில் வலி இருக்கலாம், வலிகளே வாழ்க்கையானால்................கவிதைகளில் உணர்த்தியுள்ளீர்கள் நன்றாக உள்ளது...

    ReplyDelete
  10. நண்பா ஹெட்டர் போட்டோ பார்க்க மனசு வலிக்கிறது ...

    ReplyDelete
  11. //வலிக்காமலும்..............
    சலிக்காமலும்................
    வாழ்க்கை நகர்வதில்லை
    துன்பங்கள் இணையாத வாழ்க்கை
    என்றும் இல்லை....//

    இதுதான் நிதர்சனம் சகோ. துன்பங்களையும் சோகங்களையும் மறக்கச்செய்யும், ஆறுதல்தரும் சக்தி தோழமைக்குண்டு சகோ. தங்கள் மனதில் மகிழ்சியும் சுகமும் உண்டாக வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  12. கவிதை படிக்கும்போது மனது வலிக்கிறது.. நண்பரே...

    தொடர்ந்து எழுதுங்கள்
    வறுமையை சொகங்களை சொல்கிற கவிதைகள் என்றும் காலத்தால் அழியாமல் இருக்கும்...

    ReplyDelete
  13. ////
    இதுவே விதியென்று
    வெளி மனதாய் முனகி விட்டு
    காலபெருவெளியின்
    நீள நெடுக்கில் நகர்கிறது
    வாழ்க்கை.../////


    100 சதவீதம் உண்மை...

    ReplyDelete
  14. வந்தாச்சு..சேர்த்தாச்சு....

    ReplyDelete
  15. கந்தசாமி. said...
    வாழ்க்கையில் வலி இருக்கலாம், வலிகளே வாழ்க்கையானால்................கவிதைகளில் உணர்த்தியுள்ளீர்கள் நன்றாக உள்ளது...

    நண்பா ஹெட்டர் போட்டோ பார்க்க மனசு வலிக்கிறது




    !!!நண்பா உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் எனது நன்றிகள்...

    போட்டோவைப்பார்க்கும் போது மனசு வலிக்கிறதாய் சொல்லியிருந்தீர்கள்...
    தோழா எப்படித்தான் அந்த கொடுமைகளை மறக்க முடியும்...
    அத்தனையும் நேரில் கண்டு அனுபவித்தவற்றை எவரிடமும் சொல்லி மாளாத போது எழுத்துக்களாய் வரித்து ஆற்ற நினைத்தேன்...
    இதனால் தான் இந்த வலைப்பதிவை ஆரம்பித்தேன்..
    தொடர்ந்தும் எனது ஆக்கங்கள் உங்களுக்காக காத்திருக்கும்....

    ReplyDelete
  16. கடம்பவன குயில் said...
    //வலிக்காமலும்..............
    சலிக்காமலும்................
    வாழ்க்கை நகர்வதில்லை
    துன்பங்கள் இணையாத வாழ்க்கை
    என்றும் இல்லை....//

    இதுதான் நிதர்சனம் சகோ. துன்பங்களையும் சோகங்களையும் மறக்கச்செய்யும், ஆறுதல்தரும் சக்தி தோழமைக்குண்டு சகோ. தங்கள் மனதில் மகிழ்சியும் சுகமும் உண்டாக வாழ்த்துக்கள்

    நண்பா உங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும், ஆறுதலிற்கும் எனது நன்றிகள்

    தொடர்ந்தும் எனது ஆக்கங்கள் உங்களுக்காக காத்திருக்கும்....

    ReplyDelete
  17. கவிதை வீதி # சௌந்தர் said...
    கவிதை படிக்கும்போது மனது வலிக்கிறது.. நண்பரே...

    தொடர்ந்து எழுதுங்கள்
    வறுமையை சொகங்களை சொல்கிற கவிதைகள் என்றும் காலத்தால் அழியாமல் இருக்கும்...

    இதுவே விதியென்று
    வெளி மனதாய் முனகி விட்டு
    காலபெருவெளியின்
    நீள நெடுக்கில் நகர்கிறது
    வாழ்க்கை.../////


    100 சதவீதம் உண்மை...

