2.8.11

பிரிதலின் தாக்கம்..!!!

நீ என்னை நேசிக்காவிட்டாலும்
நான் உன்னை யாசிக்கிறேன்...
ஏனெனில் !!
என் ஜீவன்- இன்றும்
உன்னாலே சுவாசிக்கின்றது...

மண்ணுக்குள் உக்கி
மறைந்து போயிருப்பேன் -என்
மரணத்தை நீவந்து
மறிக்காவிட்டால்..!!

எண்ணத்துள் ஏதேதோ
எழுகிறது என்னுள்....
வெளியில் சொல்ல
வழியில்லை இப்போ..!!
ஏனெனில் !!
நிறைந்து கிடந்த அன்பை
நிரந்தரமாய் பொசுக்கிவிட்டாய்...

நொடிக்கு ஒருதடவையும்
துடிக்கும் உன் இதயம்..
எப்போ எனைக்காண்பாயென..!!
அடிக்கு ஒரு அடியாய்
இடிக்கும் உன் நினைவு
எப்போ உனை பார்ப்பேனென!!
சந்தித்த பின்னே
சத்தமின்றி இருக்கும்
இதயங்கள் இரண்டும்..

உலகமே எமைப்பார்த்து
வியந்ததுண்டு..
எங்கள் அன்பின் ஆழத்தை..!!
எல்லாமே சாம்பலாக்கியது
உன் மாற்றங்களே...

சின்னச் சின்ன குறும்புகள்
சின்ன வயதில் செய்தபோது
துணைக்கு வாவென
தூரனின்று எனை அழைப்பாய்

கெற்றப்போல் நீ எடுத்தால்
கல் பொறுக்குவது நான்
குரங்குக்கு நீ அடித்தால்
கை தட்டுவது நான்..
கள்ளக் களவாய்
படலையில் நிற்கும்
பசன் பிளஸை
சத்தமின்றித் தள்ள
சக்தியில்லா உனக்கு
கரம் கொடுப்பதும் நான் தானே..
நீ என்னை அடித்தாலும்
அடுத்தகணமே உன் பின் தானே
வால்பிடிப்பேன்....
எல்லாமே மறந்ததாய்தான்
இப்போ நீ நடக்கிறாய்..

நீ என்னை
புறக்கணிக்கும் தருணங்களில்
நொருங்கிப் போகிறது
நொடிப்பொழுதில் என் இதயம்..!
உனக்கு அவை புரிவதில்லை!

ஒற்றை மரமாய்
காவிவந்த என்னை
காரணங்கள் எதுவானாலும்
கடைசி வரையும்
மாற்றியிருக்க கூடாது உன்னை..
இருவரிலும் ஓடுவது
இரத்தம் ஒன்றே என்பதால்....!!!!

காலம் எமைப்பிரிக்கவில்லை
மாற்றியதும் மாறியதும் நீயாய்...
சக்தியற்ற ஜீவனாய்- அத்தனையும்
சகித்துக்கொண்டு வாழ்கிறேன்...

என் அன்பை உன்னுள்
ஆழப்பதிய விட்டதால்-அந்த
அழிக்கப்பட்ட வேரை எண்ணி
அணுவணுவாய் வேகி
அந்தரித்துக்கொண்டிருக்கிறது
ஒற்றை ஆன்மா...!!!
அவை உனக்கு மட்டும்
புரியாததாய் நடக்கிறாய்..
ஏனெனில் அது நானாகிவிட்டேன்
என்பதாலோ ????
ஏறெடுத்தும் பார்க்கிறாய் இல்லை !!!!!


நீ புரிந்தவைகளை மறக்க
ஜடம் அல்ல நான்-அதை
 நன்றி என்று உரைக்க
யாருமில்லை நீ..
ஆனால் எல்லாமே நீயாக
நினைக்கிறது என் மனசு

எதைக்கண்டாலும்...
எவரை பற்றினாலும்..
பத்திரமாய் பூட்டிவைத்திருப்பேன்
உன் அன்பை என்றும் என்னுள்..
அதை நீக்கி விடேன் ஒரு போதும்..


பிரிதலின் தகிப்பால்
கொதிக்கும் என் மனச்சூடு
காயங்கள் பட -  சொல்
சன்னங்கள் இருந்தால்
ஆறிவிடும் வெகு விரைவில்..

மன்னிப்பாயாக!!!!


செம்பகம்..


உறவுகளே ! இக்கவிதை படத்தைப் பார்த்ததும் யாவும் கற்பனையாக இவ்வுலகினில் நிகழும் யதார்த்தத்தை வரிகளாக்கினேன்...

31 comments:

 1. அன்பின் (பிரிவை)வலியை நெகிழ்வான வரிகளில் கூறிய உங்களுக்கு வாழ்த்துக்கள் .
  உணரும் காலம் வரும் ...

  ReplyDelete
 2. புகைப்படமும், பாசக் கவிதையும் அழகோடு, அனபின் மாண்பை சொன்னது.

  ReplyDelete
 3. //எண்ணத்துள் ஏதேதோ
  எழுகிறது என்னுள்....
  வெளியில் சொல்ல
  வழியில்லை இப்போ..!!//
  நன்றாக சொல்லியிருக்கிறீர்கள் அன்பின் வெளிப்பாட்டை

  ReplyDelete
 4. காலம் எமைப்பிரிக்கவில்லை
  மாற்றியதும் மாறியதும் நீயாய்... அருமையான வரிகள். . .பிரிவின் ஏக்கத்தையும், அதன் துயரத்தையும் அழகாய் சொல்லி இருக்கின்றீர்கள். . .

  ReplyDelete
 5. அழகிய பாச வரிகள்.
  அருமையான கவிதை
  மனம் நெகிழ்கிறது படித்தவுடன்.

