18.3.10

வரையறுப்பு.......
சுழல்கின்ற பூமி.......

உதிக்கின்ற இரவி...
சந்திரன் வருகை ......
குளிர்விக்கும் காற்று....
ஓடும் மேகம்....
பொங்கும் கடல்...-எல்லாமே
யுகங்கள் கடந்தாலும்
நிஜமாய் தொடரும்

உயிரே உன் வாழ்வு
ஆயுளின் வரையறுப்பு
கடிகார முட்கள் -உன்
இதயத்துடிப்பு-இது
காலத்தின் கணிப்பு-அவை
வாழும் காலத்தின் கழிப்பு
கடக்கின்ற நிமிடங்கள்
கிடைக்காது உனக்கு

இறப்பின் பின்னும்
உலகில் நீ வாழவேண்டும்
உழைத்திட முயன்று
உயர்ந்திட நினைத்திடு
பிறருக்கு உதவி
அயலானை நேசித்திடு
துன்பத்தில் தோள்கொடுத்து
இன்பத்தில் மகிழ்ந்திடு

உனக்கான காலம்
நகர்கிறது நீ அறிவாய்
கடிகாரத்தை கட்டி வைக்கலாம்
சுற்றும் பூமியை தடுத்திட
முடியுமா????
காலத்தை கணக்கிட தவறாதே..-அவை
வாழ்க்கையின் வரையறுப்பு....!!!!!


செம்பகம்

17 comments:

 1. காலத்தின் மதிப்பை அழகாய் சொல்லி விட்டீர்கள்.

  ReplyDelete
 2. நல்ல முயற்சி !

  இன்னும் முயலலாம் :)

  ReplyDelete
 3. கவிதை சுழல்கிறது கால
  கடிகாரம் கட்டி கொண்டு...
  அருமை வாழ்த்துகள் ...

  ReplyDelete
 4. அருமை வாழ்த்துகள் ...

  ReplyDelete
 5. உண்மைதான்.போனால் திரும்பக் கிடைக்காதது காலம்
  நன்றாகச் சொன்னீர்கள்

  ReplyDelete
 6. எனது மனசு தளத்தில் உங்கள் பற்றி எனது மனசின் பிரதிபலிப்பு.

  படிக்க இதை கிளிக்கவும். http://vayalaan.blogspot.com/2010/03/blog-post_19.html


  மனதில் உள்ளதை பின்னூட்டமாகவும் மனதை ஓட்டுக்களாகவும் அளிக்க மறக்காதீர்கள்.

  நட்புடன்,

  சே.குமார்.

  ReplyDelete
 7. உனக்கான காலம்
  நகர்கிறது நீ அறிவாய்
  கடிகாரத்தை கட்டி வைக்கலாம்
  சுற்றும் பூமியை தடுத்திட
  முடியுமா????//

  மனதைத்தொட்ட வரிகள் விடிவெள்ளி

  ReplyDelete
 8. //உனக்கான காலம்
  நகர்கிறது நீ அறிவாய்
  கடிகாரத்தை கட்டி வைக்கலாம்
  சுற்றும் பூமியை தடுத்திட
  முடியுமா????//

  அருமையான வரிகள்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. சூப்பர் சூப்பர்.. அழகான அருமையான வரிகள்..

  ReplyDelete
 10. சைவகொத்துப்பரோட்டா அவர்களே
  உங்கள் கருத்திற்கும், ஊக்குவிப்பிற்கும்,வருகைக்கும் எனது நன்றிகள்....

  ReplyDelete
 11. Sivaji Sankarஅவர்களே
  உங்கள் வருகைக்கு எனது நன்றிகள்....

  ReplyDelete
 12. நேசமித்ரன்அவர்களே உங்கள் கருத்திற்கும், ஊக்குவிப்பிற்கும்,வருகைக்கும் எனது நன்றிகள்....

  ReplyDelete
 13. seemanganiஅவர்களே....
  கண்மணி/kanmani அவர்களே உங்கள் கருத்திற்கும், ஊக்குவிப்பிற்கும்,வருகைக்கும் எனது நன்றிகள்....

  ReplyDelete
 14. thenammailakshmanan அவர்களே
  உங்கள் கருத்திற்கும், ஊக்குவிப்பிற்கும்,வருகைக்கும் எனது நன்றிகள்....

  ReplyDelete
 15. எனது கிறுக்கல்கள் அவர்களே......
  நீங்கள் எனது தளத்திற்கு புதியவர்...
  உங்கள் முதல் வருகைக்கும் நன்றி....
  உங்கள் கருத்திற்கும் எனது நன்றிகள்...

  ReplyDelete
 16. அன்புடன் மலிக்கா அவர்களே......
  உங்கள் கருத்திற்கும், ஊக்குவிப்பிற்கும்,வருகைக்கும் எனது நன்றிகள்....

  ReplyDelete