    !!!நண்பா உங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும், ஆறுதலிற்கும் எனது நன்றிகள்
    தொடர்ந்தும் எனது ஆக்கங்கள் உங்களுக்காக காத்திருக்கும்....!!!!

    ReplyDelete
  18. NKS.ஹாஜா மைதீன் said...
    வந்தாச்சு..சேர்த்தாச்சு....



    !!!நண்பா உங்கள் முதல் வருகைக்கு எனது நன்றிகள்...

    அப்புறம் வந்திட்டா, சேர்ந்திட்டா என்ன செய்யணும்????

    ReplyDelete
  19. தங்களது யதார்த்தமான கவிதை நடையில் வாழ்க்கை குறித்த கவிதை மிகவும் அருமை..!! தொடர்ந்து நிறைய எழுத வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்..!!

    ReplyDelete
  20. நிரம்பி வழிகிறது... விரத்தி...

    உங்க வலைதலைப்பும் அதற்கான படமும் மிக அருமை சென்பகம் பறவை எனக்கும் மிக பிடிக்கும்.

    ReplyDelete
  21. பிரவின்குமார் said சொன்னது ...
    தங்களது யதார்த்தமான கவிதை நடையில் வாழ்க்கை குறித்த கவிதை மிகவும் அருமை..!! தொடர்ந்து நிறைய எழுத வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்..!!



    நண்பா!!!! உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்..
    தொடர்ந்து எழுதுகிறேன் உங்கள் ஊக்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்!!!

    ReplyDelete
  22. சி.கருணாகரசு said சொன்னது ......
    நிரம்பி வழிகிறது... விரத்தி...

    உங்க வலைதலைப்பும் அதற்கான படமும் மிக அருமை சென்பகம் பறவை எனக்கும் மிக பிடிக்கும்.






    நண்பா!!!! உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்..

    நண்பரே மிக மிக சந்தோசம்
    நம்ம தேசியப்பறவையை எப்படி மறப்பது????????????

    ReplyDelete
  23. //சிரிக்கத்துணிந்த போது
    அதையும் மீறி வருகிறது
    சோதனைகள்.....
    வாசல் முழுதும்
    நிறைந்து வழிகிறது
    வேதனைகள் ....//

    வேதனையும் சோதனையும் நிறைந்ததுதான்வாழ்க்கை. அதையும்மீறி வென்றுகாட்டுவதுதான் இவ்வுலகவாழ்க்கை. ஒவ்வொருதருக்கும் ஒவ்வொருவகையில் வந்துபோகும் சிலருக்கு ஆரா ரணமாகக்கூடும்.


    கவிதைக்குள் வேதனை நிரம்பியிருக்கிறது

    ReplyDelete
  24. அன்புடன் மலிக்கா said.. சொன்னது.
    //சிரிக்கத்துணிந்த போது
    அதையும் மீறி வருகிறது
    சோதனைகள்.....
    வாசல் முழுதும்
    நிறைந்து வழிகிறது
    வேதனைகள் ....//

    வேதனையும் சோதனையும் நிறைந்ததுதான்வாழ்க்கை. அதையும்மீறி வென்றுகாட்டுவதுதான் இவ்வுலகவாழ்க்கை. ஒவ்வொருதருக்கும் ஒவ்வொருவகையில் வந்துபோகும் சிலருக்கு ஆரா ரணமாகக்கூடும்.


    கவிதைக்குள் வேதனை நிரம்பியிருக்கிறது

    சகோ/நீண்டநாட்களிற்குப் பின் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி.....
    நலம் தானே?????????????