  ReplyDelete
 6. பாசத்துடன் கூடிய கவிதை .

  பகிர்வுக்கு நன்றி சகோ..

  ReplyDelete
 7. Kavithai Alagu...
  padamum super.

  ReplyDelete
 8. //நீ என்னை
  புறக்கணிக்கும் தருணங்களில்
  நொருங்கிப் போகிறது
  நொடிப்பொழுதில் என் இதயம்..!
  உனக்கு அவை புரிவதில்லை!

  காரணங்கள் எதுவானாலும்
  கடைசி வரையும்
  மாற்றியிருக்க கூடாது உன்னை..//

  கவிதையின் வரிகளில் நேசம் நெகிழ்கிறது... பாசம் தவழ்கிறது... பகிர்வுக்கு பாராட்டுக்கள் சகோ

  ReplyDelete
 9. மிகவும் அழகான கவிதை. பாசம் இருவரிடமும் தங்காமல் ஒருவரிடமே தேங்கிவிடுவதால் ஏற்படும் பிரச்சனை இது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. பாசம் வாட்டுகிறது

  ReplyDelete
 11. உங்கள் அண்ணாவுக்கு சொன்ன கவி போல. அவர் பக்கம் என்ன நியாயமோ ?
  அன்பின் ஆழத்தை அழகாய் புரிய வைக்கிறது கவிதை.
  சம்பந்தப்பட்டவர் படித்தால் கண்டிப்பாய் உணர்வார்கள்

  ReplyDelete
 12. ஆழமான கவிதை...தொப்பி யாருக்கோ!

  ReplyDelete
 13. அருமையான பாசத்தின் வெளிப்பாடு!

  ReplyDelete
 14. ரொம்ப அழகான பாசத்தை வெளிப்படுத்தும் கவிதை..

  ReplyDelete
 15. படம் உணர்வோடு பாசத்தை வெளிப்படுத்துகிறது.கவிதை வரிகள் படத்துக்குப் போட்டி போடுகிறது செண்பகம் !

  ReplyDelete
 16. இன்றைய வலைச்சரத்தில் தங்களை
  அறிமுகப் படுத்த கிடைத்த வாய்ப்பை
  ஒரு நல்வாய்ப்பாகக் கருதுகிறேன்
  தங்கள் பதிவுலகப் பணி தொடர்ந்து சிறக்க
  மனப் பூர்வமான வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. அருமையான கவிதை.
  மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. மனசக் குடையுதே! சூப்பர்!

  ReplyDelete
 19. சகோதர உறவினில் விழுந்த விரிசலைக்கூட கண்ணீர் துளிகளால் ஒட்டி இங்கே அன்பை கரைத்து வரைந்த வரிகள் பிரம்மாண்டமாய் பறைசாற்றுகிறது அன்பின் விளக்கத்தை.....

  அன்பு வாழ்த்துகள் செண்பகம்.... பிரிந்த அன்பு ஒன்று சேர்ந்து சகோதர உறவு நிலைக்கட்டும் என்றும் இதே அன்புடன்...

  ReplyDelete
 20. சந்தித்த பின்னே
  சத்தமின்றி இருக்கும்
  இதயங்கள் இரண்டும்..//

  செம்பகமாய் மணக்கும் யதார்த்த கவிதை.

  ReplyDelete
 21. //பற்றினாய் ஓர் கரத்தை
  பரிதவிக்க விட்டுவிட்டாய்
  எம் பாசத்தை..!//
  இந்த வரியில் அத்தனை வலியும் புரிகிறது செண்பகா .
  உங்களின் எல்லா கவிதைகளையும் உடனே வந்து வாசித்திடுவேன்,சில நேரம் பின்னூட்டம் இட முடியாத வேதனையுடன் போய் விடுவேன் .
  கவிதை நல்லா இருக்கு .
  ஊரிலிருந்து திரும்பியதும் மீண்டும் சந்திப்போம் .

  ReplyDelete
 22. அருமையான கவிதை. It is very nice.

  ReplyDelete
 23. //என்
  மரணத்தை நீவந்து
  மறிக்காவிட்டால்..!!//
  பாசம் மிகுந்த வரிகள்.

  ReplyDelete
 24. ''...என்னை
  புறக்கணிக்கும் தருணங்களில்
  நொருங்கிப் போகிறது
  நொடிப்பொழுதில் என் இதயம்..!
  உனக்கு அவை புரிவதில்லை!...'' so many paasangal like this in the world....
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 25. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
 26. ///மிகவும் அழகான கவிதை. பாசம் இருவரிடமும் தங்காமல் ஒருவரிடமே தேங்கிவிடுவதால் ஏற்படும் பிரச்சனை இது. ///

  repeat...
  nice one
  (sorry.. NHM Writer not working)

  ReplyDelete
 27. // காரணங்கள் எதுவானாலும்
  கடைசி வரையும்
  மாற்றியிருக்க கூடாது //

  மனதின் எதிர்பார்பும், ஏக்கமும் வெளிப்படடும் எளிய, உன்னத வரிகள்
  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 28. வரிக்கு வரி ரசித்தேன்.... கவிதையில் உயிர் !!!

  ReplyDelete
 29. உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும்

  http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_4769.html

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 30. அன்புடையீர்! வணக்கம்!
  அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (01/07/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
  இணைப்பு: http://gopu1949.blogspot.in/

  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  FRANCE

  ReplyDelete
 31. திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தங்களை அவருடைய தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். தங்களது களம் கண்டேன். வாழ்த்துக்கள்.
  http://drbjambulingam.blogspot.com/
  http://ponnibuddha.blogspot.com/

  ReplyDelete