11.8.10

மௌன வலி

ஊரை எழுப்பும்
சேவல் கோழிகளின்
எச்சரிக்கை ஒலி
ஊர் முழுதும் ஓயவில்லை.......


புகையும் அடுப்போடு
அம்மாவின் புறுபுறுப்பு
தடல் புரலாய் கேட்கும்
சமையல் அடுக்குகளின் சத்தம்......
இண்டைக்கு லீவோ பிள்ளைக்கு!
அப்பாவிடம் அம்மாவின் கேள்விகள்...???

அம்மாவிடம் எப்படிச்சொல்ல
சங்கடப்பட்டபடி மனசு...
தலையணை முழுதும்
உறிஞ்சப்பட்டு
படுக்கை மெத்தையை
நனைத்துக் கொண்டிருக்கிறது
ஈரம்....


மெது மெதுவான அனுகல்
வெளித்தெரியாத முனகல்
தலையணைக்கும் .......
படுக்கைக்கும் மட்டுமே -அதன்
பாசைகள் புரிந்துகொள்ளமுடிகிறது...


நீண்ட காலங்களாய்
காத்திருப்பின் ஏக்கம்...
மனசுக்குள் கட்டப்பட்ட
அழகிய தாஜ்மகால்
ஏழாண்டு காலமாய்
எவர்க்கும் தெரியாமல்
பூட்டி வைத்த
பதிரான காதல்........
எரிந்து சாம்பலாகுமென
எப்போதும் நினைத்ததில்லை


சந்திப்பின் இடைவெளிகள்
வருடக் கணக்குகளாய்...
தொடர்பு மட்டும்
தொலை பேசியில்...
உரையாடுகையில் உதிர்க்கும்
நம்பிக்கை மிகுந்த வார்த்தைகள்-அதனால்
புடம் போடப்பட்ட இதயம் -அத்தனையும்
போலி வார்த்தைகளென -அப்போது
அறிந்திருக்கவில்லை........


நிரந்தரமற்ற வாழ்க்கையில்
நிஜமாய் கிடைத்தவை
ஏமாற்றம் மட்டுந்தானா???
விழிகளில் பிரவகித்த
கண்ணீர் மழையை
எவர்க்கும் தெரியாமல்
துடைத்துக் கொள்கிறது
கரங்கள்........


SEMPAKAM

2 comments:

  1. நண்பா,
    காதல் வலி சொல்லி மாளாது.
    வலி நிறைந்த கவிதை.
    நீண்டா நாட்களுக்குப் பின் உங்கள் கவிதை வலி நிறைந்த வார்த்தைகளோடு...

    உங்கள் வலையின் படம் வலியுடன் வேதனையையும் அளிக்கிறது.

    தொடர்ந்து எழுதுங்கள்.

    http://www.vayalaan.blogspot.com

    ReplyDelete
  2. kumaar aNNaa thanks for your coments...
    i can't come to your saide...
    sorry......sorry....

    ReplyDelete