    உங்கள் வருகைக்கும், கருத்திற்கும், ஆறுதலிற்கும் எனது நன்றிகள்

    ReplyDelete
  25. தேடினேன் கிடைக்க வில்லை-ஆனால்
    திடீரென வந்து விட்டீர்
    பாடினேன் நன்றி தன்னை-நீர்
    பாராட்டி மகிழந்தீர் என்னை
    வாடினேன் உங்கள் கவிதை-மன
    வயலினில் சேக விதை
    நாடியே விதைத்தீர் நீங்கள்-என்றும்
    நலமுற வாழ்க வாழ்க

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  26. வலிகளை வார்த்தைகளில் வடித்துள்ளீர்கள்... அருமையான கவிதை

    ReplyDelete
  27. மனதின் குழப்பங்களை
    மனந்திறந்து பேச எத்தனிக்கையில்
    உள்ளத்தையே ஊனமாக்கும்
    சில மனிதர்கள்.....

    உள்ளத்தை
    உருக்குலைத்த வரிகள்
    வேதனையின் தேர் ஏறி
    சோதனையின் சுழல் சொல்லிய
    சுயக்கவிதை

    ReplyDelete
  28. ஏன் பாஸ் திரட்டிகளில் இணைக்கலாமே???

    ReplyDelete
  29. எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.மேலும் விபரம் அரிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

    ReplyDelete
  30. சிரிக்கத்துணிந்த போது
    அதையும் மீறி வருகிறது
    சோதனைகள்.....

    இதை என் வாழ்வில் பல முறை அனுபவித்து இருக்கிறேன்

    ReplyDelete
  31. //யார் சரி ?
    யாரை நம்புவது ?
    எப்படிச்சொல்ல ?
    மனிதர்களையே புரியாத போது
    போடா மனிதாவென
    மனிதனை வெறுக்க வைக்கிறது காலம்//
    வலிகளை வார்த்தைகளில் வடித்துள்ளீர்கள்... அருமையான கவிதை

    ReplyDelete
  32. துன்பங்கள் இணையாத வாழ்க்கை
    என்றும் இல்லை....

    அருமையான வரிகள்

    நன்றி விடிவெள்ளி செம்பகம்

    ஜேகே

    ReplyDelete
  33. வாழ்க்கை குறித்த தங்கள் பதிவு அருமை
    சில மனிதர்களின் செயல்பாடுகளால்
    மனிதகுலத்தையே வெறுக்கிற
    அனைவருக்கும் எப்போதேனும் ஏற்படுகிற
    அதீத மனோபாவத்தையும்
    பின் அதையும் ஏற்றுக்கொண்டு தொடர்கிற
    வாழ்வுகுறித்தும் வாழ்வின்பால்
    கொள்ளுகின்ற சமரசம் குறித்தும்
    மிக அழகாக விளக்கிப் போகிறது உங்கள் கவிதை
    தங்கள்பதிவுடன் இணந்துகொள்வதில்
    பெருமிதம் கொள்கிறேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  34. வாழ்க்கையே ஒரு விசித்திரம் தான்...
    இன்பம் துன்பம் வெறுமை வெறுப்பு கண்ணீர் எல்லாம் கலந்த வாழ்க்கை மட்டும் இல்லாமல் இருந்தால் நாட்களும் வேகமாக நகர்ந்துவிடாது. ஒவ்வொரு அனுபவமும் ஒரு அட்வென்ச்சர் தான்... எல்லோருக்கும் எல்லாம் கிடைத்துவிடுவதில்லை. ஆனால் எல்லாவற்றையும் சமன் ஆக்கும் சக்தி அன்புக்கு மட்டுமே உண்டு வெறுப்பையும் விருப்பாக்கும் அற்புத சக்தி அன்புக்கு இருக்கும்போது வாழ்க்கையும் வாழ்ந்து பார்க்கும் இஷ்ட சங்கதி ஆகிவிடுகிறது...

    சலிப்பையும் வலிகளையும் தாங்கி சுகத்தையும் சாந்தியையும் தரும் வல்லமை அன்புக்கு இருப்பதால் தான் உலகமும் இயங்குகிறது அமைதியாக....

    வாழ்க்கை தத்துவங்களை இங்கே வரிகளாக படைத்திருப்பது மிக சிறப்பு செண்பகம்...

    அன்பு வாழ்த்துக்கள் அழகிய கவிதைக்கு.

