23.2.10

மனம் வேண்டும்

 

மனசின் பாரங்களை

மறைக்காமல் கொட்டிட
மனசிற்குப் பிடித்த
மனம் வேண்டும்.....

சோகங்கள் ஆயிரம் சூழ்ந்து
உடலை சுமையாக்கிக் கொள்கையில்
தேற்றிட........
மனசிற்குப் பிடித்த
மனம் வேண்டும்

ஏக்கங்கள் நெஞ்சில்
ஏராளம் இருக்கையில்
ஆற்றிட......... .
மனசிற்குப்பிடித்த
மனம் வேண்டும்

மனம் விட்டு பேசிட
மனமின்றித்தவிக்கிறேன்
கட்டி வைத்திருக்கும்
கண்ணீரை விட்டு
சொல்லி அழுதிட
எனக்குப் பிடித்த
மனம் வேண்டும்


இறைவா..........
எதுவரைகும் தான்
இந்தத் தனிமை...??


செம்பகம்

No comments:

Post a Comment