20.4.10

மனிதா நீ மாறவேண்டும்.....!பிறப்பிற்கும் இறப்பிற்குமான
இடைவெளி வாழ்க்கை-அந்த
நீரோட்ட நீட்சிக்குள்
இன்பம்,துன்பம்.........
உயர்வு,தாழ்வு.....
மாறி மாறி நகர்கிறது-மனித
வாழ்க்கைப் பயணம்

மனிதர்கள் பலவிதம்-அவர்
வாழ்க்கை ஒருவிதம்-அதில்
காணும் மாற்றங்கள்
ஏராளமே............

தீயவன் நல்லவனாகலாம்
நல்லலவன் கெட்டவனாகலாம்
ஏழைகள் செல்வந்தராகலாம்
அறிவற்றவர் அறிவாளியாகலாம்
அறிவாளி அறிவற்றவராகலாம்
அழகற்றவர் அழகானவராகலாம்
அழகானவர் அழகற்றவராகலாம்


இப்படியே ...........
மாற்றங்கள் வந்து போகலாம்
மாரியும் கோடையும்
மாறி வரினும் சூரியன் தேய்வதில்லை

ஆனால்..............!
அன்பு வைத்தவர்
அன்பற்று நடக்கையிலே
கல்மனமெனிலும் கசியத்தான் செய்யும்
பாசம் என்பது வேசம் அல்ல
அன்பு என்பது கேட்டுப் பெறுவது அல்ல
பணமோ,பொருளோ கொடுத்தால்
அங்கேதான் அன்புஇருப்பது என்றில்லை.....
இயல்பாக எழும் மனித உணர்வுக்குள்
ஊற்றெடுப்பதே அன்பு.......

அன்பு இருந்தால் வெறுப்பு எதற்கு...???
மனிதர்களே ........
புதியன புகுதலும் பழையன கழிதலும்-இவை
அன்பிற்கு அர்த்தம் அற்றது
அன்புகொண்டவரை கலங்கவைக்காதே
மனிதா மாற்றிடு......

செம்பகம்

8 comments:

 1. உண்மைதான், அன்பானவர்கள் நம்மிடம்
  கடிந்து கொண்டால் நம் மணம் புண்படும்.

  ReplyDelete
 2. :)

  நல்லா இருக்குங்க முயற்சி

  ReplyDelete
 3. கவிதை நன்றாக இருந்தது.

  ReplyDelete
 4. எதார்த்த வார்த்தைகளில் எழில் கவிதை...அருமை...

  ReplyDelete
 5. வாழ்வின் யதார்த்தம் தோழி.

  ReplyDelete
 6. சில நாட்கள் ஓய்விற்குப் பிறகு மீண்டும் கவியுடன்..
  அருமையான வரிகள்.
  அதிகம் விரும்பும் நபர் நம்மிடம் கோபம் கொண்டால் கண்டிப்பாக நம்மால் நிலைகொள்ள இயலாது.

  ReplyDelete
 7. thank fou your coments......

  ReplyDelete