    ReplyDelete
  35. வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனை இருக்கும். என்னும் வரிகளை இக்கவிதை நினைவுபடுத்துகின்றது. மனிதனை அறியும் கருவி ஒன்று இருந்திருந்தால் எப்படிச் சிறப்பாய் இருந்திருக்கும். விஞ்ஞானிகளுக்கு ஒரு விண்ணப்பம் கொடுப்போம். வரிகளுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  36. ஆமாங்க இன்ப துன்பங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை.

    ReplyDelete
  37. புலவர் சா இராமாநுசம் சொன்னது.
    தேடினேன் கிடைக்க வில்லை-ஆனால்
    திடீரென வந்து விட்டீர்
    பாடினேன் நன்றி தன்னை-நீர்
    பாராட்டி மகிழந்தீர் என்னை
    வாடினேன் உங்கள் கவிதை-மன
    வயலினில் சேக விதை
    நாடியே விதைத்தீர் நீங்கள்-என்றும்
    நலமுற வாழ்க வாழ்க


    !!ஐயா உங்கள் முதல் வருகைக்கும்,கருத்திற்கும் ,வாழ்த்திற்கும் எனது நன்றிகள்..

    ReplyDelete
  38. மதுரன் said...சொன்னது.
    வலிகளை வார்த்தைகளில் வடித்துள்ளீர்கள்... அருமையான கவிதை..


    நண்பா!!!! உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்..

    ReplyDelete
  39. "என் ராஜபாட்டை"- ராஜா said... சொன்னது.
    Super kavithai...


    நண்பா!!!! உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்..

    ReplyDelete
  40. A.R.ராஜகோபாலன் said...
    மனதின் குழப்பங்களை
    மனந்திறந்து பேச எத்தனிக்கையில்
    உள்ளத்தையே ஊனமாக்கும்
    சில மனிதர்கள்.....

    உள்ளத்தை
    உருக்குலைத்த வரிகள்
    வேதனையின் தேர் ஏறி
    சோதனையின் சுழல் சொல்லிய
    சுயக்கவிதை



    நண்பரே ஆழமாக ரசித்தீர்கள்....
    நன்றி

    உங்கள் முதல் வருகைக்கும்,கருத்திற்கும் எனது நன்றிகள்..

    ReplyDelete
  41. மைந்தன் சிவா said... சொன்னது.
    ஏன் பாஸ் திரட்டிகளில் இணைக்கலாமே???

    நண்பா பாஸ்திரட்டிஎன்றால் புரியவில்லை!!

    நண்பா!!!! உங்கள் வருகைக்கு நன்றிகள்..

    ReplyDelete
  42. உலக சினிமா ரசிகன் said...
    எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.மேலும் விபரம் அரிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.


    நண்பா இதோ வந்துகொண்டே இருக்கிறேன்!!

    ReplyDelete
  43. அசோக் குமார் said...சொன்னது.
    சிரிக்கத்துணிந்த போது
    அதையும் மீறி வருகிறது
    சோதனைகள்.....

    இதை என் வாழ்வில் பல முறை அனுபவித்து இருக்கிறேன்



    !!நண்பரே ஆழமாக ரசித்தீர்கள்....
    நன்றி!!
    உங்கள் முதல் வருகைக்கும்,கருத்திற்கும் எனது நன்றிகள்..

    ReplyDelete
  44. மாலதி said...
    //யார் சரி ?
    யாரை நம்புவது ?
    எப்படிச்சொல்ல ?
    மனிதர்களையே புரியாத போது
    போடா மனிதாவென
    மனிதனை வெறுக்க வைக்கிறது காலம்//
    வலிகளை வார்த்தைகளில் வடித்துள்ளீர்கள்... அருமையான கவிதை

    !!உங்கள் முதல் வருகைக்கும்,கருத்திற்கும் எனது நன்றிகள்..

    ReplyDelete
  45. இன்றைய கவிதை said...சொன்னது.
    துன்பங்கள் இணையாத வாழ்க்கை
    என்றும் இல்லை....

    அருமையான வரிகள்
    நன்றி விடிவெள்ளி செம்பகம்

    ஜேகே



    நண்பா!!!! உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்..

    ReplyDelete
  46. Ramani said...சொன்னது.
    வாழ்க்கை குறித்த தங்கள் பதிவு அருமை
    சில மனிதர்களின் செயல்பாடுகளால்
    மனிதகுலத்தையே வெறுக்கிற
    அனைவருக்கும் எப்போதேனும் ஏற்படுகிற
    அதீத மனோபாவத்தையும்
    பின் அதையும் ஏற்றுக்கொண்டு தொடர்கிற
    வாழ்வுகுறித்தும் வாழ்வின்பால்
    கொள்ளுகின்ற சமரசம் குறித்தும்
    மிக அழகாக விளக்கிப் போகிறது உங்கள் கவிதை
    தங்கள்பதிவுடன் இணந்துகொள்வதில்
    பெருமிதம் கொள்கிறேன்
    தொடர வாழ்த்துக்கள்


    சகோ/உங்கள் அருமையான கருத்திற்கும் ஊக்குவிப்பிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
    தொடர்ந்து எழுதுகிறேன்....
    தொடர்ந்து வாருங்கள்
    உங்களுக்காக காத்திருக்கும் என் கவிதைகள்!!

    ReplyDelete
  47. மஞ்சுபாஷிணி said....சொன்னது.
    வாழ்க்கையே ஒரு விசித்திரம் தான்...
    இன்பம் துன்பம் வெறுமை வெறுப்பு கண்ணீர் எல்லாம் கலந்த வாழ்க்கை மட்டும் இல்லாமல் இருந்தால் நாட்களும் வேகமாக நகர்ந்துவிடாது. ஒவ்வொரு அனுபவமும் ஒரு அட்வென்ச்சர் தான்... எல்லோருக்கும் எல்லாம் கிடைத்துவிடுவதில்லை. ஆனால் எல்லாவற்றையும் சமன் ஆக்கும் சக்தி அன்புக்கு மட்டுமே உண்டு வெறுப்பையும் விருப்பாக்கும் அற்புத சக்தி அன்புக்கு இருக்கும்போது வாழ்க்கையும் வாழ்ந்து பார்க்கும் இஷ்ட சங்கதி ஆகிவிடுகிறது...

    சலிப்பையும் வலிகளையும் தாங்கி சுகத்தையும் சாந்தியையும் தரும் வல்லமை அன்புக்கு இருப்பதால் தான் உலகமும் இயங்குகிறது அமைதியாக....

    வாழ்க்கை தத்துவங்களை இங்கே வரிகளாக படைத்திருப்பது மிக சிறப்பு செண்பகம்...

    அன்பு வாழ்த்துக்கள் அழகிய கவிதைக்கு.



    !!!அக்கா உங்கள் முதல் வருகைக்கும் ,நல்ல ஆழமான கருத்துக்களுக்கும், அன்பு வாழ்த்துக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
    தொடர்ந்து எழுதுகிறேன்....
    தொடர்ந்து வாருங்கள்
    காத்திருக்கும் என் கவிதைகள்!!

    ReplyDelete
  48. சந்திரகௌரி said....சொன்னது.
    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனை இருக்கும். என்னும் வரிகளை இக்கவிதை நினைவுபடுத்துகின்றது. மனிதனை அறியும் கருவி ஒன்று இருந்திருந்தால் எப்படிச் சிறப்பாய் இருந்திருக்கும். விஞ்ஞானிகளுக்கு ஒரு விண்ணப்பம் கொடுப்போம். வரிகளுக்கு வாழ்த்துகள்.


    !!அக்கா உங்கள் அருமையான கருத்திற்கும் வருகைக்கும் எனது நன்றிகள்.
    நீங்கள் கூறிய கருத்துப்படியே அடுத்த பகிர்வில் எழுத நினைத்தேன்..
    உங்களுக்கும் எனக்கும் ஏதோ ஈர்ப்பு இருக்கிறதோ????

    ReplyDelete
  49. கலாநேசன் said...சொன்னது.
    ஆமாங்க இன்ப துன்பங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை.

    நண்பா!!!! உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்..

    ReplyDelete
  50. ஏற்கனவே, எனது நெஞ்சம் கணத்து இருக்கிறது. தோழா... என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே.. எ்ன்று.. இறைவன் எனக்கும் ஏதேனும் ஒரு வழியில்.. அதிகாரத்தை அளித்திருந்தால்.. என்னுடைய எண்ணங்களுக்கு உயிர்கொடுத்து.. அனைவரையும் காத்திருப்பேன்.. என்ன செய்வேன்... நெஞ்சில் குமுறத்தான் முடிகிறதே தவிர சக்தி இல்லையே...

    ReplyDelete
  51. வாழ்க்கை என்றாலே அதில் துன்பம் இன்பம் இருக்கத்தானே செய்கிறது...என்ன செய்வது

    வாழ்கையின் பற்றிய உங்கள் ஒவ்வொரு வரிகளும் அருமையாக இருக்கிறது....

    அழைத்தவுடன் வந்து விட்டேன் நண்பா..!!!

    ReplyDelete
  52. மனதின் குழப்பங்களை
    மனந்திறந்து பேச எத்தனிக்கையில்
    உள்ளத்தையே ஊனமாக்கும்
    சில மனிதர்கள்.....

    அப்படிப்பட்ட மனிதர்களுக்கு நடுவே புரிதலுள்ள மனிதரும் இருக்கின்றார்கள்.. நண்பரே..

    ReplyDelete
  53. மனதின் குழப்பங்களை
    மனந்திறந்து பேச எத்தனிக்கையில்
    உள்ளத்தையே ஊனமாக்கும்
    சில மனிதர்கள்.....//

    மனித மனங்களின் உணர்வுகளை அற்புதமாகப் படம் பிடித்திருக்கிறீங்க.

    ReplyDelete
  54. முதல் வருகை இன்று தான் சகோ,
    கொஞ்சம் தமதமாக வந்து விட்டேன். //

    உங்களின் அழைப்பிற்கும், அன்பிற்கும் மனமார்ந்த நன்றி சகோ.

    ReplyDelete
  55. வாழ்க்கையின் நிகழும் திருப்பங்கள் அனைத்தையும் உணர்வு பூர்வமாய்ச் சொல்லி நிற்கிறது உங்களின் கவிதை.

    ReplyDelete
  56. //வலிக்காமலும்..............
    சலிக்காமலும்................
    வாழ்க்கை நகர்வதில்லை
    துன்பங்கள் இணையாத வாழ்க்கை
    என்றும் இல்லை//
    Very nice!

    ReplyDelete
  57. அருமையான கவிதை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  58. ஒவ்வொன்றும் ஜதார்த்தம் நிறைந்த வரிகள்.... நெஞ்சை சிதைப்பவை... தொடர்ந்தும் பதிவிடுங்கள்.. வாழ்த்துக்கள்....
    அன்பான அழைப்புக்கு நன்றி சகோதரா...

    ReplyDelete
  59. வாழ்க்கை நகரவில்லை. நிறைய பேருக்கு அது நகர்த்தப்படுகிறது.

    ReplyDelete
  60. கவிதை அருமை.....

    ReplyDelete
  61. வாழ்த்துகள் அருமையான கவிதை

    ReplyDelete
  62. டெம்ப்ளேட் படத்தில் இருப்பதை அனுபவித்தவர்களுக்கு இந்த கவிதை அனா கச்சிதமாய் பொருந்தும்
    அருமையாய் அனுபவித்து எழுதியுலீர்கள் வாழ்த்துக்கள் சகோ
    --

    ReplyDelete
  63. நிதர்சன உண்மைகளை தாங்கிய வரிகள் ..

    ReplyDelete
  64. //மனதின் குழப்பங்களை
    மனந்திறந்து பேச எத்தனிக்கையில்
    உள்ளத்தையே ஊனமாக்கும்
    சில மனிதர்கள்...//

    ...சரியா சொன்னிங்க. நல்லா இருக்குங்க உங்க கவிதை.

    ReplyDelete
  65. //அடுக்கடுக்காய் சம்பவிக்கும்
    துயரங்களில்
    வாழ்வே வேண்டாமென்ற
    ஏக்கங்கள் நடுவே
    திடீரென சிரிக்க வைக்கும்
    ஓர் மகிழ்வு...........//

    .... எவ்ளோ உண்மை தெரியுமா இந்த வரிகள்.. ரொம்ப நல்லா இருக்கு. நன்றி

    ReplyDelete
  66. உள்ளத்தையே ஊனமாக்கும்
    சில மனிதர்கள்.....

    சில மனிதர்கள் இல்லை பல மனிதர்கள்
    வேதனையை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்ற வரிகள்..

    ReplyDelete
  67. //வலிக்காமலும்..............
    சலிக்காமலும்................
    வாழ்க்கை நகர்வதில்லை
    துன்பங்கள் இணையாத வாழ்க்கை
    என்றும் இல்லை....//
    உண்மை!எல்லாமே இரட்டைகள்தான்;இன்பம்-துன்பம்,நன்மை-தீமை,இரவு- பகல்---இதுதான் வாழ்க்கை.
    நல்ல கவிதை.
    தொடர்வேன்!

    ReplyDelete
  68. நல்ல அருமையான கவிதை. ஆனால் ஒரு சின்ன வேண்டுகோள். உங்கள் பதிவை இன்ட்லி, தமிழ்மணம், தமிழ்10 போன்றவற்றில் இணைக்கவும். வாக்களிப்பதற்கு வசதியாக இருக்கும். முக்கியமாக ஒட்டு பட்டைகளை உங்கள் பதிவுகளில் இணைக்கவும்.

    ReplyDelete
  69. வலிக்காமலும்..............
    சலிக்காமலும்................
    வாழ்க்கை நகர்வதில்லை
    துன்பங்கள் இணையாத வாழ்க்கை
    என்றும் இல்லை....
    இதுவே விதியென்று
    வெளி மனதாய் முனகி விட்டு
    காலபெருவெளியின்
    நீள நெடுக்கில் நகர்கிறது
    வாழ்க்கை.....
    விதியத்து வீதியில் வீழ்கையில். . .கை நீட்ட கரங்கள் இல்லையெனில். . .விதியை என்னி மாத்திரமே நினைத்து நொந்துகொள்ள வேண்டும். . .

    ReplyDelete
  70. ////வாசல் முழுதும்
    நிறைந்து வழிகிறது
    வேதனைகள் ....////

    ஆமாம் மன வீட்டில் இடமே இல்லை...


    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    தொலைக்கப்பட்ட உயிர்களும் பிழைத்து நிற்கும் பிணங்களும்

    ReplyDelete
  71. Sundaramoorthi said...
    சௌந்தர் said...
    ரிஷபன் said...
    நிரூபன் said...
    ஜீ... said...
    கவி அழகன் said...
    உறவுகளே உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் எனது அன்பான நன்றிகள்..

    ReplyDelete
  72. பூங்கோதை said...
    பலே பிரபு said...
    நேசமுடன் ஹாசிம் said...
    Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
    அரசன் said...
    gokul said...

    உறவுகளே உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் எனது அன்பான நன்றிகள்..

    ReplyDelete
  73. சென்னை பித்தன் said...
    N.Manivannan said...
    N.H.பிரசாத் said...
    பிரணவன் said...
    ♔ம.தி.சுதா♔ said...
    உறவுகளே உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் எனது அன்பான நன்றிகள்..

    ReplyDelete
  74. நண்பர்களே ,உங்கள் வேண்டுகோள்களை இயன்றவரை முயற்சிக்கிறேன்...
    தொடர்ந்து வந்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்....
    அவைகள் தான் என்னை ஊக்கப்படுத்தும்...
    அன்பான நன்றியுடன் செம்பகம்..

    ReplyDelete
  75. இப்படி இப்படி
    வலிக்காமலும்..............
    சலிக்காமலும்................
    வாழ்க்கை நகர்வதில்லை
    துன்பங்கள் இணையாத வாழ்க்கை
    என்றும் இல்லை....சரியாகச் சொன்னீர்கள்.முயன்று வெல்லலாம். --Vetha. Elangathilakam.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete